குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௮௩
Qur'an Surah Ghafir Verse 83
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّا جَاۤءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَرِحُوْا بِمَا عِنْدَهُمْ مِّنَ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ (غافر : ٤٠)
- falammā jāathum
- فَلَمَّا جَآءَتْهُمْ
- Then when came to them
- அவர்களிடம் வந்தபோது
- rusuluhum
- رُسُلُهُم
- their Messengers
- அவர்களின் தூதர்கள்
- bil-bayināti
- بِٱلْبَيِّنَٰتِ
- with clear proofs
- தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
- fariḥū
- فَرِحُوا۟
- they rejoiced
- அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
- bimā ʿindahum
- بِمَا عِندَهُم
- in what they had
- தங்களிடம் இருந்ததைக் கொண்டு
- mina l-ʿil'mi
- مِّنَ ٱلْعِلْمِ
- of the knowledge
- திறமைகள்
- waḥāqa
- وَحَاقَ
- and enveloped
- இன்னும் சூழ்ந்து கொண்டது
- bihim
- بِهِم
- them
- அவர்களை
- mā kānū
- مَّا كَانُوا۟
- what they used (to)
- எது/இருந்தார்களோ
- bihi
- بِهِۦ
- [at it]
- அதை
- yastahziūna
- يَسْتَهْزِءُونَ
- mock
- பரிகாசம் செய்பவர்களக
Transliteration:
Falammaa jaaa'at hum Rusuluhum bilbaiyinaati farihoo bimaa 'indahum minal 'ilmi wa haaqa bihim maa kaanoo bihee yastahzi'oon(QS. Ghāfir:83)
English Sahih International:
And when their messengers came to them with clear proofs, they [merely] rejoiced in what they had of knowledge, but they were enveloped by what they used to ridicule. (QS. Ghafir, Ayah ௮௩)
Abdul Hameed Baqavi:
அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்த சமயத்தில் (அதனை அவர்கள் பரிகாசம் பண்ணி நிராகரித்துவிட்டு, இவ்வுலக வாழ்க்கைச் சம்பந்தமாகத்) தங்களிடமுள்ள கல்வி (தொழில்) திறமைகளைப் பற்றிப் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது. (ஸூரத்துல் முஃமின், வசனம் ௮௩)
Jan Trust Foundation
ஆகவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்த போது, அவர்கள் தங்களிடமிருந்த கல்வியைக் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள், எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களை சூழ்ந்து கொண்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக்கொண்டு வந்த போது அவர்கள் தங்களிடம் இருந்த திறமைகளைக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் எதை பரிகாசம் செய்பவர்களாக இருந்தார்களோ அது (-அல்லாஹ்வின் தண்டனை) அவர்களை சூழ்ந்து கொண்டது.