Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமின் - Page: 5

Ghafir

(Ghāfir)

௪௧

۞ وَيٰقَوْمِ مَا لِيْٓ اَدْعُوْكُمْ اِلَى النَّجٰوةِ وَتَدْعُوْنَنِيْٓ اِلَى النَّارِۗ ٤١

wayāqawmi
وَيَٰقَوْمِ
என் மக்களே
mā lī
مَا لِىٓ
எனக்கு என்ன நேர்ந்தது
adʿūkum
أَدْعُوكُمْ
நான் உங்களை அழைக்கிறேன்
ilā l-najati
إِلَى ٱلنَّجَوٰةِ
பாதுகாக்கப்படுவதற்கு
watadʿūnanī
وَتَدْعُونَنِىٓ
நீங்களோ என்னை அழைக்கின்றீர்கள்
ilā l-nāri
إِلَى ٱلنَّارِ
நரகத்தின் பக்கம்
என்னுடைய மக்களே! எனக்கென்ன, (ஆச்சரியமாக இருக்கிறது!) நானோ உங்களை ஈடேற்றத்திற்கு அழைக்கின்றேன். நீங்கள் என்னை நரகத்திற்கு அழைக்கின்றீர்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௪௧)
Tafseer
௪௨

تَدْعُوْنَنِيْ لِاَكْفُرَ بِاللّٰهِ وَاُشْرِكَ بِهٖ مَا لَيْسَ لِيْ بِهٖ عِلْمٌ وَّاَنَا۠ اَدْعُوْكُمْ اِلَى الْعَزِيْزِ الْغَفَّارِ ٤٢

tadʿūnanī
تَدْعُونَنِى
நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள்
li-akfura
لِأَكْفُرَ
நான் நிராகரிப்பதற்கு(ம்)
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wa-ush'rika bihi
وَأُشْرِكَ بِهِۦ
அவனுக்கு நான் இணைவைப்பதற்கும்
mā laysa lī bihi
مَا لَيْسَ لِى بِهِۦ
எனக்கு அறிவில்லாத ஒன்றை
wa-anā adʿūkum
وَأَنَا۠ أَدْعُوكُمْ
நான்/அழைக்கின்றேன்/உங்களை
ilā l-ʿazīzi
إِلَى ٱلْعَزِيزِ
மிகைத்தவன் பக்கம்
l-ghafāri
ٱلْغَفَّٰرِ
மகா மன்னிப்பாளன்
அன்றி, நான் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு (இறைவனென) நான் நம்பாததை அவனுக்கு இணைவைக்கும்படி என்னை நீங்கள் அழைக்கின்றீர்கள். நானோ, அனைவரையும் மிகைத்தவனும் மிக மன்னிப்புடையவனுமாகிய அவனிடம் உங்களை அழைக்கின்றேன். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௪௨)
Tafseer
௪௩

لَا جَرَمَ اَنَّمَا تَدْعُوْنَنِيْٓ اِلَيْهِ لَيْسَ لَهٗ دَعْوَةٌ فِى الدُّنْيَا وَلَا فِى الْاٰخِرَةِ وَاَنَّ مَرَدَّنَآ اِلَى اللّٰهِ وَاَنَّ الْمُسْرِفِيْنَ هُمْ اَصْحٰبُ النَّارِ ٤٣

lā jarama
لَا جَرَمَ
கண்டிப்பாக
annamā tadʿūnanī
أَنَّمَا تَدْعُونَنِىٓ
நிச்சயமாக/எவை /நீங்கள் அழைக்கின்றீர்கள்/என்னை
ilayhi
إِلَيْهِ
அவற்றின் பக்கம்
laysa lahu
لَيْسَ لَهُۥ
அவற்றுக்கு இல்லை
daʿwatun
دَعْوَةٌ
எவ்வித பிரார்த்தனை
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இவ்வுலகத்திலும்
walā fī l-ākhirati
وَلَا فِى ٱلْءَاخِرَةِ
மறுமையிலும்
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
maraddanā
مَرَدَّنَآ
நாம் திரும்புவது
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்தான்
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-mus'rifīna
ٱلْمُسْرِفِينَ
வரம்புமீறிகள்
hum
هُمْ
அவர்கள்தான்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِ
நரகவாசிகள்
என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி (இறைவனென்று) அழைப்பதற்கு ஒரு சிறிதும் நிச்சயமாக தகுதியற்றது என்பதில் சந்தேகமில்லை. அந்த அல்லாஹ்விடமே நாம் அனைவரும் திரும்பச் செல்வோம் (என்பதிலும் யாதொரு சந்தேகமில்லை). வரம்பு மீறுபவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் (என்பதிலும் யாதொரு சந்தேகமில்லை). ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௪௩)
Tafseer
௪௪

