Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௬௫

Qur'an Surah Ghafir Verse 65

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ الْحَيُّ لَآ اِلٰهَ اِلَّا هُوَ فَادْعُوْهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ۗ اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ (غافر : ٤٠)

huwa
هُوَ
He
அவன்தான்
l-ḥayu
ٱلْحَىُّ
(is) the Ever-Living;
என்றும் உயிரோடு இருப்பவன்
لَآ
(there is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā huwa
إِلَّا هُوَ
but He
அவனைத் தவிர
fa-id'ʿūhu
فَٱدْعُوهُ
so call Him
ஆகவே அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்
mukh'liṣīna
مُخْلِصِينَ
(being) sincere
தூய்மைப்படுத்தியவர்களாக
lahu
لَهُ
to Him
அவனுக்கு
l-dīna
ٱلدِّينَۗ
(in) the religion
வழிபாடுகளை
l-ḥamdu
ٱلْحَمْدُ
All praise (be)
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
to Allah
அல்லாஹ்விற்கே
rabbi
رَبِّ
(the) Lord
இறைவனாகிய
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds
அகிலங்களின்

Transliteration:

Huwal Hayyu laaa ilaaha illaa Huwa fad'oohu mukh liseena lahudeen; alhamdu lillaahi Rabbil 'aalameen (QS. Ghāfir:65)

English Sahih International:

He is the Ever-Living; there is no deity except Him, so call upon Him, [being] sincere to Him in religion. [All] praise is [due] to Allah, Lord of the worlds. (QS. Ghafir, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

அவன் நிரந்தரமானவன்; அவனைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை. ஆகவே, அவனுக்கு (மனிதர்களே!) நீங்கள் முற்றிலும் வழிப்பட்டுக் கலப்பற்ற மனதுடன் அவனை அழைப்பீர்களாக! உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அந்த அல்லாஹ்வுக்கு எல்லா புகழும் உரித்தானது" (என்றும் கூறுங்கள்.) (ஸூரத்துல் முஃமின், வசனம் ௬௫)

Jan Trust Foundation

அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் என்றும் உயிரோடு இருப்பவன். வணக்கத்திற்குரிய (இறை)வன் அவனைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள், வழிபாடுகளை அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக. அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.