Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமின் - Page: 8

Ghafir

(Ghāfir)

௭௧

اِذِ الْاَغْلٰلُ فِيْٓ اَعْنَاقِهِمْ وَالسَّلٰسِلُۗ يُسْحَبُوْنَۙ ٧١

idhi l-aghlālu
إِذِ ٱلْأَغْلَٰلُ
அப்போது சங்கிலிகளும்
fī aʿnāqihim
فِىٓ أَعْنَٰقِهِمْ
அவர்களின் கழுத்துகளில்
wal-salāsilu
وَٱلسَّلَٰسِلُ
இன்னும் விலங்குகளும்
yus'ḥabūna
يُسْحَبُونَ
அவர்கள் இழுக்கப்படுவார்கள்
அவர்களுடைய கழுத்துக்களில் விலங்கிட்டு, சங்கிலிகளால் கட்டப்பட்டு (வேதனை செய்ய) இழுத்துக்கொண்டு போகப் படுவார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௭௧)
Tafseer
௭௨

فِى الْحَمِيْمِ ەۙ ثُمَّ فِى النَّارِ يُسْجَرُوْنَۚ ٧٢

fī l-ḥamīmi
فِى ٱلْحَمِيمِ
கொதிக்கின்ற நீரில்
thumma
ثُمَّ
பிறகு
fī l-nāri
فِى ٱلنَّارِ
நரக நெருப்பில்
yus'jarūna
يُسْجَرُونَ
அவர்கள் எரிக்கப்படுவார்கள்
(அவர்கள்) முதலில் கொதிக்கும் நீரின் பக்கமும், பின்னர் நரகத்திற்கும் (கொண்டு போகப்பட்டு, அதில்) எரிக்கப்படுவார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௭௨)
Tafseer
௭௩

ثُمَّ قِيْلَ لَهُمْ اَيْنَ مَا كُنْتُمْ تُشْرِكُوْنَۙ ٧٣

thumma
ثُمَّ
பிறகு
qīla
قِيلَ
கூறப்படும்
lahum
لَهُمْ
அவர்களிடம்
ayna
أَيْنَ
எங்கே?
mā kuntum tush'rikūna
مَا كُنتُمْ تُشْرِكُونَ
நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை
பின்னர் அவர்களை நோக்கி "(அல்லாஹ்வுக்கு) இணையென்று நீங்கள் கூறிக்கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?" என்று கேட்கப்படும். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௭௩)
Tafseer
௭௪

مِنْ دُوْنِ اللّٰهِ ۗقَالُوْا ضَلُّوْا عَنَّا بَلْ لَّمْ نَكُنْ نَّدْعُوْا مِنْ قَبْلُ شَيْـًٔاۚ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ الْكٰفِرِيْنَ ٧٤

min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِۖ
அல்லாஹ்வையன்றி
qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
ḍallū
ضَلُّوا۟
அவை தவறிவிட்டன
ʿannā
عَنَّا
எங்களை விட்டும்
bal lam nakun
بَل لَّمْ نَكُن
மாறாக/நாங்கள் இருக்கவில்லையே!”
nadʿū
نَّدْعُوا۟
நாங்கள் வணங்குகின்றவர்களாக
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
shayan
شَيْـًٔاۚ
எதையும்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
yuḍillu
يُضِلُّ
வழிகெடுக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
அதற்கவர்கள், "அவைகளெல்லாம் எங்களை விட்டும் மறைந்துவிட்டன. இதற்கு முன்னர் நாம் (அல்லாஹ் அல்லாத) யாதொன்றையுமே அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!" என்று (பொய்) கூறுவார்கள். இவ்வாறு நிராகரிப்பவர்களுக்கு(ப் புத்தி) தடுமாறும்படி அல்லாஹ் செய்துவிடுவான். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௭௪)
Tafseer
௭௫

ذٰلِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَمْرَحُوْنَ ٧٥

dhālikum bimā kuntum
ذَٰلِكُم بِمَا كُنتُمْ
இது/நீங்கள் இருந்த காரணத்தாலும்
tafraḥūna
تَفْرَحُونَ
மகிழ்ச்சி அடைபவர்களாக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
bighayri l-ḥaqi
بِغَيْرِ ٱلْحَقِّ
அநியாயத்தைக் கொண்டு
wabimā kuntum
وَبِمَا كُنتُمْ
நீங்கள் இருந்த காரணத்தாலும்
tamraḥūna
تَمْرَحُونَ
மமதை கொள்பவர்களாக
(பின்னர் அவர்களை நோக்கி) "பூமியில் நீங்கள் செய்த உண்மையற்றதைக் கொண்டு அளவுகடந்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்ததாலும், இறுமாப்போடு இருந்ததாலும் இதுவே உங்களுக்கு (தகுமான கூலியாகும்)" என்றும், ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௭௫)
Tafseer
௭௬

اُدْخُلُوْٓا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ۚفَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِيْنَ ٧٦

ud'khulū
ٱدْخُلُوٓا۟
நீங்கள் நுழையுங்கள்!
abwāba
أَبْوَٰبَ
வாசல்களில்
jahannama
جَهَنَّمَ
நரகத்தின்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக
fīhā
فِيهَاۖ
அதில்
fabi'sa
فَبِئْسَ
மிகக் கெட்டது
mathwā
مَثْوَى
தங்குமிடம்
l-mutakabirīna
ٱلْمُتَكَبِّرِينَ
பெருமையடிப்பவர்களின்
"நீங்கள் நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள். அதில் என்றென்றும் தங்கி விடுங்கள்" (என்றும் கூறப்படும்). கர்வம் கொண்ட இவர்கள் தங்குமிடம் மிகக் கெட்டது. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௭௬)
Tafseer
௭௭

فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚفَاِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِيْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّيَنَّكَ فَاِلَيْنَا يُرْجَعُوْنَ ٧٧

fa-iṣ'bir
فَٱصْبِرْ
ஆகவே, பொறுமையாக இருப்பீராக!
inna waʿda
إِنَّ وَعْدَ
நிச்சயமாக வாக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ḥaqqun
حَقٌّۚ
உண்மையானதே!
fa-immā nuriyannaka
فَإِمَّا نُرِيَنَّكَ
ஒன்று/நாம் உங்களுக்கு காண்பிப்போம்
baʿḍa
بَعْضَ
சிலதை
alladhī naʿiduhum
ٱلَّذِى نَعِدُهُمْ
அவர்களை நாம் எச்சரித்தவற்றில்
aw natawaffayannaka
أَوْ نَتَوَفَّيَنَّكَ
அல்லது/ உம்மை உயிர் கைப்பற்றிக் கொள்வோம்
fa-ilaynā
فَإِلَيْنَا
நம் பக்கம்தான்
yur'jaʿūna
يُرْجَعُونَ
அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்
(நபியே!) நீங்கள் பொறுமையுடன் உறுதியாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. அவர்களுக்கு பயமுறுத்தப்பட்ட வேதனைகளில் சிலவற்றை (உங்களது வாழ்நாளில்) நாம் உங்களுக்குக் காண்பித்தாலும் சரி அல்லது (அவை வருவதற்கு முன்னதாகவே) நாம் உங்களைக் கைப்பற்றி (நீங்கள் இறந்து) விட்டாலும் சரி (எவ்விதத்திலும்,) நிச்சயமாக அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௭௭)
Tafseer
௭௮

وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ مِنْهُمْ مَّنْ قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُمْ مَّنْ لَّمْ نَقْصُصْ عَلَيْكَ ۗوَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّأْتِيَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۚفَاِذَا جَاۤءَ اَمْرُ اللّٰهِ قُضِيَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُوْنَ ࣖ ٧٨