فَسَتَذْكُرُوْنَ مَآ اَقُوْلُ لَكُمْۗ وَاُفَوِّضُ اَمْرِيْٓ اِلَى اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ بَصِيْرٌ ۢبِالْعِبَادِ ٤٤

fasatadhkurūna
فَسَتَذْكُرُونَ
நீங்கள் விரைவில் நினைவு கூர்வீர்கள்
mā aqūlu
مَآ أَقُولُ
நான் கூறுவதை
lakum
لَكُمْۚ
உங்களுக்கு
wa-ufawwiḍu
وَأُفَوِّضُ
இன்னும் நான் ஒப்படைக்கிறேன்
amrī
أَمْرِىٓ
என் காரியத்தை
ilā l-lahi
إِلَى ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
baṣīrun
بَصِيرٌۢ
உற்று நோக்குகின்றான்
bil-ʿibādi
بِٱلْعِبَادِ
அடியார்களை
நான் உங்களுக்குக் கூறுவதன் உண்மையை நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நீங்கள் (அறிந்து) நினைத்துப் பார்ப்பீர்கள். என்னுடைய எல்லா காரியங்களையும் அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றேன். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்" (என்றும் கூறினார்). ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௪௪)
Tafseer
௪௫

فَوَقٰىهُ اللّٰهُ سَيِّاٰتِ مَا مَكَرُوْا وَحَاقَ بِاٰلِ فِرْعَوْنَ سُوْۤءُ الْعَذَابِۚ ٤٥

fawaqāhu
فَوَقَىٰهُ
ஆக, அவரை பாதுகாத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
sayyiāti
سَيِّـَٔاتِ
தீங்குகளை விட்டு
mā makarū
مَا مَكَرُوا۟ۖ
அவர்கள் செய்த சூழ்ச்சிகளின்
waḥāqa
وَحَاقَ
இன்னும் சூழ்ந்துகொண்டது
biāli
بِـَٔالِ
குடும்பத்தார்களை
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னின்
sūu l-ʿadhābi
سُوٓءُ ٱلْعَذَابِ
கெட்ட வேதனை
ஆகவே, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளிலிருந்து அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனை சூழ்ந்துகொண்டது. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௪௫)
Tafseer
௪௬

اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا ۚوَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ ۗ اَدْخِلُوْٓا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ ٤٦

al-nāru
ٱلنَّارُ
நரக நெருப்பாகும்
yuʿ'raḍūna ʿalayhā
يُعْرَضُونَ عَلَيْهَا
அவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள்/அதில்
ghuduwwan
غُدُوًّا
காலையிலும்
waʿashiyyan
وَعَشِيًّاۖ
மாலையிலும்
wayawma taqūmu
وَيَوْمَ تَقُومُ
நாள்/நிகழும்
l-sāʿatu
ٱلسَّاعَةُ
மறுமை
adkhilū
أَدْخِلُوٓا۟
நுழையுங்கள்
āla fir'ʿawna
ءَالَ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை
ashadda
أَشَدَّ
கடுமையான
l-ʿadhābi
ٱلْعَذَابِ
வேதனையில்
காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகின்றனர். மறுமை நாளிலோ, ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௪௬)
Tafseer
௪௭

وَاِذْ يَتَحَاۤجُّوْنَ فِى النَّارِ فَيَقُوْلُ الضُّعَفٰۤؤُ لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْٓا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِيْبًا مِّنَ النَّارِ ٤٧

wa-idh yataḥājjūna
وَإِذْ يَتَحَآجُّونَ
அவர்கள் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும்போது
fī l-nāri
فِى ٱلنَّارِ
நரகத்தில்
fayaqūlu
فَيَقُولُ
கூறுவார்கள்
l-ḍuʿafāu
ٱلضُّعَفَٰٓؤُا۟
பலவீனமானவர்கள்
lilladhīna is'takbarū
لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟
பெருமை கொண்டிருந்தவர்களுக்கு
innā kunnā
إِنَّا كُنَّا
நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
lakum
لَكُمْ
உங்களை
tabaʿan
تَبَعًا
பின்பற்றுபவர்களாக
fahal antum mugh'nūna
فَهَلْ أَنتُم مُّغْنُونَ
ஆகவே நீங்கள் தடுப்பீர்களா?
ʿannā
عَنَّا
எங்களை விட்டு
naṣīban
نَصِيبًا
ஒரு பகுதியை
mina l-nāri
مِّنَ ٱلنَّارِ
நரகத்தில் இருந்து
நரகத்தில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (அவர்களில் உள்ள) பலவீனமானவர்கள் பெருமையடித்துக் கொண்டிருந்த (தலை)வர்களை நோக்கி "மெய்யாகவே நாங்கள் உங்களையே பின்பற்றியிருந்தோம். இன்றைய தினம் நீங்கள் நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு சிறிதேனும் எங்களைவிட்டு நீங்கள் தடுத்துவிட முடியுமா?" என்று கேட்பார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௪௭)
Tafseer
௪௮

