وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَيْنَا ۗقَالُوْٓا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِيْٓ اَنْطَقَ كُلَّ شَيْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍۙ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ ٢١
- waqālū
- وَقَالُوا۟
- அவர்கள் கூறுவார்கள்
- lijulūdihim
- لِجُلُودِهِمْ
- தங்களுடைய தோல்களிடம்
- lima shahidttum
- لِمَ شَهِدتُّمْ
- ஏன் சாட்சிகூறினீர்கள்
- ʿalaynā
- عَلَيْنَاۖ
- எங்களுக்கு எதிராக
- qālū
- قَالُوٓا۟
- அவை கூறும்
- anṭaqanā
- أَنطَقَنَا
- எங்களை(யும்) பேச வைத்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- alladhī anṭaqa
- ٱلَّذِىٓ أَنطَقَ
- எவன்/பேசவைத்தான்
- kulla shayin
- كُلَّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- wahuwa
- وَهُوَ
- அவன்தான்
- khalaqakum
- خَلَقَكُمْ
- உங்களைப் படைத்தான்
- awwala marratin
- أَوَّلَ مَرَّةٍ
- முதல் முறையாக
- wa-ilayhi
- وَإِلَيْهِ
- இன்னும் அவன் பக்கம்தான்
- tur'jaʿūna
- تُرْجَعُونَ
- நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, "எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?" என்று கேட்பார்கள். அதற்கு அவைகள், "எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக் கின்றீர்கள்" என்றும் அவை கூறும். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௧)Tafseer
وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَآ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا يَعْلَمُ كَثِيْرًا مِّمَّا تَعْمَلُوْنَ ٢٢
- wamā kuntum
- وَمَا كُنتُمْ
- நீங்கள் இருக்கவில்லை
- tastatirūna
- تَسْتَتِرُونَ
- மறைப்பவர்களாக
- an yashhada
- أَن يَشْهَدَ
- சாட்சி கூறிவிடும் என்பதற்காக
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்களுக்கு எதிராக
- samʿukum
- سَمْعُكُمْ
- உங்கள் செவியும்
- walā abṣārukum
- وَلَآ أَبْصَٰرُكُمْ
- உங்கள் பார்வைகளும்
- walā julūdukum
- وَلَا جُلُودُكُمْ
- உங்கள் தோல்களும்
- walākin
- وَلَٰكِن
- என்றாலும்
- ẓanantum
- ظَنَنتُمْ
- நீங்கள் எண்ணினீர்கள்
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lā yaʿlamu
- لَا يَعْلَمُ
- அறியமாட்டான்
- kathīran
- كَثِيرًا
- அதிகமானதை
- mimmā taʿmalūna
- مِّمَّا تَعْمَلُونَ
- நீங்கள் செய்வதில்
உங்களுடைய செவிகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் உங்களுடைய பாவங்களை அவைகளுக்கு) மறைத்துக் கொள்ள முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவை களில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௨)Tafseer
وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِيْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدٰىكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ ٢٣
- wadhālikum
- وَذَٰلِكُمْ
- அந்த
- ẓannukumu
- ظَنُّكُمُ
- உங்கள் எண்ணம்தான்
- alladhī ẓanantum
- ٱلَّذِى ظَنَنتُم
- எது/எண்ணினீர்கள்
- birabbikum
- بِرَبِّكُمْ
- உங்கள் இறைவனைப் பற்றி
- ardākum
- أَرْدَىٰكُمْ
- உங்களை நாசமாக்கியது
- fa-aṣbaḥtum
- فَأَصْبَحْتُم
- ஆகவே, நீங்கள் ஆகிவிட்டீர்கள்
- mina l-khāsirīna
- مِّنَ ٱلْخَٰسِرِينَ
- நஷ்டவாளிகளில்
நீங்கள் உங்கள் இறைவனைப் பற்றி எண்ணிய உங்களுடைய (இத்தவறான) எண்ணம்தான் உங்களை அழித்துவிட்டது. ஆதலால், நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விட்டீர்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௩)Tafseer
فَاِنْ يَّصْبِرُوْا فَالنَّارُ مَثْوًى لَّهُمْ ۚوَاِنْ يَّسْتَعْتِبُوْا فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِيْنَ ٢٤
- fa-in yaṣbirū
- فَإِن يَصْبِرُوا۟
- அவர்கள் பொறுமையாக இருந்தாலும்
- fal-nāru
- فَٱلنَّارُ
- நரகம்தான்
- mathwan
- مَثْوًى
- தங்குமிடமாகும்
- lahum
- لَّهُمْۖ
- அவர்களுக்குரிய
- wa-in yastaʿtibū
- وَإِن يَسْتَعْتِبُوا۟
- அவர்கள் தங்களைத் திருப்புமாறு கோரினால்
