Skip to content

ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா - Page: 6

Fussilat

(Fuṣṣilat)

௫௧

وَاِذَآ اَنْعَمْنَا عَلَى الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖۚ وَاِذَا مَسَّهُ الشَّرُّ فَذُوْ دُعَاۤءٍ عَرِيْضٍ ٥١

wa-idhā anʿamnā
وَإِذَآ أَنْعَمْنَا
நாம் அருள் புரிந்தால்
ʿalā l-insāni
عَلَى ٱلْإِنسَٰنِ
மனிதன் மீது
aʿraḍa
أَعْرَضَ
புறக்கணித்து செல்கிறான்
wanaā bijānibihi
وَنَـَٔا بِجَانِبِهِۦ
தூரமாகி விடுகிறான்
wa-idhā massahu
وَإِذَا مَسَّهُ
இன்னும் அவனுக்குநிகழ்ந்தால்
l-sharu
ٱلشَّرُّ
தீங்கு
fadhū duʿāin
فَذُو دُعَآءٍ
பிரார்த்தனை உடையவனாக
ʿarīḍin
عَرِيضٍ
மிக அதிகமான
மனிதனுக்கு நாம் (யாதொரு) அருள் புரிந்தால், அவன் (நமக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக) நம்மை(யும் நம்முடைய கட்டளைகளையும்) புறக்கணித்து நம்மிலிருந்தும் விலகி விடுகின்றான். அவனை யாதொரு தீங்கு தொடர்ந்தாலோ, வெகு அகல நீளமான பிரார்த்தனை செய்(து அதனை நீக்குமாறு நம்மிடம் கோரு)கின்றான். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௫௧)
Tafseer
௫௨

قُلْ اَرَءَيْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ ثُمَّ كَفَرْتُمْ بِهٖ مَنْ اَضَلُّ مِمَّنْ هُوَ فِيْ شِقَاقٍۢ بَعِيْدٍ ٥٢

qul
قُلْ
கூறுவீராக!
ara-aytum
أَرَءَيْتُمْ
நீங்கள் அறிவியுங்கள்
in kāna
إِن كَانَ
இருந்தால்
min ʿindi l-lahi
مِنْ عِندِ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
thumma
ثُمَّ
பிறகு
kafartum
كَفَرْتُم
நீங்கள் நிராகரித்து விட்டால்
bihi man
بِهِۦ مَنْ
அதை/யார்?
aḍallu
أَضَلُّ
மிகப் பெரிய வழிகேடன்
mimman
مِمَّنْ
ஒருவனைவிட
huwa
هُوَ
அவன்
fī shiqāqin
فِى شِقَاقٍۭ
முரண்பாட்டில்
baʿīdin
بَعِيدٍ
வெகு தூரமான
"(இவ்வேதம் உண்மையாகவே) அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும், அதனை நீங்கள் நிராகரித்துவிட்டால் (அதற்குக்) கடினமான விரோதத்திலிருக்கும் உங்களைவிட வெகுதூரமான வழிகேட்டிலிருப்பவர்கள் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?" என்று (நபியே!) நீங்கள் (அவர்களைக்) கேளுங்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௫௨)
Tafseer
௫௩

سَنُرِيْهِمْ اٰيٰتِنَا فِى الْاٰفَاقِ وَفِيْٓ اَنْفُسِهِمْ حَتّٰى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقُّۗ اَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ ٥٣

sanurīhim
سَنُرِيهِمْ
விரைவில் அவர்களுக்கு நாம் காண்பிப்போம்
āyātinā
ءَايَٰتِنَا
நமது அத்தாட்சிகளை
fī l-āfāqi
فِى ٱلْءَافَاقِ
பல பகுதிகளிலும்
wafī anfusihim
وَفِىٓ أَنفُسِهِمْ
அவர்களிலும்
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
yatabayyana
يَتَبَيَّنَ
தெளிவாகிவிடும்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
annahu
أَنَّهُ
நிச்சயமாக இதுதான்
l-ḥaqu
ٱلْحَقُّۗ
உண்மை
awalam yakfi
أَوَلَمْ يَكْفِ
போதாதா?
birabbika
بِرَبِّكَ
உமது இறைவனுக்கு
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக தான்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
shahīdun
شَهِيدٌ
நன்கு பார்ப்பவனாக
நிச்சயமாக இவ்வேதம் உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு, நம்முடைய அத்தாட்சி களை (உலகத்தின்) பல பாகங்களிலும் காண்பிப்பதுடன், அவர்களுக்குள்ளாகவும் அதிசீக்கிரத்தில் நாம் (அத்தாட்சிகளைக்) காண்பிப்போம். (நபியே!) உங்கள் இறைவன் நிச்சயமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது (உங்களுக்கு) போதாதா? ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௫௩)
Tafseer
௫௪

اَلَآ اِنَّهُمْ فِيْ مِرْيَةٍ مِّنْ لِّقَاۤءِ رَبِّهِمْ ۗ اَلَآ اِنَّهٗ بِكُلِّ شَيْءٍ مُّحِيْطٌ ࣖ ٥٤

alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
fī mir'yatin
فِى مِرْيَةٍ
சந்தேகத்தில் இருக்கின்றனர்
min liqāi
مِّن لِّقَآءِ
சந்திப்பதில்
rabbihim
رَبِّهِمْۗ
தங்கள் இறைவனை
alā
أَلَآ
அறிந்து கொள்ளுங்கள்!
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
muḥīṭun
مُّحِيطٌۢ
சூழ்ந்தவன்
நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதைப் பற்றியும் சந்தேகத்தில் இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அவன் எல்லாவற்றையும் (தன் ஞானத்தால்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுமிருக்கின்றான் என்பதையும் நிச்சயமாக (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௫௪)
Tafseer