قَالَ الَّذِيْنَ اسْتَكْبَرُوْٓا اِنَّا كُلٌّ فِيْهَآ اِنَّ اللّٰهَ قَدْ حَكَمَ بَيْنَ الْعِبَادِ ٤٨

qāla
قَالَ
கூறுவார்(கள்)
alladhīna is'takbarū
ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟
பெருமை அடித்தவர்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kullun
كُلٌّ
எல்லோரும்
fīhā
فِيهَآ
அதில்தான்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
qad ḥakama
قَدْ حَكَمَ
திட்டமாக தீர்ப்பளித்து விட்டான்
bayna l-ʿibādi
بَيْنَ ٱلْعِبَادِ
அடியார்களுக்கு மத்தியில்
அதற்கு, பெருமையடித்துக் கொண்டிருந்த அ(வர்களுடைய தலை)வர்கள், "மெய்யாகவே (நாங்களும், நீங்களும் ஆக) நாம் அனைவரும் நரகத்தில்தான் இருக்கின்றோம். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு(ச் செய்ய வேண்டியதிருந்த) தீர்ப்பைச் செய்து விட்டான். (ஆகவே, உங்களுக்காக நாங்கள் ஒன்றும் உதவி செய்வதற்கில்லை)" என்று கூறுவார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௪௮)
Tafseer
௪௯

وَقَالَ الَّذِيْنَ فِى النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ ٤٩

waqāla
وَقَالَ
கூறுவார்(கள்)
alladhīna fī l-nāri
ٱلَّذِينَ فِى ٱلنَّارِ
நரகத்தில் உள்ளவர்கள்
likhazanati
لِخَزَنَةِ
காவலாளிகளுக்கு
jahannama
جَهَنَّمَ
நரகத்தின்
id'ʿū
ٱدْعُوا۟
அழையுங்கள்!
rabbakum
رَبَّكُمْ
உங்கள் இறைவனை
yukhaffif
يُخَفِّفْ
அவன் இலகுவாக்குவான்
ʿannā
عَنَّا
எங்களை விட்டு
yawman
يَوْمًا
ஒரு நாளாவது
mina l-ʿadhābi
مِّنَ ٱلْعَذَابِ
வேதனையை
பின்னர், நரகத்திலுள்ளவர்கள் நரகத்தின் காவலாளர்களை நோக்கி "வேதனையை ஒரு நாளேனும் எங்களுக்கு இலேசாக்குமாறு உங்கள் இறைவனிடம் நீங்கள் கேளுங்கள்" எனக் கூறுவார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௪௯)
Tafseer
௫௦

قَالُوْٓا اَوَلَمْ تَكُ تَأْتِيْكُمْ رُسُلُكُمْ بِالْبَيِّنٰتِ ۗقَالُوْا بَلٰىۗ قَالُوْا فَادْعُوْا ۚوَمَا دُعٰۤؤُا الْكٰفِرِيْنَ اِلَّا فِيْ ضَلٰلٍ ࣖ ٥٠

qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறுவார்கள்
awalam taku tatīkum
أَوَلَمْ تَكُ تَأْتِيكُمْ
உங்களிடம் வந்திருக்கவில்லையா?
rusulukum
رُسُلُكُم
உங்கள் தூதர்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِۖ
தெளிவான அத்தாட்சிகளுடன்
qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
balā
بَلَىٰۚ
ஏன் வரவில்லை!
qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
fa-id'ʿū
فَٱدْعُوا۟ۗ
நீங்கள் பிரார்த்தனை கேளுங்கள்
wamā duʿāu
وَمَا دُعَٰٓؤُا۟
பிரார்த்தனை இல்லை
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
காஃபிர்களின்
illā fī ḍalālin
إِلَّا فِى ضَلَٰلٍ
வழிகேட்டில் தவிர
அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) "உங்களிடம் வந்த (இறைவனுடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வரவில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கு இவர்கள் "ஆம்! மெய்தான் (வந்தார்கள்)" என்று கூறுவார்கள். அதற்கவர்கள், "அவ்வாறாயின், (நாங்கள் இறைவனிடம் கேட்பதற்கில்லை.) நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்" என்று கூறிவிடுவார்கள். இந்நிராகரிப் பவர்களின் பிரார்த்தனை யாதொரு பயனும் அளிக்காது. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௦)
Tafseer