Skip to content

ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா - Page: 5

Fussilat

(Fuṣṣilat)

௪௧

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِالذِّكْرِ لَمَّا جَاۤءَهُمْ ۗوَاِنَّهٗ لَكِتٰبٌ عَزِيْزٌ ۙ ٤١

inna alladhīna kafarū
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟
நிச்சயமாக நிராகரித்தவர்கள்
bil-dhik'ri
بِٱلذِّكْرِ
இந்த வேதத்தை
lammā
لَمَّا
அது வந்த போது
jāahum
جَآءَهُمْۖ
அவர்களிடம்
wa-innahu
وَإِنَّهُۥ
நிச்சயமாக இது
lakitābun
لَكِتَٰبٌ
வேதமாகும்
ʿazīzun
عَزِيزٌ
மிக கண்ணியமான
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை நிராகரிக்கின்றார்களோ (அவர்கள் மறுமையில் தங்கள் நிலைமையை உணர்ந்து கொள்வார்கள். ஏனென்றால்) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௪௧)
Tafseer
௪௨

لَّا يَأْتِيْهِ الْبَاطِلُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهٖ ۗتَنْزِيْلٌ مِّنْ حَكِيْمٍ حَمِيْدٍ ٤٢

lā yatīhi
لَّا يَأْتِيهِ
அதனிடம் வரமாட்டார்(கள்)
l-bāṭilu
ٱلْبَٰطِلُ
பொய்யர்(கள்)
min bayni yadayhi
مِنۢ بَيْنِ يَدَيْهِ
அதற்கு முன்னிருந்தும்
walā min khalfihi
وَلَا مِنْ خَلْفِهِۦۖ
அதற்குப் பின்னிருந்தும்
tanzīlun
تَنزِيلٌ
இறக்கப்பட்ட வேதம்
min ḥakīmin ḥamīdin
مِّنْ حَكِيمٍ حَمِيدٍ
மகா ஞானவான், மகா புகழுக்குரியவனிடமிருந்து
இதற்கு முன்னும் சரி, இதற்குப் பின்னும் சரி உண்மைக்கு மாறான யாதொரு விஷயமும் (திருக்குர்ஆனாகிய) இதனை (அணுகவே) அணுகாது. மிக்க புகழும் ஞானமும் உடையவனால் (இது) இறக்கப்பட்டது. ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௪௨)
Tafseer
௪௩

مَا يُقَالُ لَكَ اِلَّا مَا قَدْ قِيْلَ لِلرُّسُلِ مِنْ قَبْلِكَ ۗاِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ وَّذُوْ عِقَابٍ اَلِيْمٍ ٤٣

mā yuqālu
مَّا يُقَالُ
சொல்லப்படாது
laka
لَكَ
உமக்கு
illā mā
إِلَّا مَا
தவிர/எது
qad
قَدْ
திட்டமாக
qīla
قِيلَ
சொல்லப்பட்டதோ
lilrrusuli
لِلرُّسُلِ
தூதர்களுக்கு
min qablika
مِن قَبْلِكَۚ
உமக்கு முன்னர்
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உமது இறைவன்
ladhū maghfiratin
لَذُو مَغْفِرَةٍ
மன்னிப்புடையவன்
wadhū ʿiqābin
وَذُو عِقَابٍ
இன்னும் தண்டனைஉடையவன்
alīmin
أَلِيمٍ
வலி தரக்கூடியது
(நபியே!) உங்களுக்கு முன் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ, அதனைத் தவிர (வேறொன்றும்) உங்களுக்குக் கூறப்படவில்லை. (ஆகவே, இவர்கள் கூறும் நிந்தனைகளைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நிச்சயமாக உங்களது இறைவன் (நல்லவர்களை) மிக மன்னிப்பவனாகவும், (தீயவர்களைத்) துன்புறுத்தி வேதனை செய்பவனாகவும் இருக்கின்றான். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௪௩)
Tafseer
௪௪

وَلَوْ جَعَلْنٰهُ قُرْاٰنًا اَعْجَمِيًّا لَّقَالُوْا لَوْلَا فُصِّلَتْ اٰيٰتُهٗ ۗ ءَاَ۬عْجَمِيٌّ وَّعَرَبِيٌّ ۗ قُلْ هُوَ لِلَّذِيْنَ اٰمَنُوْا هُدًى وَّشِفَاۤءٌ ۗوَالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ فِيْٓ اٰذَانِهِمْ وَقْرٌ وَّهُوَ عَلَيْهِمْ عَمًىۗ اُولٰۤىِٕكَ يُنَادَوْنَ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍ ࣖ ٤٤

