Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமின் - Page: 4

Ghafir

(Ghāfir)

௩௧

مِثْلَ دَأْبِ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ ۗوَمَا اللّٰهُ يُرِيْدُ ظُلْمًا لِّلْعِبَادِ ٣١

mith'la
مِثْلَ
போன்று
dabi
دَأْبِ
வழமையான வேதனையை
qawmi
قَوْمِ
மக்கள்
nūḥin
نُوحٍ
நூஹூடைய
waʿādin
وَعَادٍ
இன்னும் ஆது
wathamūda
وَثَمُودَ
இன்னும் ஸமூது
wa-alladhīna min baʿdihim
وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْۚ
இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு ஏற்பட்ட
wamā l-lahu
وَمَا ٱللَّهُ
அல்லாஹ் இல்லை
yurīdu
يُرِيدُ
நாடுகின்றவனாக
ẓul'man
ظُلْمًا
அநியாயத்தை
lil'ʿibādi
لِّلْعِبَادِ
அடியார்களுக்கு
(இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய மக்களுக்கும், ஆதுடைய மக்களுக்கும், ஸமூதுடைய மக்களுக்கும், அதற்குப் பின் வந்த மக்களுக்கும் நிகழ்ந்தது போன்ற (ஆபத்)து (உங்களுக்கும்) நிகழ்ந்து விடுமென்று நான் பயப்படுகின்றேன். அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயம் செய்ய விரும்பமாட்டான்" என்றும், ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௩௧)
Tafseer
௩௨

وَيٰقَوْمِ اِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ يَوْمَ التَّنَادِۙ ٣٢

wayāqawmi
وَيَٰقَوْمِ
என் மக்களே
innī akhāfu
إِنِّىٓ أَخَافُ
நிச்சயமாக பயப்படுகிறேன்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
yawma l-tanādi
يَوْمَ ٱلتَّنَادِ
கூவி அழைக்கின்ற நாளை
"என்னுடைய மக்களே! உங்களை(க் கூலி கொடுக்க) அழைக்கப்படும் (மறுமை) நாளைப் பற்றியும் நான் பயப்படுகின்றேன். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௩௨)
Tafseer
௩௩

يَوْمَ تُوَلُّوْنَ مُدْبِرِيْنَۚ مَا لَكُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍۚ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ٣٣

yawma
يَوْمَ
நாளில்
tuwallūna
تُوَلُّونَ
நீங்கள் திரும்புகின்றீர்கள்
mud'birīna
مُدْبِرِينَ
புறமுதுகிட்டவர்களாக
mā lakum
مَا لَكُم
உங்களுக்கு இருக்க மாட்டார்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
min ʿāṣimin
مِنْ عَاصِمٍۗ
எவரும்/ பாதுகாக்கக்கூடியவர்
waman
وَمَن
எவரை
yuḍ'lili
يُضْلِلِ
வழிகெடுத்தானோ
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
famā lahu
فَمَا لَهُۥ
அவருக்கு இல்லை
min hādin
مِنْ هَادٍ
நேர்வழி காட்டுபவர் யாரும்
நீங்கள் (வேதனைக்குப் பயந்து) புறங்காட்டி ஓடும் அந்நாளில், அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றக் கூடியவன் ஒருவனுமில்லை. அல்லாஹ் எவனைத் தப்பான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவனை நேரான வழியில் செலுத்தக் கூடியவன் ஒருவனுமில்லை. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௩௩)
Tafseer
௩௪

وَلَقَدْ جَاۤءَكُمْ يُوْسُفُ مِنْ قَبْلُ بِالْبَيِّنٰتِ فَمَا زِلْتُمْ فِيْ شَكٍّ مِّمَّا جَاۤءَكُمْ بِهٖ ۗحَتّٰىٓ اِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ يَّبْعَثَ اللّٰهُ مِنْۢ بَعْدِهٖ رَسُوْلًا ۗ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابٌۙ ٣٤

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
jāakum
جَآءَكُمْ
உங்களிடம் வந்தார்
yūsufu
يُوسُفُ
யூஸுஃப்
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
famā zil'tum fī shakkin
فَمَا زِلْتُمْ فِى شَكٍّ
ஆனால், நீங்கள் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருந்தீர்கள்
mimmā
مِّمَّا
எதில்
jāakum
جَآءَكُم
உங்களிடம் வந்தார்
bihi
بِهِۦۖ
அதைக் கொண்டு
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā halaka
إِذَا هَلَكَ
அவர் இறந்துவிட்ட போது
qul'tum
قُلْتُمْ
கூறினீர்கள்
lan yabʿatha
لَن يَبْعَثَ
அனுப்பவே மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
rasūlan
رَسُولًاۚ
ஒரு தூதரை
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
yuḍillu
يُضِلُّ
வழிகெடுப்பான்
l-lahu man huwa mus'rifun
ٱللَّهُ مَنْ هُوَ مُسْرِفٌ
அல்லாஹ்/எவர்/அவர்/ வரம்புமீறுபவராக(வும்)
mur'tābun
مُّرْتَابٌ
சந்தேகம் கொள்பவராக(வும்)
இதற்கு முன்னரும், யூஸுஃப் (நபி) மெய்யாகவே தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்தார். அவர் இறந்துவிடும் வரையில், அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகித்துக் கொண்டே இருந்தீர்கள். அவர் இறந்த பின்னரோ, (அவரைப் போற்றிப் புகழ்ந்து, இத்தகைய) யாதொரு தூதரையும் அவருக்குப் பின்னர் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் (என்று கூற முற்பட்டீர்கள்). வரம்பு மீறி (உங்களைப் போல) சந்தேகிப்பவர்களை இவ்வாறே அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறான். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௩௪)
Tafseer
௩௫

