اِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُوْمُ الْاَشْهَادُۙ ٥١
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- lananṣuru
- لَنَنصُرُ
- உதவுவோம்
- rusulanā
- رُسُلَنَا
- நமது தூதர்களுக்கு(ம்)
- wa-alladhīna āmanū
- وَٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டவர்களுக்கும்
- fī l-ḥayati
- فِى ٱلْحَيَوٰةِ
- வாழ்க்கையிலும்
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- இவ்வுலக
- wayawma
- وَيَوْمَ
- நாளிலும்
- yaqūmu
- يَقُومُ
- நிற்கின்ற
- l-ashhādu
- ٱلْأَشْهَٰدُ
- சாட்சிகள்
நிச்சயமாக நாம் நம்முடைய தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் உதவி செய்வோம். (இவர்களுக்காக) சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௧)Tafseer
يَوْمَ لَا يَنْفَعُ الظّٰلِمِيْنَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْۤءُ الدَّارِ ٥٢
- yawma
- يَوْمَ
- (அந்)நாளில்
- lā yanfaʿu
- لَا يَنفَعُ
- பலனளிக்காது
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களுக்கு
- maʿdhiratuhum
- مَعْذِرَتُهُمْۖ
- அவர்களின் சாக்குபோக்கு(கள்)
- walahumu
- وَلَهُمُ
- இன்னும் அவர்களுக்கு
- l-laʿnatu
- ٱللَّعْنَةُ
- சாபம்தான்
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- sūu l-dāri
- سُوٓءُ ٱلدَّارِ
- கெட்ட வீடும்
அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் கூறும் புகல்கள் ஒன்றுமே பயனளிக்காது. அன்றி, அவர்களுக்கு (இறைவனின்) சாபமும் உண்டு; அவர்களுக்குத் தீய இருப்பிடமும் உண்டு. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௨)Tafseer
وَلَقَدْاٰتَيْنَا مُوْسٰى الْهُدٰى وَاَوْرَثْنَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ الْكِتٰبَۙ ٥٣
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- ātaynā
- ءَاتَيْنَا
- நாம் கொடுத்தோம்
- mūsā
- مُوسَى
- மூஸாவிற்கு
- l-hudā
- ٱلْهُدَىٰ
- நேர்வழியை
- wa-awrathnā
- وَأَوْرَثْنَا
- நாம் வாழையடி வாழையாகக் கொடுத்தோம்
- banī is'rāīla
- بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத் வேதமென்னும்) நேரான வழியைக் கொடுத்து, இஸ்ராயீலின் சந்ததிகளை அவ் வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கி வைத்தோம். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௩)Tafseer
هُدًى وَّذِكْرٰى لِاُولِى الْاَلْبَابِ ٥٤
- hudan
- هُدًى
- நேர்வழியாக(வும்)
- wadhik'rā
- وَذِكْرَىٰ
- உபதேசமாகவும்
- li-ulī l-albābi
- لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
- அறிவுள்ளவர்களுக்கு
அது நேரான வழியாகவும் அறிவுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது. (எனினும், அதனை அவர்கள் சரிவர பின்பற்றவில்லை.) ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௪)Tafseer
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِيِّ وَالْاِبْكَارِ ٥٥
- fa-iṣ'bir
- فَٱصْبِرْ
- ஆகவே, பொறுமை காப்பீராக!
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- waʿda l-lahi
- وَعْدَ ٱللَّهِ
- அல்லாஹ்வின்வாக்கு
- ḥaqqun
- حَقٌّ
- உண்மையானதே!
- wa-is'taghfir
- وَٱسْتَغْفِرْ
- இன்னும் மன்னிப்புக்கேட்பீராக!
- lidhanbika
- لِذَنۢبِكَ
- உமது பாவங்களுக்காக
- wasabbiḥ
- وَسَبِّحْ
- இன்னும் துதிப்பீராக!
- biḥamdi
- بِحَمْدِ
- புகழ்ந்து
- rabbika
- رَبِّكَ
- உமது இறைவனை
- bil-ʿashiyi
- بِٱلْعَشِىِّ
- மாலையிலும்
- wal-ib'kāri
- وَٱلْإِبْكَٰرِ
- காலையிலும்
(நபியே!) நீங்கள் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டு பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. நீங்கள் உங்களுடைய தவறுகளுக்கு மன்னிப்பைக் கோரிக்கொண்டும், காலையிலும், மாலையிலும் உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருப்பீராக! ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௫)Tafseer
اِنَّ الَّذِيْنَ يُجَادِلُوْنَ فِيْٓ اٰيٰتِ اللّٰهِ بِغَيْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ۙاِنْ فِيْ صُدُوْرِهِمْ اِلَّا كِبْرٌ مَّا هُمْ بِبَالِغِيْهِۚ فَاسْتَعِذْ بِاللّٰهِ ۗاِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ ٥٦
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna yujādilūna
- ٱلَّذِينَ يُجَٰدِلُونَ
- தர்க்கம் செய்பவர்கள்
- fī āyāti
- فِىٓ ءَايَٰتِ
- அத்தாட்சிகள் விஷயத்தில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- bighayri sul'ṭānin
- بِغَيْرِ سُلْطَٰنٍ
- எவ்வித ஆதாரமும் இன்றி
- atāhum
- أَتَىٰهُمْۙ
- தங்களிடம் வந்த
- in fī ṣudūrihim
- إِن فِى صُدُورِهِمْ
- அவர்களின் உள்ளங்களில் இல்லை
- illā
- إِلَّا
- தவிர
- kib'run
- كِبْرٌ
- பெருமையை
- mā hum bibālighīhi
- مَّا هُم بِبَٰلِغِيهِۚ
- அவர்கள் அந்த பெருமையை அடையவும் முடியாது
- fa-is'taʿidh
- فَٱسْتَعِذْ
- ஆகவே, நீர் பாதுகாப்புத் தேடுவீராக!
