Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௪௭

Qur'an Surah Ghafir Verse 47

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ يَتَحَاۤجُّوْنَ فِى النَّارِ فَيَقُوْلُ الضُّعَفٰۤؤُ لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْٓا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِيْبًا مِّنَ النَّارِ (غافر : ٤٠)

wa-idh yataḥājjūna
وَإِذْ يَتَحَآجُّونَ
And when they will dispute
அவர்கள் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும்போது
fī l-nāri
فِى ٱلنَّارِ
in the Fire
நரகத்தில்
fayaqūlu
فَيَقُولُ
then will say
கூறுவார்கள்
l-ḍuʿafāu
ٱلضُّعَفَٰٓؤُا۟
the weak
பலவீனமானவர்கள்
lilladhīna is'takbarū
لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟
to those who were arrogant
பெருமை கொண்டிருந்தவர்களுக்கு
innā kunnā
إِنَّا كُنَّا
"Indeed we [we] were
நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
lakum
لَكُمْ
for you
உங்களை
tabaʿan
تَبَعًا
followers
பின்பற்றுபவர்களாக
fahal antum mugh'nūna
فَهَلْ أَنتُم مُّغْنُونَ
so can you avert
ஆகவே நீங்கள் தடுப்பீர்களா?
ʿannā
عَنَّا
from us
எங்களை விட்டு
naṣīban
نَصِيبًا
a portion
ஒரு பகுதியை
mina l-nāri
مِّنَ ٱلنَّارِ
of the Fire?"
நரகத்தில் இருந்து

Transliteration:

Wa iz yatahaaajjoona fin Naari fa-yaqoolud du'afaaa'u lillazeenas takbarooo innaa kunnaa lakum taba'an fahal antum mughnoona annaa naseebam minan Naar (QS. Ghāfir:47)

English Sahih International:

And [mention] when they will argue within the Fire, and the weak will say to those who had been arrogant, "Indeed, we were [only] your followers, so will you relieve us of a share of the Fire?" (QS. Ghafir, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

நரகத்தில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (அவர்களில் உள்ள) பலவீனமானவர்கள் பெருமையடித்துக் கொண்டிருந்த (தலை)வர்களை நோக்கி "மெய்யாகவே நாங்கள் உங்களையே பின்பற்றியிருந்தோம். இன்றைய தினம் நீங்கள் நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு சிறிதேனும் எங்களைவிட்டு நீங்கள் தடுத்துவிட முடியுமா?" என்று கேட்பார்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௪௭)

Jan Trust Foundation

அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து கொண்டு, பலஹீனர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி| “நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம் - எனவே, எங்களை விட்டும் இந்நெருப்பிலிருந்து ஒரு பகுதியையாவது விலக்கி வைப்பீர்களாக?” என்று அவர்கள் சொல்லும் வேளையை (நினைவுட்டுவீராக!).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் நரகத்தில் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும் போது பலவீனமானவர்கள் பெருமை கொண்டிருந்தவர்களுக்கு கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, நரகத்தில் இருந்து ஒரு பகுதி (கொஞ்சம் வேதனை)யை நீங்கள் எங்களை விட்டு தடுப்பீர்களா?