குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௩௫
Qur'an Surah Ghafir Verse 35
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ۨالَّذِيْنَ يُجَادِلُوْنَ فِيْٓ اٰيٰتِ اللّٰهِ بِغَيْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْۗ كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ وَعِنْدَ الَّذِيْنَ اٰمَنُوْا ۗ كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ (غافر : ٤٠)
- alladhīna yujādilūna
- ٱلَّذِينَ يُجَٰدِلُونَ
- Those who dispute
- எவர்கள்/தர்க்கம் செய்கின்றார்கள்
- fī āyāti
- فِىٓ ءَايَٰتِ
- concerning (the) Signs
- அத்தாட்சிகளில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- bighayri sul'ṭānin
- بِغَيْرِ سُلْطَٰنٍ
- without any authority
- எவ்வித ஆதாரமின்றி
- atāhum
- أَتَىٰهُمْۖ
- (having) come to them
- தங்களிடம் வந்த(து)
- kabura
- كَبُرَ
- (it) is greatly
- மிகப் பெரிய(து)
- maqtan
- مَقْتًا
- (in) hateful
- கோபத்திற்குரியது
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- near Allah near Allah
- அல்லாஹ்விட(மு)ம்
- waʿinda alladhīna āmanū
- وَعِندَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ۚ
- and near those who believe
- நம்பிக்கையாளர்களிடமும்
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இவ்வாறுதான்
- yaṭbaʿu
- يَطْبَعُ
- Allah sets a seal
- முத்திரையிடுகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah sets a seal
- அல்லாஹ்
- ʿalā kulli qalbi
- عَلَىٰ كُلِّ قَلْبِ
- over every heart
- எல்லோருடைய உள்ளத்திலும்
- mutakabbirin
- مُتَكَبِّرٍ
- (of) an arrogant
- பெருமை அடிக்கின்றவர்கள்
- jabbārin
- جَبَّارٍ
- tyrant"
- அநியாயக்காரர்கள்
Transliteration:
Allazeena yujaadiloona feee Aaayaatil laahi bighairi sultaanin ataahum kabura maqtan 'indal laahi wa 'indal lazeena aamanoo; kazaalika yatha'ul laahu 'alaa kulli qalbi mutakabbirin jabbaar(QS. Ghāfir:35)
English Sahih International:
Those who dispute concerning the signs of Allah without an authority having come to them – great is hatred [of them] in the sight of Allah and in the sight of those who have believed. Thus does Allah seal over every heart [belonging to] an arrogant tyrant. (QS. Ghafir, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
எவரேனும் (இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறக்கூடிய யாதொரு ஆதாரமுமின்றியே, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கின்றார்களோ அவர்கள் நஷ்டமடைந்து விடுவார்கள். ஏனென்றால், இது அல்லாஹ் விடத்திலும், நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் பெரும் அருவருப்பானதாகும். இவ்வாறே அல்லாஹ், பெருமை கொள்ளும் வம்பர்களின் உள்ளங்களிலெல்லாம் முத்திரையிட்டு விடுகின்றான்" (என்றும் அவர் கூறினார்). (ஸூரத்துல் முஃமின், வசனம் ௩௫)
Jan Trust Foundation
“(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும்; இவ்வாறே, பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வோர் இருதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்” (என்றும் அவர் கூறினார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்கள் தங்களிடம் வந்த எவ்வித ஆதாரமின்றி அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கின்றார்கள். அல்லாஹ்விடமும் நம்பிக்கையாளர்களிடமும் (இவர்களது செயல்) மிகப் பெரிய கோபத்திற்குரியது. இவ்வாறுதான் பெருமை அடிக்கின்றவர்கள் அநியாயக்காரர்கள் எல்லோருடைய உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரை இடுகின்றான்.