۞ اَوَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْ ۗ كَانُوْا هُمْ اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاٰثَارًا فِى الْاَرْضِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ۗوَمَا كَانَ لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ٢١
- awalam yasīrū
- أَوَلَمْ يَسِيرُوا۟
- அவர்கள் சுற்றுப் பயணம் செய்யவி்ல்லையா?
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- fayanẓurū
- فَيَنظُرُوا۟
- பார்த்திருப்பார்களே!
- kayfa kāna
- كَيْفَ كَانَ
- எப்படி இருந்தது
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- முடிவு
- alladhīna kānū min qablihim
- ٱلَّذِينَ كَانُوا۟ مِن قَبْلِهِمْۚ
- தங்களுக்கு முன்னுள்ளவர்களின்
- kānū
- كَانُوا۟
- இருந்தார்கள்
- hum
- هُمْ
- அவர்கள்
- ashadda
- أَشَدَّ
- மிகபலசாலிகளாகவும்
- min'hum
- مِنْهُمْ
- இவர்களை விட
- quwwatan
- قُوَّةً
- (உடல்) வலிமையால்
- waāthāran
- وَءَاثَارًا
- இன்னும் அடையாளங்களால்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- fa-akhadhahumu
- فَأَخَذَهُمُ
- தண்டித்தான் அவர்களை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bidhunūbihim
- بِذُنُوبِهِمْ
- அவர்களின் பாவங்களினால்
- wamā kāna
- وَمَا كَانَ
- இருக்கவில்லை
- lahum
- لَهُم
- அவர்களை
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடமிருந்து
- min wāqin
- مِن وَاقٍ
- பாதுகாப்பவர் எவரும்
(நபியே!) இவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? (திரிந்திருந்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதைக் கண்டுகொள்வார்கள். (முன்னிருந்த) அவர்களோ, பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் இவர்களைவிட மிகைத்தவர்களாகவே இருந்தனர். (எனினும்,) அவர்களின் பாவத்தின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக்கொண்டான். அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள ஒருவரும் இருக்கவில்லை. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௧)Tafseer
ذٰلِكَ بِاَنَّهُمْ كَانَتْ تَّأْتِيْهِمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَكَفَرُوْا فَاَخَذَهُمُ اللّٰهُ ۗاِنَّهٗ قَوِيٌّ شَدِيْدُ الْعِقَابِ ٢٢
- dhālika bi-annahum
- ذَٰلِكَ بِأَنَّهُمْ
- அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
- kānat tatīhim
- كَانَت تَّأْتِيهِمْ
- அவர்களிடம் வந்து கொண்டிருந்தார்கள்
- rusuluhum
- رُسُلُهُم
- அவர்களின் தூதர்கள்
- bil-bayināti
- بِٱلْبَيِّنَٰتِ
- தெளிவான அத்தாட்சிகளுடன்
- fakafarū
- فَكَفَرُوا۟
- ஆனால், அவர்கள் நிராகரித்தார்கள்
- fa-akhadhahumu
- فَأَخَذَهُمُ
- ஆகவே தண்டித்தான் அவர்களை
- l-lahu
- ٱللَّهُۚ
- அல்லாஹ்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- qawiyyun
- قَوِىٌّ
- வலிமை மிக்கவன்
- shadīdu l-ʿiqābi
- شَدِيدُ ٱلْعِقَابِ
- தண்டிப்பதில் கடுமையானவன்
இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்களிடம், தெளிவான அத்தாட்சிகளுடன் நம்முடைய தூதர்கள் வந்து கொண்டிருந்தனர். (அவர்களை) இவர்கள் நிராகரித்துவிட்டனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அவன் மிக பலமுடையவனும், (பாவிகளை) வேதனை செய்வதில் மிக கடினமானவனுமாவான். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௨)Tafseer
وَلَقَدْ اَرْسَلْنَا مُوسٰى بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ ٢٣
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- அனுப்பினோம்
- mūsā
- مُوسَىٰ
- மூஸாவை
