Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமின் - Page: 7

Ghafir

(Ghāfir)

௬௧

اَللّٰهُ الَّذِيْ جَعَلَ لَكُمُ الَّيْلَ لِتَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ۗاِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ ٦١

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhī
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
jaʿala lakumu
جَعَلَ لَكُمُ
உங்களுக்கு ஆக்கினான்
al-layla
ٱلَّيْلَ
இரவை
litaskunū fīhi
لِتَسْكُنُوا۟ فِيهِ
நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக(வும்)/அதில்
wal-nahāra
وَٱلنَّهَارَ
இன்னும் பகலை
mub'ṣiran
مُبْصِرًاۚ
வெளிச்ச முள்ளதாக(வும்)
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ladhū faḍlin
لَذُو فَضْلٍ
அருளுடையவன்
ʿalā l-nāsi
عَلَى ٱلنَّاسِ
மக்கள் மீது
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
akthara
أَكْثَرَ
அதிகமானவர்கள்
l-nāsi
ٱلنَّاسِ
மனிதர்களில்
lā yashkurūna
لَا يَشْكُرُونَ
நன்றி செலுத்தமாட்டார்கள்
அல்லாஹ்தான், நீங்கள் (இளைப்பாறி) சுகமடைவதற்காக இரவையும், (வெளிச்சத்தால் பலவற்றையும்) நீங்கள் பார்க்கும்படி பகலையும் படைத்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது பேரருள் புரிகின்றான். ஆயினும், மனிதர்களில் பெரும் பாலானவர்கள் நன்றி செலுத்துவதில்லை. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௬௧)
Tafseer
௬௨

ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَيْءٍۘ لَآ اِلٰهَ اِلَّا هُوَ ۖفَاَنّٰى تُؤْفَكُوْنَ ٦٢

dhālikumu l-lahu
ذَٰلِكُمُ ٱللَّهُ
அந்த அல்லாஹ்தான்
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
khāliqu
خَٰلِقُ
படைத்தவன்
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
لَّآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā huwa
إِلَّا هُوَۖ
அவனைத் தவிர
fa-annā tu'fakūna
فَأَنَّىٰ تُؤْفَكُونَ
எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்
உங்களின் இத்தகைய இறைவனான அல்லாஹ்தான் (மற்ற) பொருள்கள் அனைத்தையும் படைப்பவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்? ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௬௨)
Tafseer
௬௩

كَذٰلِكَ يُؤْفَكُ الَّذِيْنَ كَانُوْا بِاٰيٰتِ اللّٰهِ يَجْحَدُوْنَ ٦٣

kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
yu'faku
يُؤْفَكُ
திருப்பப்பட்டார்(கள்)
alladhīna kānū
ٱلَّذِينَ كَانُوا۟
எவர்கள்/இருந்தார்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yajḥadūna
يَجْحَدُونَ
மறுப்பவர்களாக
அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்துக்கொண்டு (முன்னர்) இருந்தவர்களும், இவ்வாறுதான் வெருண்டோடிச் சென்றனர். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௬௩)
Tafseer
௬௪

اَللّٰهُ الَّذِيْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ قَرَارًا وَّالسَّمَاۤءَ بِنَاۤءً وَّصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ ۗذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ۚ فَتَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ ٦٤

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhī
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
jaʿala
جَعَلَ
அமைத்தான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
qarāran
قَرَارًا
வசிப்பதற்கு வசதியாக
wal-samāa
وَٱلسَّمَآءَ
இன்னும் வானத்தை
bināan
بِنَآءً
ஒரு கட்டிடமாக
waṣawwarakum
وَصَوَّرَكُمْ
இன்னும் உங்களை உருவமைத்தான்
fa-aḥsana
فَأَحْسَنَ
அழகாக்கினான்
ṣuwarakum
صُوَرَكُمْ
உங்கள் உருவங்களை
warazaqakum
وَرَزَقَكُم
இன்னும் உங்களுக்கு உணவளித்தான்
mina l-ṭayibāti
مِّنَ ٱلطَّيِّبَٰتِۚ
நல்ல உணவுகளில் இருந்து
dhālikumu l-lahu
ذَٰلِكُمُ ٱللَّهُ
அவன் தான் அல்லாஹ்
rabbukum
رَبُّكُمْۖ
உங்கள் இறைவனாகிய
fatabāraka
فَتَبَارَكَ
மிக்க அருள்வளம் நிறைந்தவன்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
rabbu
رَبُّ
இறைவனாகிய
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை (நீங்கள்) வசித்திருக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, உங்களைச் சித்தரித்து, அழகான கோலத்திலும் உங்களை அமைத்தான். அன்றி, அவனே உங்களுக்கு மேலான உணவு களையும் அளிக்கின்றான். அதே அல்லாஹ்தான் உங்கள் இறைவன். அகிலத்தார்களின் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியம் உடையவன். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௬௪)
Tafseer
௬௫