- bil-lahi
- بِٱللَّهِۖ
- அல்லாஹ்விடம்
- innahu huwa
- إِنَّهُۥ هُوَ
- நிச்சயமாக அவன்தான்
- l-samīʿu
- ٱلسَّمِيعُ
- நன்கு செவியுறுபவன்
- l-baṣīru
- ٱلْبَصِيرُ
- உற்று நோக்குபவன்
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் யாதொரு ஆதாரமு மில்லாமல், (இருக்கும் நிலைமையில்) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிக்கின்றார்களோ, அவர்களுடைய உள்ளங்களில் (வெறும்) பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. (அப்பெருமையை) அவர்கள் அடையவும் மாட்டார்கள். ஆகவே, (உங்களை) பாதுகாத்துக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் நீங்கள் கோருங்கள். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறு பவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௬)Tafseer
لَخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ٥٧
- lakhalqu
- لَخَلْقُ
- படைப்பதுதான்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களையும்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- பூமியையும்
- akbaru
- أَكْبَرُ
- மிகப் பெரியது
- min khalqi
- مِنْ خَلْقِ
- படைப்பதைவிட
- l-nāsi
- ٱلنَّاسِ
- மனிதர்களை
- walākinna
- وَلَٰكِنَّ
- என்றாலும்
- akthara
- أَكْثَرَ
- அதிகமானவர்கள்
- l-nāsi
- ٱلنَّاسِ
- மனிதர்களில்
- lā yaʿlamūna
- لَا يَعْلَمُونَ
- அறியமாட்டார்கள்
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பது, (இறந்த) மனிதர்களை (மறு முறை) படைப்பதைவிட நிச்சயமாக மிகப் பெரிய காரியமாகும். ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இவ்வளவுகூட அறிந்து கொள்வதில்லை. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௭)Tafseer
وَمَا يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ەۙ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الْمُسِيْۤئُ ۗقَلِيْلًا مَّا تَتَذَكَّرُوْنَ ٥٨
- wamā yastawī
- وَمَا يَسْتَوِى
- சமமாக மாட்டார்(கள்)
- l-aʿmā
- ٱلْأَعْمَىٰ
- குருடரும்
- wal-baṣīru
- وَٱلْبَصِيرُ
- பார்வையுள்ளவரும்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- walā l-musīu
- وَلَا ٱلْمُسِىٓءُۚ
- இன்னும் கெட்டவர்(கள்)
- qalīlan
- قَلِيلًا
- மிகக் குறைவாகத்தான்
- mā tatadhakkarūna
- مَّا تَتَذَكَّرُونَ
- நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்
குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். (அவ்வாறே) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களும் (நம்பிக்கை கொள்ளாத) பாவிகளும் சமமாக மாட்டார்கள். வெகு சொற்பமாகவே இதனைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௮)Tafseer
اِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ لَّا رَيْبَ فِيْهَا ۖوَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ ٥٩
- inna l-sāʿata
- إِنَّ ٱلسَّاعَةَ
- நிச்சயமாக மறுமை
- laātiyatun
- لَءَاتِيَةٌ
- வந்தே தீரும்
- lā rayba fīhā
- لَّا رَيْبَ فِيهَا
- அதில் எவ்வித சந்தேகமும் இல்லை
- walākinna
- وَلَٰكِنَّ
- என்றாலும்
- akthara
- أَكْثَرَ
- அதிகமானவர்கள்
- l-nāsi
- ٱلنَّاسِ
- மனிதர்களில்
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
விசாரணைக் காலம் நிச்சயமாக வந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) நம்புவதில்லை. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௯)Tafseer
وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِيْٓ اَسْتَجِبْ لَكُمْ ۗاِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِيْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ ࣖࣖࣖ ٦٠
- waqāla
- وَقَالَ
- கூறுகிறான்
- rabbukumu
- رَبُّكُمُ
- உங்கள் இறைவன்
- id'ʿūnī
- ٱدْعُونِىٓ
- என்னிடம் பிரார்த்தியுங்கள்!
- astajib
- أَسْتَجِبْ
- நான் அங்கீகரிப்பேன்
- lakum
- لَكُمْۚ
- உங்களுக்கு
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna yastakbirūna
- ٱلَّذِينَ يَسْتَكْبِرُونَ
- பெருமை அடிப்பவர்கள்
- ʿan ʿibādatī
- عَنْ عِبَادَتِى
- எனது வணக்க வழிபாடுகளை விட்டு
- sayadkhulūna
- سَيَدْخُلُونَ
- நுழைவார்கள்
- jahannama
- جَهَنَّمَ
- நரகத்தில்
- dākhirīna
- دَاخِرِينَ
- சிறுமைப்பட்டவர்களாக
உங்கள் இறைவன் கூறுகின்றான்: "நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௬௦)Tafseer