குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௭௫
Qur'an Surah Ghafir Verse 75
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ذٰلِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَمْرَحُوْنَ (غافر : ٤٠)
- dhālikum bimā kuntum
- ذَٰلِكُم بِمَا كُنتُمْ
- "That was because you used (to)
- இது/நீங்கள் இருந்த காரணத்தாலும்
- tafraḥūna
- تَفْرَحُونَ
- rejoice
- மகிழ்ச்சி அடைபவர்களாக
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- bighayri l-ḥaqi
- بِغَيْرِ ٱلْحَقِّ
- without right
- அநியாயத்தைக் கொண்டு
- wabimā kuntum
- وَبِمَا كُنتُمْ
- and because you used (to)
- நீங்கள் இருந்த காரணத்தாலும்
- tamraḥūna
- تَمْرَحُونَ
- be insolent
- மமதை கொள்பவர்களாக
Transliteration:
Zaalikum bimaa kuntum tafrahoona fil ardi bighairil haqqi wa bimaa kuntum tamrahoon(QS. Ghāfir:75)
English Sahih International:
[The angels will say], "That was because you used to exult upon the earth without right and you used to behave insolently. (QS. Ghafir, Ayah ௭௫)
Abdul Hameed Baqavi:
(பின்னர் அவர்களை நோக்கி) "பூமியில் நீங்கள் செய்த உண்மையற்றதைக் கொண்டு அளவுகடந்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்ததாலும், இறுமாப்போடு இருந்ததாலும் இதுவே உங்களுக்கு (தகுமான கூலியாகும்)" என்றும், (ஸூரத்துல் முஃமின், வசனம் ௭௫)
Jan Trust Foundation
“இது, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் (பெருமையடித்து) மகிழ்ந்து பூரித்துக் கொண்டிருந்தீர்களே (அதற்கான தண்டனையாகும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இது (-அல்லாஹ் உங்களை வேதனை செய்தது), பூமியில் அநியாயத்தை (பாவங்களை)க் கொண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைபவர்களாக இருந்த காரணத்தாலும், மமதை கொள்பவர்களாக நீங்கள் இருந்த காரணத்தாலும் ஆகும்.