Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௬௭

Qur'an Surah Az-Zumar Verse 67

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۖ وَالْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُهٗ يَوْمَ الْقِيٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِيّٰتٌۢ بِيَمِيْنِهٖ ۗسُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ (الزمر : ٣٩)

wamā qadarū
وَمَا قَدَرُوا۟
And not they appraised
அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
ḥaqqa
حَقَّ
(with) true
முறையில்
qadrihi
قَدْرِهِۦ
appraisal
அவனை கண்ணியப்படுத்தவேண்டிய
wal-arḍu
وَٱلْأَرْضُ
while the earth
பூமி
jamīʿan
جَمِيعًا
entirely
அனைத்தும்
qabḍatuhu
قَبْضَتُهُۥ
(will be) in His Grip
அவனது கைப்பிடியில்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
(on the) Day (of) the Resurrection
மறுமை நாளில்
wal-samāwātu
وَٱلسَّمَٰوَٰتُ
and the heavens
இன்னும் வானங்கள்
maṭwiyyātun
مَطْوِيَّٰتٌۢ
(will be) folded
சுருட்டப்பட்டதாக இருக்கும்
biyamīnihi
بِيَمِينِهِۦۚ
in His Right Hand
அவனதுவலக்கையில்
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥ
Glory be to Him!
அவன் மிகப் பரிசுத்தமானவன்
wataʿālā
وَتَعَٰلَىٰ
And High is He
இன்னும் அவன் மிக உயர்ந்தவன்
ʿammā yush'rikūna
عَمَّا يُشْرِكُونَ
above what they associate (with Him)
அவர்கள் இணைவைப்பதை விட்டு

Transliteration:

Wa maa qadarul laaha haqqa qadrihee wal ardu jamee 'an qabdatuhoo Yawmal Qiyaamit wassamaawaatu matwiyyaatum biyameenih; Subhaanahoo wa Ta'aalaa 'amma yushrikoon (QS. az-Zumar:67)

English Sahih International:

They have not appraised Allah with true appraisal, while the earth entirely will be [within] His grip on the Day of Resurrection, and the heavens will be folded in His right hand. Exalted is He and high above what they associate with Him. (QS. Az-Zumar, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்துவதில்லை. பூமி (இவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் அது) முழுவதும் மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அனைத்தும் சுருட்டப்பட்டு அவனுடைய வலது கையில் இருக்கும். இவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக மேலானவன்; அவன் மிக பரிசுத்தமானவன். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௬௭)

Jan Trust Foundation

அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை; இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (-இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறையில் கண்ணியப்படுத்தவில்லை. பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனது கைப்பிடியில் இருக்கும். வானங்கள் (அனைத்தும்) அவனது வலக்கையில் சுருட்டப்பட்டதாக இருக்கும். அவன் மிகப் பரிசுத்தமானவன். அவர்கள் இணை வைப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.