- famā hum mina l-muʿ'tabīna
- فَمَا هُم مِّنَ ٱلْمُعْتَبِينَ
- அப்படி அவர்கள் திருப்பப்பட மாட்டார்கள்
ஆகவே, அவர்கள் (ஏதும் பேசாது கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபோதிலும், அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அவர்கள் மன்னிப்பைக் கோரியபோதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௪)Tafseer
۞ وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاۤءَ فَزَيَّنُوْا لَهُمْ مَّا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِيْٓ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِۚ اِنَّهُمْ كَانُوْا خٰسِرِيْنَ ࣖ ٢٥
- waqayyaḍnā
- وَقَيَّضْنَا
- நாம் இலகுவாக்கி அமைத்துக் கொடுத்தோம்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- quranāa
- قُرَنَآءَ
- சில நண்பர்களை
- fazayyanū lahum
- فَزَيَّنُوا۟ لَهُم
- அலங்கரித்துக் காட்டினார்கள்/அவர்களுக்கு
- mā bayna aydīhim
- مَّا بَيْنَ أَيْدِيهِمْ
- அவர்களுக்கு முன்னுள்ளதை(யும்)
- wamā khalfahum
- وَمَا خَلْفَهُمْ
- அவர்களுக்கு பின்னுள்ளதையும்
- waḥaqqa
- وَحَقَّ
- இன்னும் உறுதியாகிவிட்டது
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- இவர்கள் மீதும்
- l-qawlu
- ٱلْقَوْلُ
- விதிக்கப்பட்ட அதே விதி
- fī umamin
- فِىٓ أُمَمٍ
- சமுதாயங்களுக்கு
- qad khalat
- قَدْ خَلَتْ
- சென்று விட்டனர்
- min qablihim
- مِن قَبْلِهِم
- இவர்களுக்கு முன்னர்
- mina l-jini
- مِّنَ ٱلْجِنِّ
- ஜின்களில்
- wal-insi
- وَٱلْإِنسِۖ
- மற்றும் மனிதர்களில்
- innahum
- إِنَّهُمْ
- நிச்சயமாக இவர்கள்
- kānū
- كَانُوا۟
- இருக்கின்றனர்
- khāsirīna
- خَٰسِرِينَ
- நஷ்டவாளிகளாக
நாம் அவர்களுக்கு, இணைபிரியாத (கெட்ட) தோழர்கள் சிலரை இணைத்துவிட்டோம். அவர்கள், அவர்களுக்கு முன்னும் பின்னுமுள்ள (தீய காரியங்கள்) அனைத்தையும் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டார்கள். ஆகவே, இவர்கள் மீதும், இவர்களுக்கு முன் சென்ற (இவர்களைப் போன்ற) மனிதர்களிலும், ஜின்களிலுமுள்ள கூட்டத்தினர்கள் மீதும் (தண்டனைக் குள்ளாவார்கள் என்ற) நம்முடைய வாக்கு உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) நஷ்டமடைந்து விட்டனர். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௫)Tafseer
وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِيْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ ٢٦
- waqāla
- وَقَالَ
- கூறினார்கள்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரிப்பாளர்கள்
- lā tasmaʿū
- لَا تَسْمَعُوا۟
- செவியுறாதீர்கள்
- lihādhā l-qur'āni
- لِهَٰذَا ٱلْقُرْءَانِ
- இந்த குர்ஆனை
- wal-ghaw
- وَٱلْغَوْا۟
- கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துங்கள்!
- fīhi
- فِيهِ
- அதில்
- laʿallakum taghlibūna
- لَعَلَّكُمْ تَغْلِبُونَ
- நீங்கள்வெற்றி பெறுவீர்கள்
நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் "இந்தக் குர்ஆனை (உங்கள் காதாலும்) கேட்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டு பண்ணினால் நீங்கள் வென்று விடுவீர்கள்" என்றும் கூறினார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௬)Tafseer
فَلَنُذِيْقَنَّ الَّذِيْنَ كَفَرُوْا عَذَابًا شَدِيْدًاۙ وَّلَنَجْزِيَنَّهُمْ اَسْوَاَ الَّذِيْ كَانُوْا يَعْمَلُوْنَ ٢٧
- falanudhīqanna
- فَلَنُذِيقَنَّ
- ஆகவே, நிச்சயமாக சுவைக்க வைப்போம்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரித்தவர்களுக்கு
- ʿadhāban
- عَذَابًا
- வேதனையை
- shadīdan
- شَدِيدًا
- கடுமையான
- walanajziyannahum
- وَلَنَجْزِيَنَّهُمْ
- இன்னும் அவர்களுக்கு நிச்சயமாக கூலி கொடுப்போம்
- aswa-a
- أَسْوَأَ
- மிகக் கெட்ட செயலுக்கு
- alladhī kānū yaʿmalūna
- ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ
- அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில்
