Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௬௬

Qur'an Surah Ghafir Verse 66

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ قُلْ اِنِّيْ نُهِيْتُ اَنْ اَعْبُدَ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَمَّا جَاۤءَنِيَ الْبَيِّنٰتُ مِنْ رَّبِّيْ وَاُمِرْتُ اَنْ اُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِيْنَ (غافر : ٤٠)

qul
قُلْ
Say
கூறுவீராக!
innī
إِنِّى
"Indeed, I
நிச்சயமாக நான்
nuhītu
نُهِيتُ
[I] have been forbidden
தடுக்கப்பட்டு விட்டேன்
an aʿbuda
أَنْ أَعْبُدَ
to worship
நான் வணங்குவதற்கு
alladhīna tadʿūna
ٱلَّذِينَ تَدْعُونَ
those whom you call
நீங்கள் பிரார்த்திக்கின்றவர்களை
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
besides besides Allah
அல்லாஹ்வையன்றி
lammā jāaniya
لَمَّا جَآءَنِىَ
when have come to me
என்னிடம்வந்துவிட்டபோது
l-bayinātu
ٱلْبَيِّنَٰتُ
the clear proofs
தெளிவான அத்தாட்சிகள்
min rabbī
مِن رَّبِّى
from my Lord
என் இறைவனிடமிருந்து
wa-umir'tu
وَأُمِرْتُ
and I am commanded
நான் ஆணை இடப்பட்டுள்ளேன்
an us'lima
أَنْ أُسْلِمَ
to submit
நான் முற்றிலும் பணிந்து நடக்கவேண்டும்
lirabbi
لِرَبِّ
to (the) Lord
இறைவனுக்கு
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds
அகிலங்களின்

Transliteration:

Qul innee nuheetu an a'budal lazeena tad'oona min doonil laahi lammaa jaaa'a niyal biyinaatu mir Rabbee wa umirtu an uslima li Rabbil 'aalameen (QS. Ghāfir:66)

English Sahih International:

Say, [O Muhammad], "Indeed, I have been forbidden to worship those you call upon besides Allah once the clear proofs have come to me from my Lord, and I have been commanded to submit to the Lord of the worlds." (QS. Ghafir, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் என்னிடம் வந்ததன் பின்னர், அல்லாஹ்வையன்றி நீங்கள் (இறைவனென) அழைப்பவைகளை நான் வணங்கக்கூடாதென்று நிச்சயமாகத் தடுக்கப்பட்டுள்ளேன். அன்றி, உலகத்தாரின் (அல்லாஹ்வாகிய) இறைவனுக்கே நான் முற்றிலும் வழிபட்டு நடக்கும்படியும் ஏவப்பட்டுள்ளேன்" (என்றும் கூறுங்கள்.) (ஸூரத்துல் முஃமின், வசனம் ௬௬)

Jan Trust Foundation

(நபியே!) கூறுவீராக| “என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் - அன்றியும் - அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே) நீர் கூறுவீராக! என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் வந்துவிட்ட போது, நிச்சயமாக நான் அல்லாஹ்வை அன்றி நீங்கள் பிரார்த்திக்கின்றவர்களை (-வணங்குகின்றவர்களை) நான் வணங்குவதற்கு தடுக்கப்பட்டு விட்டேன். அகிலங்களின் இறைவனுக்கு நான் முற்றிலும் பணிந்து நடக்கவேண்டும் என்று நான் ஆணை இடப்பட்டுள்ளேன்.