Skip to content

ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா - Word by Word

Fussilat

(Fuṣṣilat)

bismillaahirrahmaanirrahiim

حٰمۤ ۚ ١

hha-meem
حمٓ
ஹா மீம்
ஹாமீம். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧)
Tafseer

تَنْزِيْلٌ مِّنَ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ۚ ٢

tanzīlun
تَنزِيلٌ
இறக்கப்பட்ட வேதமாகும்
mina l-raḥmāni
مِّنَ ٱلرَّحْمَٰنِ
பேரன்பாளனிடமிருந்து
l-raḥīmi
ٱلرَّحِيمِ
பேரருளாளன்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமா(கிய அல்லாஹ்வா)ல் இது இறக்கப்பட்டுள்ளது. ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨)
Tafseer

كِتٰبٌ فُصِّلَتْ اٰيٰتُهٗ قُرْاٰنًا عَرَبِيًّا لِّقَوْمٍ يَّعْلَمُوْنَۙ ٣

kitābun
كِتَٰبٌ
வேதமாகும்
fuṣṣilat
فُصِّلَتْ
விவரிக்கப்பட்டன
āyātuhu
ءَايَٰتُهُۥ
இதன் வசனங்கள்
qur'ānan
قُرْءَانًا
குர்ஆன்
ʿarabiyyan
عَرَبِيًّا
அரபி மொழியிலான
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்காக
yaʿlamūna
يَعْلَمُونَ
அறிகின்றார்கள்
இது (குர்ஆன் என்னும்) வேதமாகும். அறிவுள்ள மக்களுக்காக இதன் வசனங்கள் அரபி மொழியில் விவரிக்கப் பட்டுள்ளன. ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩)
Tafseer

بَشِيْرًا وَّنَذِيْرًاۚ فَاَعْرَضَ اَكْثَرُهُمْ فَهُمْ لَا يَسْمَعُوْنَ ٤

bashīran
بَشِيرًا
நற்செய்தி கூறக்கூடியது
wanadhīran
وَنَذِيرًا
அச்சமூட்டி எச்சரிக்கக் கூடியது
fa-aʿraḍa
فَأَعْرَضَ
புறக்கணித்தனர்
aktharuhum
أَكْثَرُهُمْ
அதிகமானோர் அவர்களில்
fahum
فَهُمْ
இன்னும் அவர்கள்
lā yasmaʿūna
لَا يَسْمَعُونَ
செவியேற்பதில்லை
(நல்லோருக்கு இது) நற்செய்தி கூறுகின்றதாகவும் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றதாகவும் இருக்கின்றது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனைப்) புறக்கணித்து விட்டனர். ஆதலால், அவர்கள் இதற்கு செவி சாய்ப்பதில்லை. ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௪)
Tafseer

وَقَالُوْا قُلُوْبُنَا فِيْٓ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَآ اِلَيْهِ وَفِيْٓ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْۢ بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ ٥

waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
qulūbunā
قُلُوبُنَا
எங்கள் உள்ளங்கள்
fī akinnatin
فِىٓ أَكِنَّةٍ
திரைகளில்தான்
mimmā tadʿūnā
مِّمَّا تَدْعُونَآ
எதில்/நீர் எங்களை அழைக்கின்றீர்களோ
ilayhi
إِلَيْهِ
அதன் பக்கம்
wafī ādhāninā
وَفِىٓ ءَاذَانِنَا
இன்னும் எங்கள்செவிகளில்
waqrun
وَقْرٌ
செவிட்டுத்தனம்
wamin bayninā
وَمِنۢ بَيْنِنَا
இன்னும் எங்களுக்கு மத்தியிலும்
wabaynika
وَبَيْنِكَ
உமக்கு மத்தியிலும்
ḥijābun
حِجَابٌ
ஒரு திரை
fa-iʿ'mal
فَٱعْمَلْ
ஆகவே நீர் செய்வீராக!
innanā
إِنَّنَا
நிச்சயமாக நாங்கள்
ʿāmilūna
عَٰمِلُونَ
செய்வோம்
அன்றி, "நீங்கள் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீர்களோ (அதனைக் கவனிக்க முடியாதபடி) எங்களுடைய உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (நீங்கள் கூறுவதைச் செவியுற முடியாதவாறு) எங்களுடைய செவிகள் செவிடுபட்டுவிட்டன. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் திரையிட(ப்பட்டுத் தடுக்க)ப்பட்டு விட்டது. ஆகவே, நீங்கள் (விரும்பியதைச்) செய்து கொண்டிருங்கள். நாங்களும் (நாங்கள் விரும்பியதையே) செய்து கொண்டிருப்போம்" என்றும், (இதனை நிராகரிப்பவர்கள்) கூறுகின்றனர். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௫)
Tafseer