ۨالَّذِيْنَ يُجَادِلُوْنَ فِيْٓ اٰيٰتِ اللّٰهِ بِغَيْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْۗ كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ وَعِنْدَ الَّذِيْنَ اٰمَنُوْا ۗ كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ ٣٥

alladhīna yujādilūna
ٱلَّذِينَ يُجَٰدِلُونَ
எவர்கள்/தர்க்கம் செய்கின்றார்கள்
fī āyāti
فِىٓ ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
bighayri sul'ṭānin
بِغَيْرِ سُلْطَٰنٍ
எவ்வித ஆதாரமின்றி
atāhum
أَتَىٰهُمْۖ
தங்களிடம் வந்த(து)
kabura
كَبُرَ
மிகப் பெரிய(து)
maqtan
مَقْتًا
கோபத்திற்குரியது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விட(மு)ம்
waʿinda alladhīna āmanū
وَعِندَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ۚ
நம்பிக்கையாளர்களிடமும்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
yaṭbaʿu
يَطْبَعُ
முத்திரையிடுகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā kulli qalbi
عَلَىٰ كُلِّ قَلْبِ
எல்லோருடைய உள்ளத்திலும்
mutakabbirin
مُتَكَبِّرٍ
பெருமை அடிக்கின்றவர்கள்
jabbārin
جَبَّارٍ
அநியாயக்காரர்கள்
எவரேனும் (இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறக்கூடிய யாதொரு ஆதாரமுமின்றியே, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கின்றார்களோ அவர்கள் நஷ்டமடைந்து விடுவார்கள். ஏனென்றால், இது அல்லாஹ் விடத்திலும், நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் பெரும் அருவருப்பானதாகும். இவ்வாறே அல்லாஹ், பெருமை கொள்ளும் வம்பர்களின் உள்ளங்களிலெல்லாம் முத்திரையிட்டு விடுகின்றான்" (என்றும் அவர் கூறினார்). ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௩௫)
Tafseer
௩௬

وَقَالَ فِرْعَوْنُ يٰهَامٰنُ ابْنِ لِيْ صَرْحًا لَّعَلِّيْٓ اَبْلُغُ الْاَسْبَابَۙ ٣٦

waqāla
وَقَالَ
கூறினான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
yāhāmānu
يَٰهَٰمَٰنُ
ஹாமானே!
ib'ni
ٱبْنِ
கட்டு
لِى
எனக்காக
ṣarḥan
صَرْحًا
ஒரு கோபுரத்தை
laʿallī ablughu
لَّعَلِّىٓ أَبْلُغُ
நான் ஏற வேண்டும்
l-asbāba
ٱلْأَسْبَٰبَ
வாசல்களில்
(அதற்குப் ஃபிர்அவ்ன் தன்னுடைய மந்திரி ஹாமானை நோக்கி,) "ஹாமானே! நான் வானத்தினுடைய வாசலை அடையக்கூடிய உயர்ந்ததொரு கோபுரத்தை நீ எழுப்பு. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௩௬)
Tafseer
௩௭

اَسْبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰٓى اِلٰهِ مُوْسٰى وَاِنِّيْ لَاَظُنُّهٗ كَاذِبًا ۗوَكَذٰلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوْۤءُ عَمَلِهٖ وَصُدَّ عَنِ السَّبِيْلِ ۗوَمَا كَيْدُ فِرْعَوْنَ اِلَّا فِيْ تَبَابٍ ࣖ ٣٧