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
rusulan
رُسُلًا
பல தூதர்களை
min qablika
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
min'hum
مِنْهُم
அவர்களில்
man
مَّن
எவரை (சிலரை)
qaṣaṣnā
قَصَصْنَا
நாம் விவரித்தோம்
ʿalayka
عَلَيْكَ
உமக்கு
wamin'hum
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
man
مَّن
எவரை (சிலரை)
lam naqṣuṣ
لَّمْ نَقْصُصْ
நாம்விவரிக்கவில்லை
ʿalayka
عَلَيْكَۗ
உமக்கு
wamā kāna
وَمَا كَانَ
முடியாது
lirasūlin
لِرَسُولٍ
எந்த ஒரு தூதருக்கும்
an yatiya biāyatin
أَن يَأْتِىَ بِـَٔايَةٍ
அவர் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவதற்கு
illā
إِلَّا
தவிர
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டே
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
fa-idhā jāa
فَإِذَا جَآءَ
வந்துவிட்டால்
amru
أَمْرُ
கட்டளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
quḍiya
قُضِىَ
தீர்ப்பளிக்கப்படும்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
நீதமாக
wakhasira
وَخَسِرَ
நஷ்டமடைவார்(கள்)
hunālika
هُنَالِكَ
அப்போது
l-mub'ṭilūna
ٱلْمُبْطِلُونَ
பொய்யர்கள்
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு முன்னர் தூதர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தையே நாம் உங்களுக்குக் கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறவில்லை. (இவ்விரு வகுப்பாரில்) எந்தத் தூதராயினும் சரி, அல்லாஹ்வினுடைய அனுமதியின்றி யாதொரு அத்தாட்சியைக் கொண்டு வருவது அவருக்குச் சாத்தியமானதல்ல. அல்லாஹ் வுடைய கட்டளை வரும் சமயத்தில் (அவர்களுக்கு) நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும். அதனைப் பொய்யாக்கியவர்கள் அந்நேரத்தில் நஷ்டத்திற்கு உள்ளாவார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௭௮)
Tafseer
௭௯

اَللّٰهُ الَّذِيْ جَعَلَ لَكُمُ الْاَنْعَامَ لِتَرْكَبُوْا مِنْهَا وَمِنْهَا تَأْكُلُوْنَۖ ٧٩

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhī
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
jaʿala lakumu
جَعَلَ لَكُمُ
உங்களுக்காக படைத்தான்
l-anʿāma
ٱلْأَنْعَٰمَ
கால்நடைகளை
litarkabū
لِتَرْكَبُوا۟
நீங்கள் வாகனிப்பதற்காக
min'hā
مِنْهَا
அவற்றில்
wamin'hā
وَمِنْهَا
அவற்றில் சிலவற்றை
takulūna
تَأْكُلُونَ
நீங்கள் புசிக்கின்றீர்கள்
அல்லாஹ்தான் உங்களுக்காக ஆடு, மாடு, ஒட்டகங்களைப் படைத்திருக்கின்றான். (அவைகளில்) சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள்; சிலவற்றை நீங்கள் புசிக்கின்றீர்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௭௯)
Tafseer
௮௦

وَلَكُمْ فِيْهَا مَنَافِعُ وَلِتَبْلُغُوْا عَلَيْهَا حَاجَةً فِيْ صُدُوْرِكُمْ وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُوْنَۗ ٨٠

walakum
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
fīhā
فِيهَا
அவற்றில் உள்ளன
manāfiʿu
مَنَٰفِعُ
பல பலன்கள்
walitablughū
وَلِتَبْلُغُوا۟
இன்னும் நீங்கள்அடைவதற்காக
ʿalayhā
عَلَيْهَا
அதன் மூலம்
ḥājatan
حَاجَةً
ஓர் ஆசையை
fī ṣudūrikum
فِى صُدُورِكُمْ
உங்கள் நெஞ்சங்களில் உள்ள
waʿalayhā
وَعَلَيْهَا
இன்னும் அவற்றின் மீது(ம்)
waʿalā l-ful'ki
وَعَلَى ٱلْفُلْكِ
கப்பலின் மீதும்
tuḥ'malūna
تُحْمَلُونَ
நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்
அவற்றில் உங்களுக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன. உங்கள் மனதிலுள்ள கோரிக்கைகளை நீங்கள் அடைவதற்காக அதன் மீதும் கப்பலின் மீதும், (பல இடங்களுக்கும்) நீங்கள் சுமந்துகொண்டு செல்லப்படுகின்றீர்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௮௦)
Tafseer