குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௬௩
Qur'an Surah Az-Zumar Verse 63
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَهٗ مَقَالِيْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ اُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ࣖ (الزمر : ٣٩)
- lahu
 - لَّهُۥ
 - For Him
 - அவனுக்கே உரியன
 
- maqālīdu
 - مَقَالِيدُ
 - (are the) keys
 - பொக்கிஷங்களின் சாவிகள்
 
- l-samāwāti
 - ٱلسَّمَٰوَٰتِ
 - (of) the heavens
 - வானங்கள்
 
- wal-arḍi
 - وَٱلْأَرْضِۗ
 - and the earth
 - இன்னும் பூமி(யிலுள்ள)
 
- wa-alladhīna kafarū
 - وَٱلَّذِينَ كَفَرُوا۟
 - And those who disbelieve
 - நிராகரித்தவர்கள்
 
- biāyāti
 - بِـَٔايَٰتِ
 - in (the) Verses
 - அத்தாட்சிகளை
 
- l-lahi
 - ٱللَّهِ
 - (of) Allah
 - அல்லாஹ்வின்
 
- ulāika humu
 - أُو۟لَٰٓئِكَ هُمُ
 - those - they
 - அவர்கள்தான்
 
- l-khāsirūna
 - ٱلْخَٰسِرُونَ
 - (are) the losers
 - (உண்மையான) நஷ்டவாளிகள்
 
Transliteration:
Lahoo maqaaleedus sa maawaati wal ard; wallazeena kafaroo bi ayaatil laahi ulaaa'ika humul khaasiroon(QS. az-Zumar:63)
English Sahih International:
To Him belong the keys of the heavens and the earth. And they who disbelieve in the verses of Allah – it is those who are the losers. (QS. Az-Zumar, Ayah ௬௩)
Abdul Hameed Baqavi:
வானங்கள் பூமியிலுள்ள (பொக்கிஷம் முதலிய)வைகளின் சாவி அவனிடமே இருக்கின்றது. ஆகவே, அல்லாஹ்வின் வசனங்களை எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே! (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௬௩)
Jan Trust Foundation
வானங்களினுடையவும், பூமியினுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன; ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை, நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுக்கே வானங்கள், இன்னும் பூமியி(லுள்ள பொக்கிஷங்களி)ன் சாவிகள் உரியன. அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தவர்கள்தான் உண்மையான நஷ்டவாளிகள்.