Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௮௦

Qur'an Surah Ghafir Verse 80

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَكُمْ فِيْهَا مَنَافِعُ وَلِتَبْلُغُوْا عَلَيْهَا حَاجَةً فِيْ صُدُوْرِكُمْ وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُوْنَۗ (غافر : ٤٠)

walakum
وَلَكُمْ
And for you
இன்னும் உங்களுக்கு
fīhā
فِيهَا
in them
அவற்றில் உள்ளன
manāfiʿu
مَنَٰفِعُ
(are) benefits
பல பலன்கள்
walitablughū
وَلِتَبْلُغُوا۟
and that you may reach
இன்னும் நீங்கள்அடைவதற்காக
ʿalayhā
عَلَيْهَا
through them
அதன் மூலம்
ḥājatan
حَاجَةً
a need
ஓர் ஆசையை
fī ṣudūrikum
فِى صُدُورِكُمْ
(that is) in your breasts;
உங்கள் நெஞ்சங்களில் உள்ள
waʿalayhā
وَعَلَيْهَا
and upon them
இன்னும் அவற்றின் மீது(ம்)
waʿalā l-ful'ki
وَعَلَى ٱلْفُلْكِ
and upon the ships
கப்பலின் மீதும்
tuḥ'malūna
تُحْمَلُونَ
you are carried
நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்

Transliteration:

Wa lakum feehaa manaafi'u wa litablughoo 'alaihaa haajatan fee sudoorikum wa 'alaihaa wa 'alal fulki tuhmaloon (QS. Ghāfir:80)

English Sahih International:

And for you therein are [other] benefits and that you may realize upon them a need which is in your breasts; and upon them and upon ships you are carried. (QS. Ghafir, Ayah ௮௦)

Abdul Hameed Baqavi:

அவற்றில் உங்களுக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன. உங்கள் மனதிலுள்ள கோரிக்கைகளை நீங்கள் அடைவதற்காக அதன் மீதும் கப்பலின் மீதும், (பல இடங்களுக்கும்) நீங்கள் சுமந்துகொண்டு செல்லப்படுகின்றீர்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௮௦)

Jan Trust Foundation

இன்னும், அவற்றில் உங்களுக்கு (வேறு பல) பயன்களும் இருக்கின்றன; மேலும் உங்கள் உள்ளங்களிலுள்ள விருப்பங்களை அதனால் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் உங்களுக்கு அவற்றில் பல பலன்கள் உள்ளன. இன்னும் உங்கள் நெஞ்சங்களில் உள்ள ஓர் ஆசையை அதன் மூலம் நீங்கள் அடைவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த கால்நடைகளைப் படைத்தான்). இன்னும் அவற்றின் மீதும் கப்பலின் மீதும் நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள். (அவை உங்களை சுமந்து செல்கின்றன. நீங்கள் அவற்றில் பயணம் செய்கிறீர்கள்.)