walaw jaʿalnāhu
وَلَوْ جَعَلْنَٰهُ
நாம் இதை ஆக்கி இருந்தால்
qur'ānan
قُرْءَانًا
குர்ஆனாக
aʿjamiyyan
أَعْجَمِيًّا
அரபி அல்லாத மொழி
laqālū
لَّقَالُوا۟
கூறியிருப்பார்கள்
lawlā fuṣṣilat
لَوْلَا فُصِّلَتْ
விவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா?
āyātuhu
ءَايَٰتُهُۥٓۖ
இதன் வசனங்கள்
āʿ'jamiyyun
ءَا۬عْجَمِىٌّ
அரபி அல்லாத ஒரு மொழியிலா!
waʿarabiyyun
وَعَرَبِىٌّۗ
இன்னும் அரபி ஆயிற்றே !
qul huwa
قُلْ هُوَ
கூறுவீராக!/இது
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
hudan
هُدًى
நேர்வழி(யும்)
washifāon
وَشِفَآءٌۖ
நிவாரணமும்
wa-alladhīna lā yu'minūna
وَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ
எவர்கள்/நம்பிக்கை கொள்ளவில்லையோ
fī ādhānihim
فِىٓ ءَاذَانِهِمْ
அவர்களின் காதுகளில்
waqrun
وَقْرٌ
செவிட்டுத்தனம்
wahuwa
وَهُوَ
அது
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ʿaman
عَمًىۚ
மறைந்திருக்கிறது
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
yunādawna
يُنَادَوْنَ
அழைக்கப்படுவார்கள்
min makānin
مِن مَّكَانٍۭ
இடத்தில் இருந்து
baʿīdin
بَعِيدٍ
மிக தூரமான
இதனை அரபி அல்லாத மொழியில் நாம் இறக்கி வைத்திருந்தால், (இந்த மக்காவாசிகள்) இதனுடைய வசனங்கள் (நம்முடைய அரபி மொழியில்) விவரித்துக் கூறப்பட்டிருக்க வேண்டாமா? என்றும், இதுவோ அரபி அல்லாத மொழி; நாமோ அதனை அறியாத) அரபிகள் என்றும் கூறுவார்கள். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இது (அவர்களுடைய அரபி மொழியில் இருப்பதுடன்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேரான வழியாகவும், (சந்தேக நோயுள்ள உள்ளங்களுக்கு) நல்லதொரு பரிகாரமாகவும் இருக்கின்றது. எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்கு செவிடாகவும், அவர்களுடைய பார்வையை போக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அவர்கள் (உங்கள் சமீபத்திலிருந்த போதிலும்) வெகு தொலை தூரத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்). ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௪௪)
Tafseer
௪௫

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَاخْتُلِفَ فِيْهِ ۗوَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ ۗوَاِنَّهُمْ لَفِيْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ ٤٥

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
mūsā
مُوسَى
மூஸாவிற்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
fa-ukh'tulifa fīhi
فَٱخْتُلِفَ فِيهِۗ
ஆனால் முரண்பாடு செய்யப்பட்டது/அதில்
walawlā kalimatun sabaqat
وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ
ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லை என்றால்
min rabbika
مِن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
laquḍiya
لَقُضِىَ
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்
baynahum
بَيْنَهُمْۚ
அவர்களுக்கு மத்தியில்
wa-innahum
وَإِنَّهُمْ
இன்னும் நிச்சயமாக அவர்கள்
lafī shakkin
لَفِى شَكٍّ
சந்தேகத்தில்தான்
min'hu
مِّنْهُ
இதில்
murībin
مُرِيبٍ
மிக ஆழமான
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். (அவருடைய மக்கள்) அதில் பல பிரிவுகளை உண்டு பண்ணிவிட்டனர். (அவர்களை விசாரித்துத் தீர்ப்புக் கூறுவது மறுமையில்தான் என்று) உங்களது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரையில்) முடிந்தே போயிருக்கும். நிச்சயமாக இவர்களும் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௪௫)
Tafseer
௪௬

مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۙوَمَنْ اَسَاۤءَ فَعَلَيْهَا ۗوَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ ۔ ٤٦

man ʿamila
مَّنْ عَمِلَ
யார் செய்வாரோ
ṣāliḥan
صَٰلِحًا
நல்லதை
falinafsihi
فَلِنَفْسِهِۦۖ
அது அவருக்குத்தான் நன்மையாகும்
waman
وَمَنْ
இன்னும் யார்
asāa
أَسَآءَ
தீயதை செய்வாரோ
faʿalayhā
فَعَلَيْهَاۗ
அது அவருக்குத்தான் கேடாகும்
wamā
وَمَا
இல்லை
rabbuka
رَبُّكَ
உமது இறைவன்
biẓallāmin
بِظَلَّٰمٍ
அநியாயம் செய்பவனாக
lil'ʿabīdi
لِّلْعَبِيدِ
அடியார்களுக்கு
எவர் நன்மைகள் செய்கின்றாரோ, அது அவருக்கே நன்று. எவர் பாவம் செய்கின்றாரோ, அது அவருக்கே கேடாகும். உங்களது இறைவன் (தன்) அடியார்கள் எவருக்கும் அறவே தீங்கு செய்வ தில்லை. (அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௪௬)
Tafseer
௪௭

