Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௧௫

Qur'an Surah Fussilat Verse 15

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً ۗ اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِيْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً ۗ وَكَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ (فصلت : ٤١)

fa-ammā ʿādun
فَأَمَّا عَادٌ
Then as for Aad
ஆக, ஆது சமுதாயம்
fa-is'takbarū
فَٱسْتَكْبَرُوا۟
they were arrogant
பெருமை அடித்தனர்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
bighayri l-ḥaqi
بِغَيْرِ ٱلْحَقِّ
without [the] right
அநியாயமாக
waqālū
وَقَالُوا۟
and they said
இன்னும் கூறினார்கள்
man ashaddu
مَنْ أَشَدُّ
"Who (is) mightier
யார்/மிக பலசாலி(கள்)
minnā
مِنَّا
than us
எங்களை விட
quwwatan
قُوَّةًۖ
(in) strength?"
வலிமையால்
awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
Do not they see
இவர்கள் கவனிக்கவில்லையா?
anna
أَنَّ
that
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
alladhī khalaqahum
ٱلَّذِى خَلَقَهُمْ
the One Who created them
எவன்/படைத்தான்/அவர்களை
huwa
هُوَ
He
அவன்
ashaddu
أَشَدُّ
(is) Mightier
மிக பலசாலி
min'hum
مِنْهُمْ
than them
அவர்களை விட
quwwatan
قُوَّةًۖ
(in) strength?
வலிமையால்
wakānū
وَكَانُوا۟
But they used (to)
அவர்கள் இருந்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
in Our Signs
நமது வசனங்களை
yajḥadūna
يَجْحَدُونَ
deny
மறுப்பவர்களாக

Transliteration:

Fa ammaa 'Aadun fastak baroo fil ardi bighairul haqqi wa qaaloo man ashaddu minnaa quwwatan awalam yaraw annal laahal lazee khalaqahum Huwa ashaddu minhum quwwatanw wa kaanoo bi Aayaatinaa yajhadoon (QS. Fuṣṣilat:15)

English Sahih International:

As for Aad, they were arrogant upon the earth without right and said, "Who is greater than us in strength?" Did they not consider that Allah who created them was greater than them in strength? But they were rejecting Our signs. (QS. Fussilat, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

ஆது என்னும் மக்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமைகொண்டு, எங்களைவிட பலசாலி யாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்தவன் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? (எனினும்,) அவர்கள் நம்முடைய (இத்தகைய) அத்தாட்சிகளையும் தர்க்கித்து நிராகரித்துக்கொண்டே இருந்தார்கள். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௧௫)

Jan Trust Foundation

அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, ஆது சமுதாயம் பூமியில் அநியாயமாக பெருமை அடித்தனர். “எங்களை விட வலிமையால் மிக பலசாலிகள் யார்” என்று கூறினார்கள். நிச்சயமாக அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட வலிமையால் மிக பலசாலியாவான் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா? அவர்கள் நமது வசனங்களை மறுப்பவர்களாக இருந்தனர்.