குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௬௦
Qur'an Surah Ghafir Verse 60
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِيْٓ اَسْتَجِبْ لَكُمْ ۗاِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِيْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ ࣖࣖࣖ (غافر : ٤٠)
- waqāla
- وَقَالَ
- And said
- கூறுகிறான்
- rabbukumu
- رَبُّكُمُ
- your Lord
- உங்கள் இறைவன்
- id'ʿūnī
- ٱدْعُونِىٓ
- "Call upon Me;
- என்னிடம் பிரார்த்தியுங்கள்!
- astajib
- أَسْتَجِبْ
- I will respond
- நான் அங்கீகரிப்பேன்
- lakum
- لَكُمْۚ
- to you
- உங்களுக்கு
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna yastakbirūna
- ٱلَّذِينَ يَسْتَكْبِرُونَ
- those who (are too) proud
- பெருமை அடிப்பவர்கள்
- ʿan ʿibādatī
- عَنْ عِبَادَتِى
- to worship Me
- எனது வணக்க வழிபாடுகளை விட்டு
- sayadkhulūna
- سَيَدْخُلُونَ
- will enter
- நுழைவார்கள்
- jahannama
- جَهَنَّمَ
- Hell
- நரகத்தில்
- dākhirīna
- دَاخِرِينَ
- (in) humiliation"
- சிறுமைப்பட்டவர்களாக
Transliteration:
Wa qaala Rabbukumud 'ooneee astajib lakum; innal lazeena yastakbiroona an 'ibaadatee sa yadkhuloona jahannama daakhireen(QS. Ghāfir:60)
English Sahih International:
And your Lord says, "Call upon Me; I will respond to you." Indeed, those who disdain My worship will enter Hell [rendered] contemptible. (QS. Ghafir, Ayah ௬௦)
Abdul Hameed Baqavi:
உங்கள் இறைவன் கூறுகின்றான்: "நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௬௦)
Jan Trust Foundation
உங்கள் இறைவன் கூறுகிறான்| “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னிடம் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்கு (உங்கள் பிரார்த்தனையை) அங்கீகரிப்பேன். நிச்சயமாக எனது வணக்க வழிபாடுகளை விட்டு பெருமை அடிப்பவர்கள் சிறுமைப்பட்டவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.