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நமது அத்தாட்சிகளுடன்
- wasul'ṭānin
- وَسُلْطَٰنٍ
- இன்னும் ஆதாரத்துடன்
- mubīnin
- مُّبِينٍ
- தெளிவான
மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய வசனங்களையும் தெளிவான அத்தாட்சிகளையும் கொடுத்து அனுப்பி வைத்தோம். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௩)Tafseer
اِلٰى فِرْعَوْنَ وَهَامٰنَ وَقَارُوْنَ فَقَالُوْا سٰحِرٌ كَذَّابٌ ٢٤
- ilā fir'ʿawna
- إِلَىٰ فِرْعَوْنَ
- ஃபிர்அவ்னிடம்
- wahāmāna
- وَهَٰمَٰنَ
- இன்னும் ஹாமான்
- waqārūna
- وَقَٰرُونَ
- இன்னும் காரூன்
- faqālū
- فَقَالُوا۟
- அவர்கள் கூறினார்கள்
- sāḥirun
- سَٰحِرٌ
- சூனியக்காரர்
- kadhābun
- كَذَّابٌ
- பொய்யர்
ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம் (அவரை அனுப்பி வைத்தோம்.) அதற்கவர்கள் (மூஸாவைப்) "பெரும் பொய் சொல்லும் சூனியக்காரன்" என்று கூறினார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௪)Tafseer
فَلَمَّا جَاۤءَهُمْ بِالْحَقِّ مِنْ عِنْدِنَا قَالُوا اقْتُلُوْٓا اَبْنَاۤءَ الَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ وَاسْتَحْيُوْا نِسَاۤءَهُمْ ۗوَمَا كَيْدُ الْكٰفِرِيْنَ اِلَّا فِيْ ضَلٰلٍ ٢٥
- falammā
- فَلَمَّا
- அவர் வந்த போது
- jāahum
- جَآءَهُم
- அவர்களிடம்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- சத்தியத்தைக்கொண்டு
- min ʿindinā
- مِنْ عِندِنَا
- நம்மிடமிருந்து
- qālū
- قَالُوا۟
- அவர்கள் கூறினார்கள்
- uq'tulū
- ٱقْتُلُوٓا۟
- கொன்று விடுங்கள்!
- abnāa
- أَبْنَآءَ
- ஆண் பிள்ளைகளை
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டவர்களின்
- maʿahu
- مَعَهُۥ
- இவருடன்
- wa-is'taḥyū
- وَٱسْتَحْيُوا۟
- இன்னும் வாழவிடுங்கள்!
- nisāahum
- نِسَآءَهُمْۚ
- பெண்களை அவர்களின்
- wamā kaydu
- وَمَا كَيْدُ
- சூழ்ச்சி இல்லை
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பவர்களின்
- illā
- إِلَّا
- தவிர
- fī ḍalālin
- فِى ضَلَٰلٍ
- வழிகேட்டில்
அவர், அவர்களிடம் நம்முடைய உண்மையான அத்தாட்சிகளைக் கொண்டு சென்ற போதெல்லாம் அதற்கவர்கள், "எவர்கள் (மூஸாவை) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ, அவர்களுடைய ஆண் மக்களை வதை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழ விடுங்கள்" என்று (தன் மக்களுக்குக்) கூறினார்கள். ஆகவே, இந்நிராகரிப்பவர்களின் சூழ்ச்சி வழிகேட்டிலன்றி செல்லவில்லை. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௫)Tafseer
وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِيْٓ اَقْتُلْ مُوْسٰى وَلْيَدْعُ رَبَّهٗ ۚاِنِّيْٓ اَخَافُ اَنْ يُّبَدِّلَ دِيْنَكُمْ اَوْ اَنْ يُّظْهِرَ فِى الْاَرْضِ الْفَسَادَ ٢٦
- waqāla
- وَقَالَ
- கூறினான்
- fir'ʿawnu
- فِرْعَوْنُ
- ஃபிர்அவ்ன்
- dharūnī
- ذَرُونِىٓ
- என்னை விடுங்கள்
- aqtul
- أَقْتُلْ
- கொன்று விடுகிறேன்
- mūsā
- مُوسَىٰ
- மூஸாவை
- walyadʿu
- وَلْيَدْعُ
- அவர் அழைக்கட்டும்
- rabbahu
- رَبَّهُۥٓۖ
- தன் இறைவனை
- innī
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- akhāfu
- أَخَافُ
- பயப்படுகிறேன்
- an yubaddila
- أَن يُبَدِّلَ
- அவர் மாற்றிவிடுவார் என்று
- dīnakum
- دِينَكُمْ
- உங்கள் மார்க்கத்தை
- aw
- أَوْ
- அல்லது
- an yuẓ'hira
- أَن يُظْهِرَ
- உருவாக்கி விடுவார் என்று
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- இந்த பூமியில்
- l-fasāda
- ٱلْفَسَادَ
- குழப்பத்தை
