Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௫௦

Qur'an Surah Ghafir Verse 50

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْٓا اَوَلَمْ تَكُ تَأْتِيْكُمْ رُسُلُكُمْ بِالْبَيِّنٰتِ ۗقَالُوْا بَلٰىۗ قَالُوْا فَادْعُوْا ۚوَمَا دُعٰۤؤُا الْكٰفِرِيْنَ اِلَّا فِيْ ضَلٰلٍ ࣖ (غافر : ٤٠)

qālū
قَالُوٓا۟
They (will) say
அவர்கள் கூறுவார்கள்
awalam taku tatīkum
أَوَلَمْ تَكُ تَأْتِيكُمْ
"Did there not "Did there not come to you
உங்களிடம் வந்திருக்கவில்லையா?
rusulukum
رُسُلُكُم
your Messengers
உங்கள் தூதர்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِۖ
with clear proofs?"
தெளிவான அத்தாட்சிகளுடன்
qālū
قَالُوا۟
They (will) say
அவர்கள் கூறுவார்கள்
balā
بَلَىٰۚ
"Yes"
ஏன் வரவில்லை!
qālū
قَالُوا۟
They (will) say
அவர்கள் கூறுவார்கள்
fa-id'ʿū
فَٱدْعُوا۟ۗ
"Then call
நீங்கள் பிரார்த்தனை கேளுங்கள்
wamā duʿāu
وَمَا دُعَٰٓؤُا۟
but not (is) the call
பிரார்த்தனை இல்லை
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
(of) the disbelievers
காஃபிர்களின்
illā fī ḍalālin
إِلَّا فِى ضَلَٰلٍ
except in error"
வழிகேட்டில் தவிர

Transliteration:

Qaalooo awalam taku taateekum Rusulukum bilbaiyinaati qaaloo balaa' qaaloo fad'oo; wa maa du'aaa'ul kaafireena illaa fee dalaal (QS. Ghāfir:50)

English Sahih International:

They will say, "Did there not come to you your messengers with clear proofs?" They will say, "Yes." They will reply, "Then supplicate [yourselves], but the supplication of the disbelievers is not except in error [i.e., futility]." (QS. Ghafir, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) "உங்களிடம் வந்த (இறைவனுடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வரவில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கு இவர்கள் "ஆம்! மெய்தான் (வந்தார்கள்)" என்று கூறுவார்கள். அதற்கவர்கள், "அவ்வாறாயின், (நாங்கள் இறைவனிடம் கேட்பதற்கில்லை.) நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்" என்று கூறிவிடுவார்கள். இந்நிராகரிப் பவர்களின் பிரார்த்தனை யாதொரு பயனும் அளிக்காது. (ஸூரத்துல் முஃமின், வசனம் ௫௦)

Jan Trust Foundation

“உங்கள் ரஸூல்கள் (தூதர்கள்) உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?” என (அக்காவலாளிகள்) கேட்பார்கள். “ஆம்! நிச்சயமாக” என அவர்கள் பதில் கூறுவார்கள். “அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று அவர்கள் கூறுவர். ஆனால் காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல் இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுவார்கள்: தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் உங்கள் தூதர்கள் வந்திருக்கவில்லையா? அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ஏன் வரவில்லை! (கண்டிப்பாக வந்தார்கள்.) அவர்கள் கூறுவார்கள்: (உங்கள் அனைவருக்கும்) நீங்கள் பிரார்த்தனை கேளுங்கள். காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் தவிர இல்லை.