Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௨௭

Qur'an Surah Ghafir Verse 27

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ مُوْسٰىٓ اِنِّيْ عُذْتُ بِرَبِّيْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ ࣖ (غافر : ٤٠)

waqāla
وَقَالَ
And said
கூறினார்
mūsā
مُوسَىٰٓ
Musa
மூஸா
innī
إِنِّى
"Indeed I
நிச்சயமாக நான்
ʿudh'tu
عُذْتُ
[I] seek refuge
பாதுகாவல் தேடுகிறேன்
birabbī
بِرَبِّى
in my Lord
எனது இறைவனிடம்
warabbikum
وَرَبِّكُم
and your Lord
இன்னும் உங்கள் இறைவனிடம்
min kulli
مِّن كُلِّ
from every
எல்லோரை விட்டும்
mutakabbirin
مُتَكَبِّرٍ
arrogant one
பெருமை அடிக்கின்றவன்
lā yu'minu
لَّا يُؤْمِنُ
not who believes
நம்பிக்கைகொள்ள மாட்டான்
biyawmi l-ḥisābi
بِيَوْمِ ٱلْحِسَابِ
(in the) Day (of) the Account"
விசாரணை நாளை

Transliteration:

Wa qaala Moosaaaa innee 'uztu bi Rabbee wa Rabbikum min kulli mutakabbiril laayu'minu bi Yawmil Hisaab (QS. Ghāfir:27)

English Sahih International:

But Moses said, "Indeed, I have sought refuge in my Lord and your Lord from every arrogant one who does not believe in the Day of Account." (QS. Ghafir, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

அதற்கு மூஸா, (அவனை நோக்கி) "கேள்வி கணக்கு(க் கேட்கப்படும்) நாளை நம்பாது, கர்வம்கொண்ட (உங்கள்) அனைவருடைய தீங்கை விட்டும், என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அவன் என்னை பாதுகாத்துக் கொள்ளுமாறு கோருகின்றேன்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௨௭)

Jan Trust Foundation

மூஸா கூறினார்| “கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூஸா கூறினார்: “நிச்சயமாக நான் எனது இறைவனிடம், உங்கள் இறைவனிடம் (அல்லாஹ் ஒருவனிடம்) விசாரணை நாளை (மறுமையை) நம்பிக்கை கொள்ளாத பெருமை அடிக்கின்ற எல்லோரை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.”