هُوَ الْحَيُّ لَآ اِلٰهَ اِلَّا هُوَ فَادْعُوْهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ۗ اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ٦٥

huwa
هُوَ
அவன்தான்
l-ḥayu
ٱلْحَىُّ
என்றும் உயிரோடு இருப்பவன்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā huwa
إِلَّا هُوَ
அவனைத் தவிர
fa-id'ʿūhu
فَٱدْعُوهُ
ஆகவே அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்
mukh'liṣīna
مُخْلِصِينَ
தூய்மைப்படுத்தியவர்களாக
lahu
لَهُ
அவனுக்கு
l-dīna
ٱلدِّينَۗ
வழிபாடுகளை
l-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
rabbi
رَبِّ
இறைவனாகிய
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
அவன் நிரந்தரமானவன்; அவனைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை. ஆகவே, அவனுக்கு (மனிதர்களே!) நீங்கள் முற்றிலும் வழிப்பட்டுக் கலப்பற்ற மனதுடன் அவனை அழைப்பீர்களாக! உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அந்த அல்லாஹ்வுக்கு எல்லா புகழும் உரித்தானது" (என்றும் கூறுங்கள்.) ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௬௫)
Tafseer
௬௬

۞ قُلْ اِنِّيْ نُهِيْتُ اَنْ اَعْبُدَ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَمَّا جَاۤءَنِيَ الْبَيِّنٰتُ مِنْ رَّبِّيْ وَاُمِرْتُ اَنْ اُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِيْنَ ٦٦

qul
قُلْ
கூறுவீராக!
innī
إِنِّى
நிச்சயமாக நான்
nuhītu
نُهِيتُ
தடுக்கப்பட்டு விட்டேன்
an aʿbuda
أَنْ أَعْبُدَ
நான் வணங்குவதற்கு
alladhīna tadʿūna
ٱلَّذِينَ تَدْعُونَ
நீங்கள் பிரார்த்திக்கின்றவர்களை
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
lammā jāaniya
لَمَّا جَآءَنِىَ
என்னிடம்வந்துவிட்டபோது
l-bayinātu
ٱلْبَيِّنَٰتُ
தெளிவான அத்தாட்சிகள்
min rabbī
مِن رَّبِّى
என் இறைவனிடமிருந்து
wa-umir'tu
وَأُمِرْتُ
நான் ஆணை இடப்பட்டுள்ளேன்
an us'lima
أَنْ أُسْلِمَ
நான் முற்றிலும் பணிந்து நடக்கவேண்டும்
lirabbi
لِرَبِّ
இறைவனுக்கு
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் என்னிடம் வந்ததன் பின்னர், அல்லாஹ்வையன்றி நீங்கள் (இறைவனென) அழைப்பவைகளை நான் வணங்கக்கூடாதென்று நிச்சயமாகத் தடுக்கப்பட்டுள்ளேன். அன்றி, உலகத்தாரின் (அல்லாஹ்வாகிய) இறைவனுக்கே நான் முற்றிலும் வழிபட்டு நடக்கும்படியும் ஏவப்பட்டுள்ளேன்" (என்றும் கூறுங்கள்.) ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௬௬)
Tafseer
௬௭

هُوَ الَّذِيْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْٓا اَشُدَّكُمْ ثُمَّ لِتَكُوْنُوْا شُيُوْخًا ۚوَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى مِنْ قَبْلُ وَلِتَبْلُغُوْٓا اَجَلًا مُّسَمًّى وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ٦٧