۞ اِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ ۗوَمَا تَخْرُجُ مِنْ ثَمَرٰتٍ ِمّنْ اَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ اُنْثٰى وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ ۗوَيَوْمَ يُنَادِيْهِمْ اَيْنَ شُرَكَاۤءِيْۙ قَالُوْٓا اٰذَنّٰكَ مَا مِنَّا مِنْ شَهِيْدٍ ۚ ٤٧

ilayhi
إِلَيْهِ
அவன் பக்கமே
yuraddu
يُرَدُّ
திருப்பப்படுகிறது
ʿil'mu
عِلْمُ
அறிவு
l-sāʿati
ٱلسَّاعَةِۚ
மறுமையைப் பற்றிய
wamā takhruju
وَمَا تَخْرُجُ
வெளிவருவதில்லை
min thamarātin
مِن ثَمَرَٰتٍ
பழங்களில் எதுவும்
min akmāmihā
مِّنْ أَكْمَامِهَا
அவற்றின் பாலைகளில் இருந்து
wamā taḥmilu
وَمَا تَحْمِلُ
கர்ப்பமடைவதுமில்லை
min unthā
مِنْ أُنثَىٰ
பெண்களில் எவரும்
walā taḍaʿu
وَلَا تَضَعُ
இன்னும் குழந்தை பெற்றெடுப்பதுமில்லை
illā biʿil'mihi
إِلَّا بِعِلْمِهِۦۚ
அவனது ஞானமில்லாமல்
wayawma
وَيَوْمَ
நாளில்
yunādīhim
يُنَادِيهِمْ
அவர்களை அவன் அழைக்கின்ற
ayna
أَيْنَ
எங்கே
shurakāī
شُرَكَآءِى
எனது இணைகள்
qālū
قَالُوٓا۟
அவர்கள்கூறுவார்கள்
ādhannāka
ءَاذَنَّٰكَ
நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்
mā minnā
مَا مِنَّا
எங்களில் இல்லை
min shahīdin
مِن شَهِيدٍ
சாட்சி சொல்பவர் யாரும்
(நபியே! "விசாரணைக் காலமாகிய மறுமை எப்பொழுது வரும்?" என அவர்கள் அடிக்கடி உங்களிடம் கேட்கின்றனர். அதற்கு நீங்கள் கூறுங்கள்:) மறுமையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே விடப்பட்டுள்ளது. (ஆகவே, அதைப் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.) அவன் அறியாமல் யாதொரு கனியும் அதன் மொட்டிலிருந்து வெளிப்படுவதில்லை. யாதொரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (ஆகவே, அவை அனைத்தையும் அவனே நன்கறிவான். விசாரணைக் காலமாகிய) அந்நாளில் (இறைவன் அவர்களை நோக்கி) "நீங்கள் எனக்கு இணையாக்கியவை(களாகிய பொய்யான தெய்வங்)கள் எங்கே?" என்று கேட்பான். அதற்கு அவர்கள் "எங்களில் அவ்வாறு கூறுபவர்கள் ஒருவருமே (இன்றைய தினம்) இல்லையென்று (எங்கள் இறைவனே!) உனக்கு அறிவித்து விடுகின்றோம்" என்று கூறுவார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௪௭)
Tafseer
௪௮

وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَدْعُوْنَ مِنْ قَبْلُ وَظَنُّوْا مَا لَهُمْ مِّنْ مَّحِيْصٍ ٤٨

waḍalla
وَضَلَّ
இன்னும் மறைந்துவிடும்
ʿanhum
عَنْهُم
அவர்களை விட்டும்
mā kānū yadʿūna
مَّا كَانُوا۟ يَدْعُونَ
அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவை
min qablu
مِن قَبْلُۖ
இதற்கு முன்னர்
waẓannū
وَظَنُّوا۟
இன்னும் அறிந்து கொள்வார்கள்
mā lahum
مَا لَهُم
தங்களுக்கு இல்லை
min maḥīṣin
مِّن مَّحِيصٍ
தப்பிப்பதற்குரிய இடம் எதுவும்
இதற்கு முன்னர் அவர்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்தவைகளெல்லாம் அவர்களை விட்டும் மறைந்து போய்விடும். தங்களுக்குத் தப்ப வழியில்லை என்பதையும் அவர்கள் நன்கு அறிந்துகொள்வார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௪௮)
Tafseer
௪௯

