Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௨௨

Qur'an Surah Ghafir Verse 22

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ بِاَنَّهُمْ كَانَتْ تَّأْتِيْهِمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَكَفَرُوْا فَاَخَذَهُمُ اللّٰهُ ۗاِنَّهٗ قَوِيٌّ شَدِيْدُ الْعِقَابِ (غافر : ٤٠)

dhālika bi-annahum
ذَٰلِكَ بِأَنَّهُمْ
That (was) because [they]
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
kānat tatīhim
كَانَت تَّأْتِيهِمْ
used to come to them used to come to them
அவர்களிடம் வந்து கொண்டிருந்தார்கள்
rusuluhum
رُسُلُهُم
their Messengers
அவர்களின் தூதர்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
with clear proofs
தெளிவான அத்தாட்சிகளுடன்
fakafarū
فَكَفَرُوا۟
but they disbelieved
ஆனால், அவர்கள் நிராகரித்தார்கள்
fa-akhadhahumu
فَأَخَذَهُمُ
So Allah seized them
ஆகவே தண்டித்தான் அவர்களை
l-lahu
ٱللَّهُۚ
So Allah seized them
அல்லாஹ்
innahu
إِنَّهُۥ
Indeed, He
நிச்சயமாக அவன்
qawiyyun
قَوِىٌّ
(is) All-Strong
வலிமை மிக்கவன்
shadīdu l-ʿiqābi
شَدِيدُ ٱلْعِقَابِ
severe (in) punishment
தண்டிப்பதில் கடுமையானவன்

Transliteration:

Zaalika bi annahum kaanat taateehim Rusuluhum bilbaiyinaati fakafaroo fa akhazahumul laah; innahoo qawiyyun shadeedul 'iqaab (QS. Ghāfir:22)

English Sahih International:

That was because their messengers were coming to them with clear proofs, but they disbelieved, so Allah seized them. Indeed, He is Powerful and severe in punishment. (QS. Ghafir, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்களிடம், தெளிவான அத்தாட்சிகளுடன் நம்முடைய தூதர்கள் வந்து கொண்டிருந்தனர். (அவர்களை) இவர்கள் நிராகரித்துவிட்டனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அவன் மிக பலமுடையவனும், (பாவிகளை) வேதனை செய்வதில் மிக கடினமானவனுமாவான். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௨௨)

Jan Trust Foundation

அது (ஏனெனில்)| நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்கள்; ஆனால், அவர்கள் நிராகரித்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்தான் - நிச்சயமாக (அல்லாஹ்) வலிமை மிக்கவன்; தண்டிப்பதில் கடுமையானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதற்கு காரணம், நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நிராகரித்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களை தண்டித்தான். நிச்சயமாக அவன் வலிமை மிக்கவன், தண்டிப்பதில் கடுமையானவன்.