Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௧௮

Qur'an Surah Ghafir Verse 18

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنْذِرْهُمْ يَوْمَ الْاٰزِفَةِ اِذِ الْقُلُوْبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِيْنَ ەۗ مَا لِلظّٰلِمِيْنَ مِنْ حَمِيْمٍ وَّلَا شَفِيْعٍ يُّطَاعُۗ (غافر : ٤٠)

wa-andhir'hum
وَأَنذِرْهُمْ
And warn them
அவர்களை நீர் எச்சரிப்பீராக!
yawma l-āzifati
يَوْمَ ٱلْءَازِفَةِ
(of the) Day the Approaching
நெருங்கி வரக்கூடிய நாளைப் பற்றி
idhi l-qulūbu
إِذِ ٱلْقُلُوبُ
when the hearts
போது/உள்ளங்கள்
ladā l-ḥanājiri
لَدَى ٱلْحَنَاجِرِ
(are) at the throats
தொண்டைகளுக்கு அருகில்
kāẓimīna
كَٰظِمِينَۚ
choked
துக்கம் நிறைந்தவர்களாக
mā lilẓẓālimīna
مَا لِلظَّٰلِمِينَ
Not for the wrongdoers
அந்த அநியாயக்காரர்களுக்கு இருக்கமாட்டார்
min ḥamīmin
مِنْ حَمِيمٍ
any intimate friend
நண்பர் எவரும்
walā shafīʿin
وَلَا شَفِيعٍ
and no intercessor
இன்னும் ஒரு பரிந்துரையாளரும் இருக்க மாட்டார்
yuṭāʿu
يُطَاعُ
(who) is obeyed
ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்

Transliteration:

Wa anzirhum yawmal aazifati izil quloobu ladal hanaajiri kaazimeen; maa lizzaalimeena min hameeminw wa laa shafee'iny-yutaa' (QS. Ghāfir:18)

English Sahih International:

And warn them, [O Muhammad], of the Approaching Day, when hearts are at the throats, filled [with distress]. For the wrongdoers there will be no devoted friend and no intercessor [who is] obeyed. (QS. Ghafir, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (அந்நாளில் அவர்களுடைய) உள்ளங்கள் கோபத்தால் அவர்களின் தொண்டைகளை அடைத்துக்கொள்ளும். அநியாயம் செய்பவர் களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்க மாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்க மாட்டார். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௧௮)

Jan Trust Foundation

(நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப்பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக; இருதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்)வேளையில், அநியாயக்காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ, அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நெருங்கி வரக்கூடிய (மறுமை) நாளைப் பற்றி அவர்களை நீர் எச்சரிப்பீராக! உள்ளங்கள் (பயத்தால்) தொண்டைகளுக்கு அருகில் வந்துவிடும் போது அவர்கள் துக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அந்த அநியாயக்காரர்களுக்கு நண்பர் எவரும் இருக்கமாட்டார். (பரிந்துரை) ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு பரிந்துரையாளரும் இருக்க மாட்டார்.