Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமின் - Word by Word

Ghafir

(Ghāfir)

bismillaahirrahmaanirrahiim

حٰمۤ ۚ ١

hha-meem
حمٓ
ஹா மீம்
ஹா; மீம். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௧)
Tafseer

تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْعَلِيْمِۙ ٢

tanzīlu
تَنزِيلُ
இறக்கப்பட்டது
l-kitābi
ٱلْكِتَٰبِ
இந்த வேதம்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
l-ʿalīmi
ٱلْعَلِيمِ
நன்கறிந்தவன்
(இது அனைவரையும்) மிகைத்தவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதம். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨)
Tafseer

غَافِرِ الذَّنْۢبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيْدِ الْعِقَابِ ذِى الطَّوْلِۗ لَآ اِلٰهَ اِلَّا هُوَ ۗاِلَيْهِ الْمَصِيْرُ ٣

ghāfiri
غَافِرِ
மன்னிப்பவன்
l-dhanbi
ٱلذَّنۢبِ
பாவங்களை
waqābili
وَقَابِلِ
இன்னும் அங்கீகரிப்பவன்
l-tawbi
ٱلتَّوْبِ
திருந்தி மன்னிப்புக் கோருவதை
shadīdi
شَدِيدِ
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்
dhī l-ṭawli
ذِى ٱلطَّوْلِۖ
அருள் உடையவன்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā huwa
إِلَّا هُوَۖ
அவனைத் தவிர
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கமே
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடம்
அவன் (குற்றவாளிகளுடைய) மன்னிப்புக் கோரலை அங்கீகரித்து பாவங்களை மன்னிப்பவன். (மனமுரண்டாக குற்றம் புரியும் பாவிகளை) வேதனை செய்வதிலும் கடினமானவன். (நல்லவர்கள் மீது) அருள் புரிபவன். அவனைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறொரு இறைவன் இல்லை. அவனிடம் (அனைவரும் விசாரணைக்காகச்) செல்ல வேண்டியதிருக்கின்றது. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௩)
Tafseer

مَا يُجَادِلُ فِيْٓ اٰيٰتِ اللّٰهِ اِلَّا الَّذِيْنَ كَفَرُوْا فَلَا يَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِى الْبِلَادِ ٤

mā yujādilu
مَا يُجَٰدِلُ
விவாதம் செய்ய மாட்டார்(கள்)
fī āyāti
فِىٓ ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
illā
إِلَّا
தவிர
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களை
falā yaghrur'ka
فَلَا يَغْرُرْكَ
ஆகவே, உம்மை மயக்கிவிட வேண்டாம்
taqallubuhum
تَقَلُّبُهُمْ
அவர்கள் சுற்றித்திரிவது
fī l-bilādi
فِى ٱلْبِلَٰدِ
நகரங்களில்
(நபியே!) நிராகரிப்பவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே! வீணாகத் தர்க்கிக்கும்) அவர்கள் பல நகரங்களிலும் (ஆடம்பரத்துடன் சுகபோகமாகச்) சுற்றித் திரிவது உங்களை மயக்கிவிட வேண்டாம். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௪)
Tafseer

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَّالْاَحْزَابُ مِنْۢ بَعْدِهِمْ ۖوَهَمَّتْ كُلُّ اُمَّةٍۢ بِرَسُوْلِهِمْ لِيَأْخُذُوْهُ وَجَادَلُوْا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ ۗفَكَيْفَ كَانَ عِقَابِ ٥

kadhabat
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
qablahum
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
qawmu
قَوْمُ
மக்களும்
nūḥin
نُوحٍ
நூஹூடைய
wal-aḥzābu
وَٱلْأَحْزَابُ
இராணுவங்களும்
min baʿdihim
مِنۢ بَعْدِهِمْۖ
அவர்களுக்குப் பின்னர்
wahammat
وَهَمَّتْ
இன்னும் நாடினார்கள்
kullu
كُلُّ
எல்லா
ummatin
أُمَّةٍۭ
சமுதாயத்தினரும்
birasūlihim
بِرَسُولِهِمْ
தங்களது தூதரை
liyakhudhūhu
لِيَأْخُذُوهُۖ
அவரைதண்டிப்பதற்கு
wajādalū
وَجَٰدَلُوا۟
இன்னும் தர்க்கம் செய்தனர்
bil-bāṭili
بِٱلْبَٰطِلِ
அசத்தியத்தைக் கொண்டு
liyud'ḥiḍū
لِيُدْحِضُوا۟
அவர்கள் அழிப்பதற்காக
bihi
بِهِ
அதன் மூலம்
l-ḥaqa
ٱلْحَقَّ
சத்தியத்தை
fa-akhadhtuhum
فَأَخَذْتُهُمْۖ
ஆகவே, நான் அவர்களைப் பிடித்தேன்
fakayfa
فَكَيْفَ
எப்படி?
kāna
كَانَ
இருந்தது
ʿiqābi
عِقَابِ
எனது தண்டனை
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் நூஹ்வுடைய மக்களும், அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொரு கூட்டத்தினரும் (நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கித்) தங்களிடம் வந்த தூதர்களிடம் (குற்றம் கண்டு)பிடிக்கவே கருதினார்கள். அன்றி, சத்தியத்தை அழித்து விடுவதற்காகப் பொய்யான விஷயங்களைக் கொண்டு (அவர்களுடன்) தர்க்கித்தார்கள். ஆதலால், அவர்களை நாம் (வேதனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். ஆகவே, (அவர்களுக்கு) எத்தகைய தண்டனை கிடைத்தது என்பதைக் கவனிப்பீராக! ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫)
Tafseer

وَكَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِيْنَ كَفَرُوْٓا اَنَّهُمْ اَصْحٰبُ النَّارِۘ ٦

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
ḥaqqat
حَقَّتْ
உறுதியாகி விட்டது
kalimatu
كَلِمَتُ
வாக்கு
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
ʿalā alladhīna kafarū
عَلَى ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரித்தவர்கள் மீது
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِ
நரகவாசிகள்
இவ்வாறே இந்நிராகரிப்பவர்கள் மீதும், நிச்சயமாக இவர்கள் நரகவாசிகள்தாம் என்ற உங்களது இறைவனின் வாக்கு நிறைவேறியது. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௬)
Tafseer

اَلَّذِيْنَ يَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُوْنَ بِهٖ وَيَسْتَغْفِرُوْنَ لِلَّذِيْنَ اٰمَنُوْاۚ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِيْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِيْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيْمِ ٧

alladhīna yaḥmilūna
ٱلَّذِينَ يَحْمِلُونَ
சுமப்பவர்களும்
l-ʿarsha
ٱلْعَرْشَ
அர்ஷை
waman ḥawlahu
وَمَنْ حَوْلَهُۥ
அதைச் சுற்றி இருப்பவர்களும்
yusabbiḥūna
يُسَبِّحُونَ
துதிக்கின்றனர்
biḥamdi
بِحَمْدِ
புகழை
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
wayu'minūna bihi
وَيُؤْمِنُونَ بِهِۦ
இன்னும் அவனை நம்பிக்கை கொள்கின்றனர்
wayastaghfirūna
وَيَسْتَغْفِرُونَ
இன்னும் பாவமன்னிப்புக் கோருகின்றனர்
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்காக
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
wasiʿ'ta
وَسِعْتَ
நீ விசாலமடைந்து இருக்கின்றாய்
kulla shayin
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
raḥmatan
رَّحْمَةً
கருணையாலும்
waʿil'man
وَعِلْمًا
இன்னும் கல்வியாலும்
fa-igh'fir
فَٱغْفِرْ
ஆகவே மன்னிப்பாயாக!
lilladhīna tābū
لِلَّذِينَ تَابُوا۟
திருந்தி மன்னிப்புக் கோரியவர்களை
wa-ittabaʿū
وَٱتَّبَعُوا۟
இன்னும் பின்பற்றினார்கள்
sabīlaka
سَبِيلَكَ
உனது பாதையை
waqihim
وَقِهِمْ
இன்னும் அவர்களை பாதுகாப்பாயாக!
ʿadhāba
عَذَابَ
வேதனையை விட்டு
l-jaḥīmi
ٱلْجَحِيمِ
நரகத்தின்
எவர்கள், "அர்ஷை" சுமந்து கொண்டும், அதனைச் சூழவும் இருக்கின்றார்களோ அவர்கள், தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் துதி செய்தும், அவனை நம்பிக்கை கொண்டும், நம்பிக்கை கொண்டவர்களின் குற்றங்களை மன்னிக்கும்படி கோரியும் "எங்கள் இறைவனே! நீ ஞானத்தாலும் கருணையாலும் அனைவரையும்விட மிக்க விசாலமானவன். ஆகவே, (பாவங்களை விட்டு) விலகி உன்னுடைய வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னிப்பளித்து, அவர்களை நரக வேதனையில் இருந்து நீ பாதுகாத்துக் கொள்வாயாக!" என்று பிரார்த்தித்துக் கொண்டும், ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௭)
Tafseer

رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ ِۨالَّتِيْ وَعَدْتَّهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَاۤىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ ۗاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُۙ ٨

rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா!
wa-adkhil'hum
وَأَدْخِلْهُمْ
இன்னும் அவர்களை நுழைப்பாயாக!
jannāti
جَنَّٰتِ
சொர்க்கங்களில்
ʿadnin
عَدْنٍ
அத்ன்
allatī waʿadttahum
ٱلَّتِى وَعَدتَّهُمْ
எதை/அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றாய்
waman ṣalaḥa
وَمَن صَلَحَ
நல்லவர்களாக இருந்தவர்களை
min ābāihim
مِنْ ءَابَآئِهِمْ
அவர்களின் பெற்றோர்கள்
wa-azwājihim
وَأَزْوَٰجِهِمْ
அவர்களின் மனைவிகள்
wadhurriyyātihim
وَذُرِّيَّٰتِهِمْۚ
அவர்களின் சந்ததிகளில்
innaka anta
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
"எங்கள் இறைவனே! நீ இவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சுவனபதிகளில் இவர்களையும் இவர்களுடைய மூதாதைகள், இவர்களுடைய மனைவிகள், இவர்களுடைய சந்ததிகள் ஆகிய இவர்களில் உள்ள நல்லவர்களையும் புகுத்துவாயாக! நிச்சயமாக நீ (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத்தையும் அறிந்த) ஞானமுடையவனுமாக இருக்கின்றாய்" என்றும், ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௮)
Tafseer

وَقِهِمُ السَّيِّاٰتِۗ وَمَنْ تَقِ السَّيِّاٰتِ يَوْمَىِٕذٍ فَقَدْ رَحِمْتَهٗ ۗوَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ ࣖ ٩

waqihimu
وَقِهِمُ
இன்னும் அவர்களை பாதுகாப்பாயாக!
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِۚ
தீமைகளை விட்டு
waman taqi
وَمَن تَقِ
நீங்கள் எவரை பாதுகாப்பாயோ
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளை விட்டு
yawma-idhin
يَوْمَئِذٍ
அன்றைய தினம்
faqad
فَقَدْ
திட்டமாக
raḥim'tahu
رَحِمْتَهُۥۚ
அவர் மீது நீ கருணை புரிந்துவிட்டாய்
wadhālika huwa
وَذَٰلِكَ هُوَ
அதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
வெற்றியாகும்
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
மகத்தான
"அவர்களை எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள். அன்றைய தினம் எவர்களை நீ எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக் கொண்டாயோ, அவர்கள் மீது நிச்சயமாக நீ பேரருள் புரிந்துவிட்டாய்" என்று பிரார்த்திப்பார்கள். இதுதான் மிக மகத்தான பெரும் பாக்கியமாகும். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௯)
Tafseer
௧௦

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنَادَوْنَ لَمَقْتُ اللّٰهِ اَكْبَرُ مِنْ مَّقْتِكُمْ اَنْفُسَكُمْ اِذْ تُدْعَوْنَ اِلَى الْاِيْمَانِ فَتَكْفُرُوْنَ ١٠

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பவர்கள்
yunādawna
يُنَادَوْنَ
அழைக்கப்படுவார்கள்
lamaqtu
لَمَقْتُ
கோபிப்பது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
akbaru
أَكْبَرُ
மிகப் பெரியது
min maqtikum
مِن مَّقْتِكُمْ
நீங்கள் கோபிப்பதை விட
anfusakum
أَنفُسَكُمْ
உங்களை
idh tud'ʿawna
إِذْ تُدْعَوْنَ
நீங்கள் அழைக்கப்பட்டபோது
ilā l-īmāni
إِلَى ٱلْإِيمَٰنِ
நம்பிக்கை கொள்வதற்கு
fatakfurūna
فَتَكْفُرُونَ
நிராகரித்தீர்கள்
நிச்சயமாக எவர்கள் நிராகரித்து விட்டார்களோ, அவர்களை நோக்கி, "இன்றைய தினம் நீங்கள் உங்கள் ஆத்மாவை (நிந்தித்துக்) கோபிப்பதைவிட, (உங்கள் மீது) அல்லாஹ்வுடைய (நிந்தனையும்) கோபமும் மிகப் பெரியதாகும். ஏனென்றால், நீங்கள் நம்பிக்கையின் பக்கம் அழைக்கப்பட்ட சமயத்தில், அதனை நிராகரித்துவிட்டீர்கள்" என்று அவர்களை நோக்கிச் சப்தமிட்டுக் கூறப்படும். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௧௦)
Tafseer