Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௮௪

Qur'an Surah Ghafir Verse 84

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا رَاَوْا بَأْسَنَاۗ قَالُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَحْدَهٗ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهٖ مُشْرِكِيْنَ (غافر : ٤٠)

falammā ra-aw
فَلَمَّا رَأَوْا۟
So when they saw
அவர்கள் பார்த்த போது
basanā
بَأْسَنَا
Our punishment
நமது தண்டனையை
qālū
قَالُوٓا۟
they said
அவர்கள் கூறினார்கள்
āmannā
ءَامَنَّا
"We believe
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
waḥdahu
وَحْدَهُۥ
Alone
அவன் ஒருவனை
wakafarnā
وَكَفَرْنَا
and we disbelieve
நிராகரித்து விட்டோம்
bimā kunnā
بِمَا كُنَّا
in what we used (to)
எதை/இருந்தோமோ
bihi
بِهِۦ
with Him
அதை
mush'rikīna
مُشْرِكِينَ
associate"
இணைவைப்பவர்களாக

Transliteration:

Falammaa ra aw baasanaa qaalooo aamannaa billaahi wahdahoo wa kafarnaa bimaa kunnaa bihee mushrikeen (QS. Ghāfir:84)

English Sahih International:

And when they saw Our punishment, they said, "We believe in Allah alone and disbelieve in that which we used to associate with Him." (QS. Ghafir, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

நம்முடைய வேதனையை அவர்கள் கண்ணால் கண்ட சமயத்தில் அவர்கள், "அல்லாஹ் ஒருவனையே நம்பிக்கை கொண்டு தாங்கள் இணை வைத்து வணங்கிய தெய்வங்களை நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௮௪)

Jan Trust Foundation

எனவே அவர்கள் நம்(கட்டளையால் உண்டான) வேதனையை கண்டபோது, “நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்) இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் நமது தண்டனையை பார்த்த போது நாங்கள் அல்லாஹ்வை - அவன் ஒருவனை மட்டும் - நம்பிக்கை கொண்டோம்; நாங்கள் எதை (அல்லாஹ்வுக்கு) இணைவைப்பவர்களாக இருந்தோமோ அதை நிராகரித்து விட்டோம் என்று கூறினார்கள்.