குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௩
Qur'an Surah Ghafir Verse 3
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
غَافِرِ الذَّنْۢبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيْدِ الْعِقَابِ ذِى الطَّوْلِۗ لَآ اِلٰهَ اِلَّا هُوَ ۗاِلَيْهِ الْمَصِيْرُ (غافر : ٤٠)
- ghāfiri
- غَافِرِ
- (The) Forgiver
- மன்னிப்பவன்
- l-dhanbi
- ٱلذَّنۢبِ
- (of) the sin
- பாவங்களை
- waqābili
- وَقَابِلِ
- and (the) Acceptor
- இன்னும் அங்கீகரிப்பவன்
- l-tawbi
- ٱلتَّوْبِ
- (of) [the] repentance
- திருந்தி மன்னிப்புக் கோருவதை
- shadīdi
- شَدِيدِ
- severe
- கடுமையானவன்
- l-ʿiqābi
- ٱلْعِقَابِ
- (in) the punishment
- தண்டிப்பதில்
- dhī l-ṭawli
- ذِى ٱلطَّوْلِۖ
- Owner (of) the abundance Owner (of) the abundance
- அருள் உடையவன்
- lā
- لَآ
- (There is) no
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- god
- வணக்கத்திற்குரியவன்
- illā huwa
- إِلَّا هُوَۖ
- except Him
- அவனைத் தவிர
- ilayhi
- إِلَيْهِ
- to Him
- அவன் பக்கமே
- l-maṣīru
- ٱلْمَصِيرُ
- (is) the final return
- மீளுமிடம்
Transliteration:
Ghaafiriz zambi wa qaabilit tawbi shadeedil 'iqaabi zit tawli laaa ilaaha illaa Huwa ilaihil maseer(QS. Ghāfir:3)
English Sahih International:
The forgiver of sin, acceptor of repentance, severe in punishment, owner of abundance. There is no deity except Him; to Him is the destination. (QS. Ghafir, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
அவன் (குற்றவாளிகளுடைய) மன்னிப்புக் கோரலை அங்கீகரித்து பாவங்களை மன்னிப்பவன். (மனமுரண்டாக குற்றம் புரியும் பாவிகளை) வேதனை செய்வதிலும் கடினமானவன். (நல்லவர்கள் மீது) அருள் புரிபவன். அவனைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறொரு இறைவன் இல்லை. அவனிடம் (அனைவரும் விசாரணைக்காகச்) செல்ல வேண்டியதிருக்கின்றது. (ஸூரத்துல் முஃமின், வசனம் ௩)
Jan Trust Foundation
பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை; அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவன்) பாவங்களை மன்னிப்பவன், (அடியார்கள் பாவங்களைவிட்டு விலகி) திருந்தி மன்னிப்புக் கோருவதை அங்கீகரிப்பவன், தண்டிப்பதில் கடுமையானவன், அருள் உடையவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் அறவே (யாரும்) இல்லை. அவன் பக்கமே மீளுமிடம் இருக்கிறது.