قُلْ اِنَّمَآ اَنَا۟ بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰىٓ اِلَيَّ اَنَّمَآ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَاسْتَقِيْمُوْٓا اِلَيْهِ وَاسْتَغْفِرُوْهُ ۗوَوَيْلٌ لِّلْمُشْرِكِيْنَۙ ٦

qul
قُلْ
கூறுவீராக!
innamā anā
إِنَّمَآ أَنَا۠
நான் எல்லாம்
basharun
بَشَرٌ
ஒரு மனிதர்தான்
mith'lukum
مِّثْلُكُمْ
உங்களைப் போன்ற
yūḥā
يُوحَىٰٓ
வஹீ அறிவிக்கப்படுகிறது
ilayya
إِلَىَّ
எனக்கு
annamā ilāhukum
أَنَّمَآ إِلَٰهُكُمْ
உங்கள் கடவுள் எல்லாம்
ilāhun wāḥidun
إِلَٰهٌ وَٰحِدٌ
ஒரே ஒருகடவுள்தான்
fa-is'taqīmū
فَٱسْتَقِيمُوٓا۟
ஆகவே, நீங்கள் நேர்வழி நடங்கள்!
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கமே
wa-is'taghfirūhu
وَٱسْتَغْفِرُوهُۗ
இன்னும் அவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்!
wawaylun lil'mush'rikīna
وَوَيْلٌ لِّلْمُشْرِكِينَ
நாசம்தான்/இணைவைப்பவர்களுக்கு
ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: மெய்யாகவே நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். ஆயினும், உங்களுடைய வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான் என்று எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நில்லுங்கள். அவனிடம் நீங்கள் மன்னிப்பையும் கேளுங்கள். அவனுக்கு இணைவைப்பவர்களுக்குக் கேடுதான். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௬)
Tafseer

الَّذِيْنَ لَا يُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ٧

alladhīna lā yu'tūna
ٱلَّذِينَ لَا يُؤْتُونَ
எவர்கள்/அவர்கள் கொடுப்பதில்லை
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
wahum
وَهُم
இன்னும் அவர்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
hum
هُمْ
அவர்கள்
kāfirūna
كَٰفِرُونَ
நிராகரிக்கின்றனர்
எவர்கள் ஜகாத்து கொடுப்பதில்லையோ அவர்கள் மறுமையையும் நிராகரிப்பவர்கள்தாம். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௭)
Tafseer

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ ࣖ ٨

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
lahum
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
ajrun
أَجْرٌ
நற்கூலி
ghayru mamnūnin
غَيْرُ مَمْنُونٍ
முடிவற்ற(து)
(ஆயினும்,) எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ (அவர்கள் மறுமையை நம்புபவர்கள்தாம்.) அவர்களுக்கு நிச்சயமாக (ஒரு காலத்திலும்) முடிவுறாத (நிலையான) கூலியுண்டு. ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௮)
Tafseer

۞ قُلْ اَىِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَ بِالَّذِيْ خَلَقَ الْاَرْضَ فِيْ يَوْمَيْنِ وَتَجْعَلُوْنَ لَهٗٓ اَنْدَادًا ۗذٰلِكَ رَبُّ الْعٰلَمِيْنَ ۚ ٩

qul
قُلْ
கூறுவீராக!
a-innakum latakfurūna
أَئِنَّكُمْ لَتَكْفُرُونَ
நீங்கள் நிராகரிக்கின்றீர்களா?
bi-alladhī khalaqa
بِٱلَّذِى خَلَقَ
படைத்தவனை
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
fī yawmayni
فِى يَوْمَيْنِ
இரண்டு நாள்களில்
watajʿalūna
وَتَجْعَلُونَ
இன்னும் ஏற்படுத்துகின்றீர்களா?
lahu
لَهُۥٓ
அவனுக்கு
andādan
أَندَادًاۚ
இணைகளை
dhālika
ذَٰلِكَ
அவன்தான்
rabbu
رَبُّ
இறைவன்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(இவ்வளவு பெரிய) பூமியை இரண்டே நாள்களில் படைத்தவனை நீங்கள் நிராகரித்துவிட்டு (மற்றவைகளை) அவனுக்கு இணையாக்குகின்றீர்களா? அவன்தான் உலகத்தார் அனைவரையும் படைத்த இறைவன்." ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௯)
Tafseer
௧௦

وَجَعَلَ فِيْهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبٰرَكَ فِيْهَا وَقَدَّرَ فِيْهَآ اَقْوَاتَهَا فِيْٓ اَرْبَعَةِ اَيَّامٍۗ سَوَاۤءً لِّلسَّاۤىِٕلِيْنَ ١٠

wajaʿala
وَجَعَلَ
இன்னும் ஏற்படுத்தினான்
fīhā
فِيهَا
அதில்
rawāsiya
رَوَٰسِىَ
மலைகளை
min fawqihā
مِن فَوْقِهَا
அதற்கு மேலாக
wabāraka
وَبَٰرَكَ
இன்னும் அருள்வளம் புரிந்தான்
fīhā
فِيهَا
அதில்
waqaddara
وَقَدَّرَ
இன்னும் திட்டமிட்டு நிர்ணயித்தான்
fīhā
فِيهَآ
அதில்
aqwātahā
أَقْوَٰتَهَا
அதன் உணவுகளை
fī arbaʿati
فِىٓ أَرْبَعَةِ
நான்கு
ayyāmin
أَيَّامٍ
நாள்களில்
sawāan
سَوَآءً
சரியான பதிலாக
lilssāilīna
لِّلسَّآئِلِينَ
விசாரிப்பவர்களுக்கு
அவனே பூமியின் மீது பெரும் மலைகளை அமைத்து, அதில் எல்லா விதமான பாக்கியங்களையும் புரிந்தான். அன்றி, அதில் (வசிப்பவர்களுக்கு) வேண்டிய உணவையும் நான்கு நாள்களில் நிர்ணயம் செய்தான். (அதுவும் நல்லவர்கள் தீயவர்கள் என்ற வித்தியாசமின்றி) கேட்பவர்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்குமாறும் செய்தான். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௦)
Tafseer