அன்றி, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) "என்னை(த் தடை செய்யாது) விட்டுவிடுங்கள். நான் மூஸாவைக் கொலை செய்து விடுகிறேன். அவர் (தன்னை காத்துக்கொள்ள) தன் இறைவனை அழைக்கட்டும். நிச்சயமாக அவர் உங்களுடைய மார்க்கத்தையே மாற்றி விடக்கூடும்; அல்லது பூமியில் விஷமத்தைப் பரப்பிவிடக்கூடும் என்று நான் பயப்படுகிறேன்" என்றும் கூறினான். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௬)Tafseer
وَقَالَ مُوْسٰىٓ اِنِّيْ عُذْتُ بِرَبِّيْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ ࣖ ٢٧
- waqāla
- وَقَالَ
- கூறினார்
- mūsā
- مُوسَىٰٓ
- மூஸா
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- ʿudh'tu
- عُذْتُ
- பாதுகாவல் தேடுகிறேன்
- birabbī
- بِرَبِّى
- எனது இறைவனிடம்
- warabbikum
- وَرَبِّكُم
- இன்னும் உங்கள் இறைவனிடம்
- min kulli
- مِّن كُلِّ
- எல்லோரை விட்டும்
- mutakabbirin
- مُتَكَبِّرٍ
- பெருமை அடிக்கின்றவன்
- lā yu'minu
- لَّا يُؤْمِنُ
- நம்பிக்கைகொள்ள மாட்டான்
- biyawmi l-ḥisābi
- بِيَوْمِ ٱلْحِسَابِ
- விசாரணை நாளை
அதற்கு மூஸா, (அவனை நோக்கி) "கேள்வி கணக்கு(க் கேட்கப்படும்) நாளை நம்பாது, கர்வம்கொண்ட (உங்கள்) அனைவருடைய தீங்கை விட்டும், என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அவன் என்னை பாதுகாத்துக் கொள்ளுமாறு கோருகின்றேன்" என்று கூறினார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௭)Tafseer
وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌۖ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَكْتُمُ اِيْمَانَهٗٓ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ يَّقُوْلَ رَبِّيَ اللّٰهُ وَقَدْ جَاۤءَكُمْ بِالْبَيِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ۗوَاِنْ يَّكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهٗ ۚوَاِنْ يَّكُ صَادِقًا يُّصِبْكُمْ بَعْضُ الَّذِيْ يَعِدُكُمْ ۗاِنَّ اللّٰهَ لَا يَهْدِيْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ ٢٨
- waqāla
- وَقَالَ
- கூறினார்
- rajulun
- رَجُلٌ
- ஓர் ஆடவர்
- mu'minun
- مُّؤْمِنٌ
- நம்பிக்கைகொண்டவர்
- min āli
- مِّنْ ءَالِ
- குடும்பத்தாரில்
- fir'ʿawna
- فِرْعَوْنَ
- ஃபிர்அவ்னுடைய
- yaktumu
- يَكْتُمُ
- மறைத்தவராக
- īmānahu
- إِيمَٰنَهُۥٓ
- தனது நம்பிக்கையை
- ataqtulūna
- أَتَقْتُلُونَ
- நீங்கள்கொல்கின்றீர்களா?
- rajulan
- رَجُلًا
- ஒரு மனிதரை
- an yaqūla
- أَن يَقُولَ
- கூறியதற்காக
- rabbiya
- رَبِّىَ
- என் இறைவன் என்று
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்தான்
- waqad
- وَقَدْ
- திட்டமாக
- jāakum
- جَآءَكُم
- அவர் கொண்டு வந்திருக்கிறார் உங்களுக்கு
- bil-bayināti
- بِٱلْبَيِّنَٰتِ
- தெளிவான அத்தாட்சிகளை
- min rabbikum
- مِن رَّبِّكُمْۖ
- உங்கள் இறைவனிடமிருந்து
- wa-in yaku
- وَإِن يَكُ
- அவர் இருந்தால்
- kādhiban
- كَٰذِبًا
- பொய்யராக
- faʿalayhi
- فَعَلَيْهِ
- அவருக்குத்தான் கேடாக அமையும்
- kadhibuhu
- كَذِبُهُۥۖ
- அவருடைய பொய்
- wa-in yaku
- وَإِن يَكُ
- அவர் இருந்தால்
- ṣādiqan
- صَادِقًا
- உண்மையாளராக
- yuṣib'kum
- يُصِبْكُم
- உங்களைவந்தடையும்
- baʿḍu
- بَعْضُ
- சில
- alladhī
- ٱلَّذِى
- அவர் எச்சரிப்பதில்
- yaʿidukum
- يَعِدُكُمْۖ
- அவர் எச்சரிப்பதில் உங்களை
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- lā yahdī man huwa
- لَا يَهْدِى مَنْ هُوَ
- நேர்வழி செலுத்தமாட்டான்/எவரை/அவர்
- mus'rifun
- مُسْرِفٌ
- வரம்புமீறுபவராக(வும்)
- kadhābun
- كَذَّابٌ
- பெரும் பொய்யராக(வும்)
