குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௭௪
Qur'an Surah Ghafir Verse 74
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مِنْ دُوْنِ اللّٰهِ ۗقَالُوْا ضَلُّوْا عَنَّا بَلْ لَّمْ نَكُنْ نَّدْعُوْا مِنْ قَبْلُ شَيْـًٔاۚ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ الْكٰفِرِيْنَ (غافر : ٤٠)
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِۖ
- Other than Other than Allah?"
- அல்லாஹ்வையன்றி
- qālū
- قَالُوا۟
- They will say
- அவர்கள் கூறுவார்கள்
- ḍallū
- ضَلُّوا۟
- "They have departed
- அவை தவறிவிட்டன
- ʿannā
- عَنَّا
- from us
- எங்களை விட்டும்
- bal lam nakun
- بَل لَّمْ نَكُن
- Nay! Not we used
- மாறாக/நாங்கள் இருக்கவில்லையே!”
- nadʿū
- نَّدْعُوا۟
- [we] (to) call
- நாங்கள் வணங்குகின்றவர்களாக
- min qablu
- مِن قَبْلُ
- before before
- இதற்கு முன்னர்
- shayan
- شَيْـًٔاۚ
- anything"
- எதையும்
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இவ்வாறுதான்
- yuḍillu
- يُضِلُّ
- Allah lets go astray
- வழிகெடுக்கின்றான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah lets go astray
- அல்லாஹ்
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- the disbelievers
- நிராகரிப்பாளர்களை
Transliteration:
Min doonil laahi qaaloo dalloo 'annaa bal lam nakun nad'oo min qablu shai'aa; kazaalika yudillul laahul kaafireen(QS. Ghāfir:74)
English Sahih International:
Other than Allah?" They will say, "They have departed from us; rather, we did not used to invoke previously anything." Thus does Allah put astray the disbelievers. (QS. Ghafir, Ayah ௭௪)
Abdul Hameed Baqavi:
அதற்கவர்கள், "அவைகளெல்லாம் எங்களை விட்டும் மறைந்துவிட்டன. இதற்கு முன்னர் நாம் (அல்லாஹ் அல்லாத) யாதொன்றையுமே அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!" என்று (பொய்) கூறுவார்கள். இவ்வாறு நிராகரிப்பவர்களுக்கு(ப் புத்தி) தடுமாறும்படி அல்லாஹ் செய்துவிடுவான். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௭௪)
Jan Trust Foundation
“அல்லாஹ்வையன்றி” (நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே என்று கேட்கப்பட்டதும்)| “அவை எங்களை விட்டும் மறைந்து விட்டன; அன்றியும் முன்னர் நாங்கள் (அல்லாஹ்வைத் தவிர எதையும்) அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!” என்று கூறுவார்கள். இவ்வாறுதான் காஃபிர்களை அல்லாஹ் வழி கெடச் செய்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வை அன்றி (நீங்கள் வணங்கிவை எங்கே?). அவர்கள் கூறுவார்கள்: “அவை எங்களை விட்டும் தவறிவிட்டன. மாறாக, இதற்கு முன்னர் நாங்கள் எதையும் வணங்குகின்றவர்களாக இருக்கவில்லையே! (என்றும் கூறுவார்கள்)” இவ்வாறுதான் அல்லாஹ் நிராகரிப்பாளர்களை வழிகெடுக்கின்றான்.