குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௯
Qur'an Surah Az-Zumar Verse 9
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَاۤءَ الَّيْلِ سَاجِدًا وَّقَاۤىِٕمًا يَّحْذَرُ الْاٰخِرَةَ وَيَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖۗ قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ ۗ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ ࣖ (الزمر : ٣٩)
- amman huwa qānitun
- أَمَّنْ هُوَ قَٰنِتٌ
- Is (one) who [he] (is) devoutly obedient
- ?/எவர்/அவர்/வணங்கக்கூடியவர்
- ānāa al-layli
- ءَانَآءَ ٱلَّيْلِ
- (during) hours (of) the night
- இரவு நேரங்களில்
- sājidan
- سَاجِدًا
- prostrating
- சிரம் பணிந்தவராக(வும்)
- waqāiman
- وَقَآئِمًا
- and standing
- நின்றவராகவும்
- yaḥdharu
- يَحْذَرُ
- fearing
- பயப்படுகிறார்
- l-ākhirata
- ٱلْءَاخِرَةَ
- the Hereafter
- மறுமையை
- wayarjū
- وَيَرْجُوا۟
- and hoping
- இன்னும் ஆதரவு வைக்கிறார்
- raḥmata
- رَحْمَةَ
- (for the) Mercy
- அருளை
- rabbihi
- رَبِّهِۦۗ
- (of) his Lord?
- தன் இறைவனின்
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக!
- hal yastawī
- هَلْ يَسْتَوِى
- "Are equal
- சமமாவார்களா?
- alladhīna yaʿlamūna
- ٱلَّذِينَ يَعْلَمُونَ
- those who know
- அறிந்தவர்களும்
- wa-alladhīna lā yaʿlamūna
- وَٱلَّذِينَ لَا يَعْلَمُونَۗ
- and those who (do) not know?"
- அறியாதவர்களும்
- innamā yatadhakkaru
- إِنَّمَا يَتَذَكَّرُ
- Only will take heed
- நல்லுபதேசம் பெறுவதெல்லாம்
- ulū l-albābi
- أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
- those of understanding those of understanding
- அறிவுள்ளவர்கள்தான்
Transliteration:
Amman huwa qaanitun aanaaa'al laili saajidanw wa qaaa'imai yahzarul Aakhirata wa yarjoo rahmata Rabbih; qul hal yastawil lazeena ya'lamoona wallazeena laa ya'lamoon; innamaa yatazakkaru ulul albaab(QS. az-Zumar:9)
English Sahih International:
Is one who is devoutly obedient during periods of the night, prostrating and standing [in prayer], fearing the Hereafter and hoping for the mercy of his Lord, [like one who does not]? Say, "Are those who know equal to those who do not know?" Only they will remember [who are] people of understanding. (QS. Az-Zumar, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
எவன் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்த வனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றானோ, (அவன் நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவானா? நபியே!) நீங்கள் கேளுங்கள்: கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தாம். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௯)
Jan Trust Foundation
எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்| “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை ஆதரவு வைத்து, இரவு நேரங்களில் சிரம் பணிந்தவராகவும் நின்றவராகவும் அல்லாஹ்வை வணங்கக்கூடியவர் அல்லாஹ்வை நிராகரிப்பவருக்கு சமமாவாரா? (நபியே!) கூறுவீராக! (அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு கீழ்ப்படிவதில் உள்ள நன்மையை) அறிந்தவர்களும் (அதை) அறியாதவர்களும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவதெல்லாம் அறிவுள்ளவர்கள்தான்.