Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௨௧

Qur'an Surah Ghafir Verse 21

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ اَوَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْ ۗ كَانُوْا هُمْ اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاٰثَارًا فِى الْاَرْضِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ۗوَمَا كَانَ لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ (غافر : ٤٠)

awalam yasīrū
أَوَلَمْ يَسِيرُوا۟
Do not they travel
அவர்கள் சுற்றுப் பயணம் செய்யவி்ல்லையா?
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
fayanẓurū
فَيَنظُرُوا۟
and see
பார்த்திருப்பார்களே!
kayfa kāna
كَيْفَ كَانَ
how was
எப்படி இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
(the) end
முடிவு
alladhīna kānū min qablihim
ٱلَّذِينَ كَانُوا۟ مِن قَبْلِهِمْۚ
(of) those who were before them? before them?
தங்களுக்கு முன்னுள்ளவர்களின்
kānū
كَانُوا۟
They were
இருந்தார்கள்
hum
هُمْ
[they]
அவர்கள்
ashadda
أَشَدَّ
superior
மிகபலசாலிகளாகவும்
min'hum
مِنْهُمْ
to them
இவர்களை விட
quwwatan
قُوَّةً
(in) strength
(உடல்) வலிமையால்
waāthāran
وَءَاثَارًا
and (in) impressions
இன்னும் அடையாளங்களால்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the land
பூமியில்
fa-akhadhahumu
فَأَخَذَهُمُ
but Allah seized them
தண்டித்தான் அவர்களை
l-lahu
ٱللَّهُ
but Allah seized them
அல்லாஹ்
bidhunūbihim
بِذُنُوبِهِمْ
for their sins
அவர்களின் பாவங்களினால்
wamā kāna
وَمَا كَانَ
and not was
இருக்கவில்லை
lahum
لَهُم
for them
அவர்களை
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
against Allah
அல்லாஹ்விடமிருந்து
min wāqin
مِن وَاقٍ
any protector
பாதுகாப்பவர் எவரும்

Transliteration:

Awalam yaseeroo fil ardi fa yanzuroo kaifa kaana 'aaqibatul lazeena kaanoo min qablihim; kaanoo hum ashadda minhum quwwatanw wa aasaaran fil ardi fa akhazahumul laahu bizunoobihim wa maa kaana lahum minal laahi minw waaq (QS. Ghāfir:21)

English Sahih International:

Have they not traveled through the land and observed how was the end of those who were before them? They were greater than them in strength and in impression on the land, but Allah seized them for their sins. And they had not from Allah any protector. (QS. Ghafir, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? (திரிந்திருந்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதைக் கண்டுகொள்வார்கள். (முன்னிருந்த) அவர்களோ, பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் இவர்களைவிட மிகைத்தவர்களாகவே இருந்தனர். (எனினும்,) அவர்களின் பாவத்தின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக்கொண்டான். அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள ஒருவரும் இருக்கவில்லை. (ஸூரத்துல் முஃமின், வசனம் ௨௧)

Jan Trust Foundation

இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்யவில்லையா? (அப்படி செய்திருந்தால்) தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்த்திருப்பார்களே! அவர்கள் இவர்களை விட (உடல்) வலிமையால் மிக பலசாலிகளாகவும் பூமியில் (-மாடமாளிகைகள், தொழிற்சாலைகள் போன்ற) அடையாளங்களால் மிக அதிகமானவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் பாவங்களினால் அல்லாஹ் அவர்களை தண்டித்தான். அல்லாஹ்விடமிருந்து அவர்களை பாதுகாப்பவர் எவரும் இருக்கவில்லை.