Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௧௪

Qur'an Surah Fussilat Verse 14

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ جَاۤءَتْهُمُ الرُّسُلُ مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ اَلَّا تَعْبُدُوْٓا اِلَّا اللّٰهَ ۗقَالُوْا لَوْ شَاۤءَ رَبُّنَا لَاَنْزَلَ مَلٰۤىِٕكَةً فَاِنَّا بِمَآ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ (فصلت : ٤١)

idh jāathumu l-rusulu
إِذْ جَآءَتْهُمُ ٱلرُّسُلُ
When came to them the Messengers
அவர்களிடம் வந்தபோது/தூதர்கள்
min bayni aydīhim
مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ
from before them from before them from before them
அவர்களுக்கு முன்னிருந்து(ம்)
wamin khalfihim
وَمِنْ خَلْفِهِمْ
and from behind them
இன்னும் அவர்களுக்குப் பின்னிருந்து
allā taʿbudū
أَلَّا تَعْبُدُوٓا۟
(saying) Do not worship
வணங்காதீர்கள்
illā
إِلَّا
but
தவிர
l-laha
ٱللَّهَۖ
Allah"
அல்லாஹ்வை
qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினார்கள்
law shāa
لَوْ شَآءَ
"If (had) willed
நாடியிருந்தால்
rabbunā
رَبُّنَا
our Lord
எங்கள் இறைவன்
la-anzala
لَأَنزَلَ
surely, He (would have) sent down
இறக்கி இருப்பான்
malāikatan
مَلَٰٓئِكَةً
Angels
வானவர்களை
fa-innā
فَإِنَّا
So indeed, we
நிச்சயமாக நாங்கள்
bimā ur'sil'tum
بِمَآ أُرْسِلْتُم
in what you have been sent
எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ
bihi
بِهِۦ
with
அதை
kāfirūna
كَٰفِرُونَ
(are) disbelievers"
நிராகரிப்பவர்கள்தான்

Transliteration:

Iz jaaa'at humur Rusulu mim baini aydeehim wa min khalfihim allaa ta'budooo illal laaha qaaloo law shaaa'a Rabunaa la anzala malaaa 'ikatan fa innaa bimaaa ursiltum bihee kaafiroon (QS. Fuṣṣilat:14)

English Sahih International:

[That occurred] when the messengers had come to them before them and after them, [saying], "Worship not except Allah." They said, "If our Lord had willed, He would have sent down the angels, so indeed we, in that with which you have been sent, are disbelievers." (QS. Fussilat, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

அவர்களிடத்தில் நம்முடைய தூதர்களில் பலர் அவர்களுக்கு முன்னும் பின்னுமாக வந்து, (அவர்களை நோக்கி) "அல்லாஹ்வைத் தவிர மற்ற எதனையும் வணங்காதீர்கள்" என்று கூறியதற்கு அவர்கள், "எங்கள் இறைவன் (மெய்யாகவே எங்களுக்கு யாதொரு தூதரை அனுப்ப) விரும்பியிருந்தால், மலக்குகளையே (தூதராக) இறக்கி வைத்திருப்பான். ஆகவே, நிச்சயமாக நாங்கள், நீங்கள் கொண்டு வந்த (தூ)தை நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௧௪)

Jan Trust Foundation

“அல்லாஹ்வையன்றி (வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்” என்று அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர்களிடம் தூதர்கள் வந்த போது| “எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான், நீங்கள் எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்” என்று சொன்னார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களிடம் தூதர்கள் அவர்களுக்கு முன்னிருந்தும் அவர்களுக்கு பின்னிருந்தும், “அல்லாஹ்வைத் தவிர யாரையும் எதையும் வணங்காதீர்கள் என்று (கூறியவர்களாக) வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் (எங்களை நேர்வழிபடுத்த) வானவர்களை இறக்கி இருப்பான். ஆகவே, நீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்கள்தான்.”