ஃபிர்அவ்னுடைய கூட்டத்திலுள்ள ஒரு மனிதர் நம்பிக்கை கொண்டு இருந்தார். அவர் தன்னுடைய நம்பிக்கையை மறைத்துக் கொண்டுமிருந்தார். அவர் (அச்சமயம் அவர்களை நோக்கி,) "அல்லாஹ்தான் என்னுடைய இறைவன் என்று ஒரு மனிதர் கூறியதற்காக அவரை நீங்கள் கொலை செய்துவிடலாமா? அவரோ, உங்கள் இறைவனிடமிருந்து பல தெளிவான அத்தாட்சிகளை மெய்யாகவே உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றார். அவர் பொய் சொல்பவராயிருந்தால், அவர் சொல்லும் பொய்யின் கேடு அவர் மீதே சாரும். (அதனால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை.) அவர் சொல்வது மெய்யாயிருந்து விட்டாலோ, அவர் பயமுறுத்தும் வேதனைகளில் பல உங்களை வந்தடைந்து விடுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறி பொய் சொல்பவர்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்" என்றார். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௮)Tafseer
يٰقَوْمِ لَكُمُ الْمُلْكُ الْيَوْمَ ظَاهِرِيْنَ فِى الْاَرْضِۖ فَمَنْ يَّنْصُرُنَا مِنْۢ بَأْسِ اللّٰهِ اِنْ جَاۤءَنَا ۗقَالَ فِرْعَوْنُ مَآ اُرِيْكُمْ اِلَّا مَآ اَرٰى وَمَآ اَهْدِيْكُمْ اِلَّا سَبِيْلَ الرَّشَادِ ٢٩
- yāqawmi
- يَٰقَوْمِ
- எனது மக்களே!
- lakumu
- لَكُمُ
- உங்களுக்கு
- l-mul'ku
- ٱلْمُلْكُ
- ஆட்சி
- l-yawma
- ٱلْيَوْمَ
- இன்றைய தினம்
- ẓāhirīna
- ظَٰهِرِينَ
- நீங்கள் மிகைத்திருக்கிறீர்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- faman
- فَمَن
- யார்?
- yanṣurunā
- يَنصُرُنَا
- நமக்கு உதவுவார்
- min basi
- مِنۢ بَأْسِ
- தண்டனையில்இருந்து
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- in jāanā
- إِن جَآءَنَاۚ
- நம்மிடம்அதுவந்தால்
- qāla fir'ʿawnu
- قَالَ فِرْعَوْنُ
- ஃபிர்அவ்ன் கூறினான்
- mā urīkum
- مَآ أُرِيكُمْ
- உங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன்
- illā
- إِلَّا
- தவிர
- mā arā
- مَآ أَرَىٰ
- நான் கருதுவதையே
- wamā ahdīkum
- وَمَآ أَهْدِيكُمْ
- உங்களுக்கு நான் வழிகாட்ட மாட்டேன்
- illā sabīla
- إِلَّا سَبِيلَ
- பாதையைத் தவிர
- l-rashādi
- ٱلرَّشَادِ
- நேரான
(அன்றி) "என்னுடைய மக்களே! இன்றைய தினம் அதிகாரம் உங்கள் கையில்தான் இருக்கின்றது. இத்தேசத்தில் (நீங்களே) ஆதிக்கம் வகிக்கின்றீர்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய வேதனை நமக்கு வந்துவிட்டால், (அதனைத் தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?" (என்றும் கூறினார்.) அதற்கு, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) "நான் (சரி என்று) கண்டவைகளை தவிர (வேறொன் றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை. நேரான வழியைத் தவிர மற்றெதனையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை" என்றும் கூறினான். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௯)Tafseer
وَقَالَ الَّذِيْٓ اٰمَنَ يٰقَوْمِ اِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ مِّثْلَ يَوْمِ الْاَحْزَابِۙ ٣٠
- waqāla
- وَقَالَ
- கூறினார்
- alladhī āmana
- ٱلَّذِىٓ ءَامَنَ
- நம்பிக்கை கொண்டவர்
- yāqawmi
- يَٰقَوْمِ
- என் மக்களே!
- innī
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- akhāfu
- أَخَافُ
- பயப்படுகிறேன்
- ʿalaykum
- عَلَيْكُم
- உங்கள் மீது
- mith'la
- مِّثْلَ
- போன்றதை
- yawmi
- يَوْمِ
- நாளை
- l-aḥzābi
- ٱلْأَحْزَابِ
- ராணுவங்களின்
அதற்கு, நம்பிக்கைகொண்(டு தன்னுடைய நம்பிக்கையை மறைத்துக் கொண்)டிருந்த அவர் (அவர்களை நோக்கி,) "என்னுடைய மக்களே! (அழிந்துபோன) மற்ற கூட்டத்தினர்களின் (கெட்ட) நாள்களைப் போன்றவை, உங்கள் மீது வந்துவிடுமென்று நிச்சயமாக நான் பயப்படுகின்றேன். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௩௦)Tafseer