huwa
هُوَ
அவன்
alladhī
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
khalaqakum
خَلَقَكُم
உங்களைப்படைத்தான்
min turābin
مِّن تُرَابٍ
மண்ணிலிருந்து
thumma
ثُمَّ
பிறகு
min nuṭ'fatin
مِن نُّطْفَةٍ
இந்திரியத்தில் இருந்து
thumma min ʿalaqatin
ثُمَّ مِنْ عَلَقَةٍ
பிறகு/இரத்தக் கட்டியில் இருந்து
thumma
ثُمَّ
பிறகு
yukh'rijukum
يُخْرِجُكُمْ
உங்களை வெளிக்கொண்டு வருகிறான்
ṭif'lan
طِفْلًا
குழந்தைகளாக
thumma
ثُمَّ
பிறகு
litablughū
لِتَبْلُغُوٓا۟
நீங்கள் அடைவதற்காக
ashuddakum
أَشُدَّكُمْ
வலிமையை உங்கள்
thumma
ثُمَّ
பிறகு
litakūnū
لِتَكُونُوا۟
நீங்கள்ஆகுவதற்காக
shuyūkhan
شُيُوخًاۚ
வயோதிகர்களாக
waminkum
وَمِنكُم
உங்களில்
man yutawaffā
مَّن يُتَوَفَّىٰ
உயிர் கைப்பற்றப்படுபவரும்
min qablu
مِن قَبْلُۖ
இதற்கு முன்னர்
walitablughū
وَلِتَبْلُغُوٓا۟
இன்னும் நீங்கள் அடைவதற்காக
ajalan
أَجَلًا
ஒரு தவணையை
musamman
مُّسَمًّى
குறிப்பிட்ட(து)
walaʿallakum taʿqilūna
وَلَعَلَّكُمْ تَعْقِلُونَ
இன்னும் நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
அவன்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்தும் பின்னர், ஒரு இந்திரியத்துளியிலிருந்தும், பின்னர், கருவிலிருந்தும் படைத்தான். பிறகு அவனே உங்களை ஒரு சிசுவாகவும் வெளிப்படுத்துகிறான். பின்னர், (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் நீங்கள் முதியோராகின்றீர்கள். இதற்கு முன்னரும் உங்களில் பலர் இறந்துவிடுகின்றனர். ஆயினும், (உங்களில் ஒவ்வொருவரும்) குறிப்பிட்ட தவணையை அடைந்தே தீருகின்றீர்கள். இதனை நீங்கள் அறிந்துகொள்வீர்களாக! ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௬௭)
Tafseer
௬௮

هُوَ الَّذِيْ يُحْيٖ وَيُمِيْتُۚ فَاِذَا قَضٰىٓ اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ ࣖ ٦٨

huwa alladhī
هُوَ ٱلَّذِى
அவன்/ எப்படிப்பட்டவன்
yuḥ'yī
يُحْىِۦ
உயிர்ப்பிக்கின்றான்
wayumītu
وَيُمِيتُۖ
இன்னும் மரணிக்கச் செய்கிறான்
fa-idhā qaḍā
فَإِذَا قَضَىٰٓ
அவன் முடிவு செய்துவிட்டால்
amran
أَمْرًا
ஒரு காரியத்தை
fa-innamā yaqūlu
فَإِنَّمَا يَقُولُ
அவன் கூறுவதெல்லாம்
lahu
لَهُۥ
அதற்கு
kun
كُن
ஆகு
fayakūnu
فَيَكُونُ
உடனே அது ஆகிவிடும்
அவனே உயிர் கொடுக்கின்றான்; உயிர் வாங்குகின்றான். யாதொன்றை(ப் படைக்க) அவன் தீர்மானித்தால் அதனை "ஆகுக" என்று அவன் கூறியவுடன் அது ஆகிவிடுகின்றது. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௬௮)
Tafseer
௬௯

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ يُجَادِلُوْنَ فِيْٓ اٰيٰتِ اللّٰهِ ۗاَنّٰى يُصْرَفُوْنَۚ ٦٩

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
ilā alladhīna yujādilūna
إِلَى ٱلَّذِينَ يُجَٰدِلُونَ
தர்க்கம் செய்கின்றவர்களை
fī āyāti l-lahi
فِىٓ ءَايَٰتِ ٱللَّهِ
அல்லாஹ்வின் வசனங்களில்
annā yuṣ'rafūna
أَنَّىٰ يُصْرَفُونَ
அவர்கள் எவ்வாறு திருப்பப்படுகிறார்கள்
(நபியே!) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாக)த் தர்க்கிப்பவர்கள் எவ்வாறு (உண்மையை விட்டும்) திருப்பப் படுகின்றனர் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௬௯)
Tafseer
௭௦

اَلَّذِيْنَ كَذَّبُوْا بِالْكِتٰبِ وَبِمَآ اَرْسَلْنَا بِهٖ رُسُلَنَا ۗفَسَوْفَ يَعْلَمُوْنَۙ ٧٠

alladhīna kadhabū
ٱلَّذِينَ كَذَّبُوا۟
பொய்ப்பித்தவர்கள்
bil-kitābi
بِٱلْكِتَٰبِ
வேதத்தை(யும்)
wabimā arsalnā
وَبِمَآ أَرْسَلْنَا
இன்னும் /எதைக் கொண்டு/நாம்அனுப்பினோமோ
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
rusulanā
رُسُلَنَاۖ
நமது தூதர்களை
fasawfa yaʿlamūna
فَسَوْفَ يَعْلَمُونَ
விரைவில் அறிந்து கொள்வார்கள்
எவர்கள் (நம்முடைய) இந்த வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்த (வேதத்)தையும் பொய்யாக்கு கின்றனரோ, அவர்கள் (பின்னர் அதனை உண்மை தானென்று) நிச்சயமாக அறிந்துகொள்வார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௭௦)
Tafseer