Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௧௧

Qur'an Surah Ghafir Verse 11

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا رَبَّنَآ اَمَتَّنَا اثْنَتَيْنِ وَاَحْيَيْتَنَا اثْنَتَيْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوْبِنَا فَهَلْ اِلٰى خُرُوْجٍ مِّنْ سَبِيْلٍ (غافر : ٤٠)

qālū
قَالُوا۟
They (will) say
அவர்கள் கூறுவார்கள்
rabbanā
رَبَّنَآ
"Our Lord!
எங்கள் இறைவா!
amattanā
أَمَتَّنَا
You gave us death
நீ எங்களுக்கு மரணத்தைக் கொடுத்தாய்
ith'natayni
ٱثْنَتَيْنِ
twice
இருமுறை
wa-aḥyaytanā
وَأَحْيَيْتَنَا
and You gave us life
எங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாய்
ith'natayni
ٱثْنَتَيْنِ
twice
இருமுறை
fa-iʿ'tarafnā
فَٱعْتَرَفْنَا
and we confess
நாங்கள் ஒப்புக் கொண்டோம்
bidhunūbinā
بِذُنُوبِنَا
our sins
எங்கள் பாவங்களை
fahal ilā khurūjin
فَهَلْ إِلَىٰ خُرُوجٍ
So is (there) to get out
வெளியேறுவதற்கு ஏதேனும் உண்டா?
min sabīlin
مِّن سَبِيلٍ
any way?"
வழி

Transliteration:

Qaaloo Rabbanaaa amat tanasnataini wa ahyaitanas nataini fa'tarafnaa bizunoo binaa fahal ilaa khuroojim min sabeel (QS. Ghāfir:11)

English Sahih International:

They will say, "Our Lord, You made us lifeless twice and gave us life twice, and we have confessed our sins. So is there to an exit any way?" (QS. Ghafir, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள், "எங்கள் இறைவனே! இருமுறை நீ எங்களை மரணிக்கச் செய்தாய்; இருமுறை நீ எங்களுக்கு உயிர் கொடுத்தாய். நாங்கள் எங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு விண்ணப்பம் செய்கின்றோம். ஆகவே, (இதில் இருந்து நாங்கள்) வெளிப்பட ஏதும் வழி உண்டா?" என்று கேட்பார்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௧௧)

Jan Trust Foundation

அதற்கவர்கள்| “எங்கள் இறைவனே! நீ எங்களை இருமுறை மரணமடையச் செய்தாய்; இருமுறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?” எனக் கூறுவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா! நீ எங்களுக்கு இருமுறை மரணத்தைக் கொடுத்தாய். இருமுறை எங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாய். எங்கள் பாவங்களை நாங்கள் ஒப்புக்கொண்டோம். (நரகத்தில் இருந்து) வெளியேறுவதற்கு ஏதேனும் வழி உண்டா?