Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௧௫

Qur'an Surah Ghafir Verse 15

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَفِيْعُ الدَّرَجٰتِ ذُو الْعَرْشِۚ يُلْقِى الرُّوْحَ مِنْ اَمْرِهٖ عَلٰى مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ لِيُنْذِرَ يَوْمَ التَّلَاقِۙ (غافر : ٤٠)

rafīʿu
رَفِيعُ
Possessor of the Highest Ranks
உயர்த்தக்கூடியவன்
l-darajāti
ٱلدَّرَجَٰتِ
Possessor of the Highest Ranks
அந்தஸ்துகளை
dhū l-ʿarshi
ذُو ٱلْعَرْشِ
Owner (of) the Throne Owner (of) the Throne
அர்ஷுடையவன்
yul'qī
يُلْقِى
He places
இறக்கினான்
l-rūḥa
ٱلرُّوحَ
the inspiration
வஹ்யை
min amrihi
مِنْ أَمْرِهِۦ
by His Command
தனது கட்டளையை உள்ளடக்கிய
ʿalā man yashāu
عَلَىٰ مَن يَشَآءُ
upon whom He wills
தான் நாடியவர் மீது
min ʿibādihi
مِنْ عِبَادِهِۦ
of His slaves
தனது அடியார்களில்
liyundhira
لِيُنذِرَ
to warn
அவர்எச்சரிப்பதற்காக
yawma l-talāqi
يَوْمَ ٱلتَّلَاقِ
(of the) Day (of) the Meeting
சந்திக்கின்ற நாளைப் பற்றி

Transliteration:

Rafee'ud darajaati zul 'Arshi yulqir rooha min amrihee 'alaa mai yashaaa'u min 'ibaadihee liyunzira yawmat talaaq (QS. Ghāfir:15)

English Sahih International:

[He is] the Exalted above [all] degrees, Owner of the Throne; He places the inspiration of His command [i.e., revelation] upon whom He wills of His servants to warn of the Day of Meeting. (QS. Ghafir, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

அவன் மிக்க உயர்ந்த பதவிகள் உடையவன். அர்ஷுக்கும் சொந்தக்காரன். (தன்னைச்) சந்திக்கும் நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, தன் அடியார்களில் தான் விரும்பிய வர்களின் மீது தன் கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கின்றான். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௧௫)

Jan Trust Foundation

(அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது தன் கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் (அடியார்களின்) அந்தஸ்துகளை உயர்த்தக்கூடியவன், அர்ஷுடையவன். தனது அடியார்களில் தான் நாடியவர் மீது தனது கட்டளையை உள்ளடக்கிய வஹ்யை இறக்கினான் (அவர் உலக மக்கள் எல்லோரும்) சந்திக்கின்ற (மறுமை) நாளைப் பற்றி (அவர்களை) எச்சரிப்பதற்காக (வேதத்தை இறக்கினான்).