Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௭௫

Qur'an Surah Az-Zumar Verse 75

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَرَى الْمَلٰۤىِٕكَةَ حَاۤفِّيْنَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْۚ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيْلَ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ࣖ (الزمر : ٣٩)

watarā
وَتَرَى
And you will see
பார்ப்பீர்கள்
l-malāikata
ٱلْمَلَٰٓئِكَةَ
the Angels
வானவர்களை
ḥāffīna
حَآفِّينَ
surrounding
சூழ்ந்தவர்களாக
min ḥawli
مِنْ حَوْلِ
[from] around
சுற்றி
l-ʿarshi
ٱلْعَرْشِ
the Throne
அர்ஷை
yusabbiḥūna
يُسَبِّحُونَ
glorifying
அவர்கள் துதிப்பார்கள்
biḥamdi
بِحَمْدِ
(the) praise
புகழை
rabbihim
رَبِّهِمْۖ
(of) their Lord
தங்கள் இறைவனின்
waquḍiya
وَقُضِىَ
And (will) be judged
தீர்ப்பளிக்கப்படும்
baynahum
بَيْنَهُم
between them
அவர்களுக்கு மத்தியில்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
in truth
சத்தியமான முறையில்
waqīla
وَقِيلَ
and it will be said
கூறப்படும்
l-ḥamdu
ٱلْحَمْدُ
"All praise be
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
to Allah
அல்லாஹ்வுக்கே
rabbi
رَبِّ
(the) Lord
இறைவனாகிய
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds"
அகிலங்களின்

Transliteration:

Wa taral malaaa'ikata haaaffeena min hawlil 'Arshi yusabbihoona bihamdi Rabbihim wa qudiya bainahum bilhaqqi wa qeelal hamdu lillaahi Rabbil 'aalameen (QS. az-Zumar:75)

English Sahih International:

And you will see the angels surrounding the Throne, exalting [Allah] with praise of their Lord. And it will be judged between them in truth, and it will be said, "[All] praise to Allah, Lord of the worlds." (QS. Az-Zumar, Ayah ௭௫)

Abdul Hameed Baqavi:

(நபியே! அந்நாளில்) மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து, துதி செய்தவண்ணம் "அர்ஷை" சூழ்ந்து நிற்பதை நீங்கள் காண்பீர்கள். அச்சமயம் அவர்களுக்கிடையில் நியாயமாகவே தீர்ப்பளிக்கப்பட்டு, "அகிலத்தார் அனைவரின் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் சொந்தமானது" என்று (அனைவராலும் துதி செய்து) புகழ்ந்து கூறப்படும். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௭௫)

Jan Trust Foundation

இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்; அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். “அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று (யாவராலும்) கூறப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) வானவர்கள் அர்ஷை சுற்றி சூழ்ந்தவர்களாக இருப்பதை நீர் பார்ப்பீர். அவர்கள் தங்கள் இறைவனின் புகழை துதிப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் சத்தியமான முறையில் தீர்ப்பளிக்கப்படும். அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறப்படும்.