குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௧௦
Qur'an Surah Fussilat Verse 10
ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَجَعَلَ فِيْهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبٰرَكَ فِيْهَا وَقَدَّرَ فِيْهَآ اَقْوَاتَهَا فِيْٓ اَرْبَعَةِ اَيَّامٍۗ سَوَاۤءً لِّلسَّاۤىِٕلِيْنَ (فصلت : ٤١)
- wajaʿala
- وَجَعَلَ
- And He placed
- இன்னும் ஏற்படுத்தினான்
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- rawāsiya
- رَوَٰسِىَ
- firmly-set mountains
- மலைகளை
- min fawqihā
- مِن فَوْقِهَا
- above it above it
- அதற்கு மேலாக
- wabāraka
- وَبَٰرَكَ
- and He blessed
- இன்னும் அருள்வளம் புரிந்தான்
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- waqaddara
- وَقَدَّرَ
- and determined
- இன்னும் திட்டமிட்டு நிர்ணயித்தான்
- fīhā
- فِيهَآ
- therein
- அதில்
- aqwātahā
- أَقْوَٰتَهَا
- its sustenance
- அதன் உணவுகளை
- fī arbaʿati
- فِىٓ أَرْبَعَةِ
- in four
- நான்கு
- ayyāmin
- أَيَّامٍ
- periods
- நாள்களில்
- sawāan
- سَوَآءً
- equal
- சரியான பதிலாக
- lilssāilīna
- لِّلسَّآئِلِينَ
- for those who ask
- விசாரிப்பவர்களுக்கு
Transliteration:
Wa ja'ala feehaa rawaa siya min fawqihaa wa baaraka feehaa wa qaddara feehaaaa aqwaatahaa feee arba'ati ayyaamin sawaaa'al lissaaa'ileen(QS. Fuṣṣilat:10)
English Sahih International:
And He placed on it [i.e., the earth] firmly set mountains over its surface, and He blessed it and determined therein its [creatures'] sustenance in four days without distinction – for [the information of] those who ask. (QS. Fussilat, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
அவனே பூமியின் மீது பெரும் மலைகளை அமைத்து, அதில் எல்லா விதமான பாக்கியங்களையும் புரிந்தான். அன்றி, அதில் (வசிப்பவர்களுக்கு) வேண்டிய உணவையும் நான்கு நாள்களில் நிர்ணயம் செய்தான். (அதுவும் நல்லவர்கள் தீயவர்கள் என்ற வித்தியாசமின்றி) கேட்பவர்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்குமாறும் செய்தான். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௧௦)
Jan Trust Foundation
அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் அதில் அதற்கு மேலாக மலைகளை ஏற்படுத்தினான். அதில் அருள்வளம் புரிந்தான். அதில் அதன் உணவுகளை திட்டமிட்டு நிர்ணயித்தான். (இவை எல்லாம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய பூரணமான) நான்கு நாள்களில் முடிந்தன. (பூமியையும் அதில் உள்ள படைப்புகளைப் பற்றியும்) விசாரிப்பவர்களுக்கு சரியான பதிலாக (இதைச் சொல்லுங்கள்).