لَا يَسْـَٔمُ الْاِنْسَانُ مِنْ دُعَاۤءِ الْخَيْرِۖ وَاِنْ مَّسَّهُ الشَّرُّ فَيَـُٔوْسٌ قَنُوْطٌ ٤٩

lā yasamu
لَّا يَسْـَٔمُ
சடைவடையமாட்டான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
min duʿāi
مِن دُعَآءِ
பிரார்த்திப்பதில்
l-khayri
ٱلْخَيْرِ
நன்மைக்காக
wa-in massahu
وَإِن مَّسَّهُ
அவனுக்கு நிகழ்ந்தால்
l-sharu
ٱلشَّرُّ
தீமைகள்
fayaūsun
فَيَـُٔوسٌ
நிராசை அடைந்தவனாக
qanūṭun
قَنُوطٌ
நம்பிக்கை இழந்தவனாக
(பிரார்த்தனை செய்து) நன்மையைக் கேட்பதில் மனிதன் (ஒருபொழுதும்) சடைவதில்லை. எனினும், அவனை யாதொரு தீங்கு அணுகும் சமயத்தில் அவன் மனமுடைந்து நம்பிக்கையிழந்து விடுகின்றான். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௪௯)
Tafseer
௫௦

وَلَىِٕنْ اَذَقْنٰهُ رَحْمَةً مِّنَّا مِنْۢ بَعْدِ ضَرَّاۤءَ مَسَّتْهُ لَيَقُوْلَنَّ هٰذَا لِيْۙ وَمَآ اَظُنُّ السَّاعَةَ قَاۤىِٕمَةًۙ وَّلَىِٕنْ رُّجِعْتُ اِلٰى رَبِّيْٓ اِنَّ لِيْ عِنْدَهٗ لَلْحُسْنٰىۚ فَلَنُنَبِّئَنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِمَا عَمِلُوْاۖ وَلَنُذِيْقَنَّهُمْ مِّنْ عَذَابٍ غَلِيْظٍ ٥٠

wala-in
وَلَئِنْ
adhaqnāhu
أَذَقْنَٰهُ
நாம் அவனுக்கு சுவைக்க வைத்தால்
raḥmatan
رَحْمَةً
ஓர் அருளை
minnā
مِّنَّا
நம் புறத்தில் இருந்து
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
ḍarrāa
ضَرَّآءَ
தீங்குக்கு
massathu
مَسَّتْهُ
அவனுக்கு நிகந்ததது
layaqūlanna
لَيَقُولَنَّ
இன்னும் கூறுகிறான்
hādhā
هَٰذَا
இது
لِى
எனக்குரியது
wamā aẓunnu
وَمَآ أَظُنُّ
நான் எண்ணவில்லை
l-sāʿata
ٱلسَّاعَةَ
மறுமை
qāimatan
قَآئِمَةً
நிகழும்
wala-in rujiʿ'tu
وَلَئِن رُّجِعْتُ
நான் திரும்பக் கொண்டு வரப்பட்டாலும்
ilā rabbī
إِلَىٰ رَبِّىٓ
என் இறைவனிடம்
inna lī
إِنَّ لِى
நிச்சயமாக எனக்கு
ʿindahu
عِندَهُۥ
அவனிடம்
lalḥus'nā
لَلْحُسْنَىٰۚ
சொர்க்கம் உண்டு
falanunabbi-anna
فَلَنُنَبِّئَنَّ
நாம் நிச்சயமாக அறிவிப்போம்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு
bimā ʿamilū
بِمَا عَمِلُوا۟
அவர்கள் செய்ததை
walanudhīqannahum
وَلَنُذِيقَنَّهُم
இன்னும் நிச்சயமாக அவர்களுக்கு சுவைக்க வைப்போம்
min ʿadhābin ghalīẓin
مِّنْ عَذَابٍ غَلِيظٍ
கடுமையான வேதனையை
மனிதனைப் பிடித்திருந்த கஷ்டத்தை நீக்கிய பின்னர், நம்முடைய அருளை அவன் சுவைக்கும்படி நாம் செய்தாலோ "இது எனக்கு வரவேண்டியதாக இருந்ததே வந்தது. மறுமை ஏற்படும் என்று நான் நம்பவேயில்லை. அவ்வாறே (மறுமை ஏற்பட்டு) எனதிறைவனிடம் நான் கொண்டு போகப்பட்டாலும், அவனிடத்திலும் நிச்சயமாக எனக்கு நன்மையே கிடைக்கும் என்று கூறுகின்றான். ஆனால், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் செய்த (தீய) காரியங்களை அந்நாளில் நாம் நிச்சயமாக அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிப்போம். அன்றி, கடினமான வேதனையை அவர்கள் சுவைக்கும்படியும் நிச்சயமாக நாம் செய்வோம். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௫௦)
Tafseer