ஆகவே, நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் கடினமான வேதனையைச் சுவைக்கும்படி செய்வோம். நிச்சயமாக நாம் இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களைவிட தீயதான வேதனையைக் கூலியாக அவர்களுக்குக் கொடுத்தே தீருவோம். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௭)Tafseer
ذٰلِكَ جَزَاۤءُ اَعْدَاۤءِ اللّٰهِ النَّارُ لَهُمْ فِيْهَا دَارُ الْخُلْدِ ۗجَزَاۤءً ۢبِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ ٢٨
- dhālika
- ذَٰلِكَ
- இதுதான்
- jazāu
- جَزَآءُ
- கூலியாகும்
- aʿdāi
- أَعْدَآءِ
- எதிரிகளுக்குரிய
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- l-nāru
- ٱلنَّارُۖ
- நரகம்தான்
- lahum fīhā
- لَهُمْ فِيهَا
- அவர்களுக்கு/அதில்
- dāru l-khul'di
- دَارُ ٱلْخُلْدِۖ
- நிரந்தரமாக தங்கும் இல்லம்
- jazāan
- جَزَآءًۢ
- கூலியாக
- bimā kānū
- بِمَا كَانُوا۟
- அவர்கள் இருந்ததற்கு
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நமது வசனங்களை
- yajḥadūna
- يَجْحَدُونَ
- மறுப்பவர்களாக
அல்லாஹ்வுடைய (இந்த) எதிரிகளுக்கு, இத்தகைய நரகம்தான் கூலிஆகும். நம்முடைய வசனங்களை இவ்வாறு அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாக இவர்களுக்கு நிலையான வீடு நரகத்தில்தான். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௮)Tafseer
وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا رَبَّنَآ اَرِنَا الَّذَيْنِ اَضَلّٰنَا مِنَ الْجِنِّ وَالْاِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ اَقْدَامِنَا لِيَكُوْنَا مِنَ الْاَسْفَلِيْنَ ٢٩
- waqāla
- وَقَالَ
- கூறுவார்(கள்)
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரிப்பவர்கள்
- rabbanā
- رَبَّنَآ
- எங்கள் இறைவா
- arinā
- أَرِنَا
- எங்களுக்குக் காண்பி
- alladhayni aḍallānā
- ٱلَّذَيْنِ أَضَلَّانَا
- எவர்கள்/வழிகெடுத்தனர்/எங்களை
- mina l-jini wal-insi
- مِنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ
- ஜின் மற்றும் மனிதர்களில்
- najʿalhumā
- نَجْعَلْهُمَا
- அ(வ்விரு)வர்களை ஆக்கிக் கொள்கிறோம்
- taḥta aqdāminā
- تَحْتَ أَقْدَامِنَا
- எங்கள் பாதங்களுக்குக் கீழ்
- liyakūnā
- لِيَكُونَا
- ஆகிவிடுவதற்காக
- mina l-asfalīna
- مِنَ ٱلْأَسْفَلِينَ
- மிகக் கீழ்த்தரமானவர்களில்
நிராகரித்தவர்கள் அந்நாளில் (இறைவனை நோக்கி,) "எங்கள் இறைவனே! எங்களை வழிகெடுத்த மனிதர்களையும், ஜின்களையும் எங்களுக்கு நீ காண்பி. அவர்கள் இழிவுக்குள்ளாகும் பொருட்டு, நாங்கள் அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழாக்கி மிதிப்போம்" என்று கூறுவார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௯)Tafseer
اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰۤىِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَنَّةِ الَّتِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ٣٠
- inna alladhīna
- إِنَّ ٱلَّذِينَ
- நிச்சயமாக எவர்கள்
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- rabbunā
- رَبُّنَا
- எங்கள் இறைவன்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்தான்
- thumma is'taqāmū
- ثُمَّ ٱسْتَقَٰمُوا۟
- பிறகு/உறுதியாக இருந்தார்கள்
- tatanazzalu
- تَتَنَزَّلُ
- இறங்குவார்கள்
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- அவர்கள் மீது
- l-malāikatu
- ٱلْمَلَٰٓئِكَةُ
- வானவர்கள்
- allā takhāfū
- أَلَّا تَخَافُوا۟
- நீங்கள் பயப்படாதீர்கள்!
- walā taḥzanū
- وَلَا تَحْزَنُوا۟
- இன்னும் கவலைப்படாதீர்கள்!
- wa-abshirū
- وَأَبْشِرُوا۟
- நற்செய்தி பெறுங்கள்!
- bil-janati
- بِٱلْجَنَّةِ
- சொர்க்கத்தைக் கொண்டு
- allatī kuntum tūʿadūna
- ٱلَّتِى كُنتُمْ تُوعَدُونَ
- எது/வாக்களிக்கப்பட்டவர்களாக இருந்தீர்கள்
எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து (அவர்களை நோக்கி) "நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியைக் கொண்டு சந்தோஷ மடையுங்கள்" என்றும், ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௦)Tafseer