asbāba
أَسْبَٰبَ
வாசல்களில்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
fa-aṭṭaliʿa
فَأَطَّلِعَ
நான் எட்டிப்பார்க்க வேண்டும்
ilā ilāhi
إِلَىٰٓ إِلَٰهِ
கடவுளை
mūsā
مُوسَىٰ
மூஸாவின்
wa-innī
وَإِنِّى
நிச்சயமாக நான்
la-aẓunnuhu
لَأَظُنُّهُۥ
அவரைக்கருதுகிறேன்
kādhiban
كَٰذِبًاۚ
பொய்யராகவே
wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
zuyyina
زُيِّنَ
அலங்காரமாக்கப் பட்டது
lifir'ʿawna
لِفِرْعَوْنَ
ஃபிர்அவ்னுக்கு
sūu ʿamalihi
سُوٓءُ عَمَلِهِۦ
தீய/அவனது செயல்
waṣudda
وَصُدَّ
இன்னும் அவன் தடுக்கப்பட்டான்
ʿani l-sabīli
عَنِ ٱلسَّبِيلِۚ
நேரான பாதையை விட்டு
wamā kaydu
وَمَا كَيْدُ
சூழ்ச்சி இல்லை
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னின்
illā
إِلَّا
தவிர
fī tabābin
فِى تَبَابٍ
அழிவில்
மூஸாவுடைய ஆண்டவனை நான் பார்க்க வேண்டும். அவர் பொய் சொல்கிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகின்றேன்" என்று கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு, அவனுடைய தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு, நேரான வழியிலிருந்தும் அவன் தடுக்கப்பட்டு விட்டான். ஃபிர்அவ்னுடைய சூழ்ச்சி எல்லாம் (வீண்) அழிவிலே தவிர (வேறொன்றிலும்) இருக்கவில்லை. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௩௭)
Tafseer
௩௮

وَقَالَ الَّذِيْٓ اٰمَنَ يٰقَوْمِ اتَّبِعُوْنِ اَهْدِكُمْ سَبِيْلَ الرَّشَادِۚ ٣٨

waqāla
وَقَالَ
கூறினார்
alladhī āmana
ٱلَّذِىٓ ءَامَنَ
நம்பிக்கை கொண்டவர்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே!
ittabiʿūni
ٱتَّبِعُونِ
என்னை பின்பற்றுங்கள்!
ahdikum
أَهْدِكُمْ
நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன்
sabīla
سَبِيلَ
பாதையை
l-rashādi
ٱلرَّشَادِ
நேரான
அதற்கு, அவர்களில் நம்பிக்கை (கொண்டு தன் நம்பிக்கையை மறைத்துக்) கொண்டிருந்தவர் அவர்களை நோக்கி, "என்னுடைய மக்களே! என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேரான வழியைக் காண்பிப்பேன். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௩௮)
Tafseer
௩௯

يٰقَوْمِ اِنَّمَا هٰذِهِ الْحَيٰوةُ الدُّنْيَا مَتَاعٌ ۖوَّاِنَّ الْاٰخِرَةَ هِيَ دَارُ الْقَرَارِ ٣٩

yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே!
innamā hādhihi l-ḥayatu
إِنَّمَا هَٰذِهِ ٱلْحَيَوٰةُ
இந்த வாழ்க்கை எல்லாம்
l-dun'yā
ٱلدُّنْيَا
உலக
matāʿun
مَتَٰعٌ
அற்ப இன்பம்தான்
wa-inna
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
l-ākhirata hiya
ٱلْءَاخِرَةَ هِىَ
மறுமைதான்
dāru l-qarāri
دَارُ ٱلْقَرَارِ
நிரந்தரமான இல்லம்
என்னுடைய மக்களே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் சொற்ப இன்பம்தான். நிச்சயமாக மறுமை அதுதான் நிலையான (இன்பம் தரும்) வீடு. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௩௯)
Tafseer
௪௦

مَنْ عَمِلَ سَيِّئَةً فَلَا يُجْزٰىٓ اِلَّا مِثْلَهَاۚ وَمَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤىِٕكَ يَدْخُلُوْنَ الْجَنَّةَ يُرْزَقُوْنَ فِيْهَا بِغَيْرِ حِسَابٍ ٤٠

man ʿamila
مَنْ عَمِلَ
யார் செய்வாரோ
sayyi-atan
سَيِّئَةً
ஒரு தீமையை
falā yuj'zā
فَلَا يُجْزَىٰٓ
அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார்
illā
إِلَّا
தவிர
mith'lahā
مِثْلَهَاۖ
அது போன்றதே
waman
وَمَنْ
யார் ஒருவர்
ʿamila
عَمِلَ
செய்வாரோ
ṣāliḥan
صَٰلِحًا
நன்மையை
min dhakarin
مِّن ذَكَرٍ
இல்/ஆண்(கள்)
aw
أَوْ
அல்லது
unthā
أُنثَىٰ
பெண்(கள்)
wahuwa
وَهُوَ
அவர் இருக்கின்ற நிலையில்
mu'minun
مُؤْمِنٌ
நம்பிக்கையாளராக
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
yadkhulūna
يَدْخُلُونَ
நுழைக்கப்படுவார்கள்
l-janata
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
yur'zaqūna fīhā
يُرْزَقُونَ فِيهَا
அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்/அதில்
bighayri ḥisābin
بِغَيْرِ حِسَابٍ
கணக்கின்றி
எவனேனும் தீங்கு செய்தால், அதைப் போன்ற தீங்கே அன்றி (அதற்கதிகமாய்) அவனுக்குக் கூலியாகக் கொடுக்கப்பட மாட்டாது. அன்றி, ஆணோ பெண்ணோ எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ, அத்தகையவர்கள் சுவனபதியில் நுழைந்துவிடுவார்கள். அதில் கணக்கின்றி (அதிகமாகவும்) கொடுக்கப்படுவார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௪௦)
Tafseer