Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௬

Qur'an Surah Az-Zumar Verse 6

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَاَنْزَلَ لَكُمْ مِّنَ الْاَنْعَامِ ثَمٰنِيَةَ اَزْوَاجٍ ۗ يَخْلُقُكُمْ فِيْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ خَلْقًا مِّنْۢ بَعْدِ خَلْقٍ فِيْ ظُلُمٰتٍ ثَلٰثٍۗ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُۗ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ فَاَنّٰى تُصْرَفُوْنَ (الزمر : ٣٩)

khalaqakum
خَلَقَكُم
He created you
அவன் உங்களைப் படைத்தான்
min nafsin wāḥidatin
مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ
from a soul single
ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து
thumma jaʿala
ثُمَّ جَعَلَ
Then He made
பிறகு/படைத்தான்
min'hā
مِنْهَا
from it
அதில் இருந்து
zawjahā
زَوْجَهَا
its mate
அதன் ஜோடியை
wa-anzala
وَأَنزَلَ
And He sent down
இன்னும் உருவாக்கினான்
lakum
لَكُم
for you
உங்களுக்காக
mina l-anʿāmi
مِّنَ ٱلْأَنْعَٰمِ
of the cattle
கால்நடைகளில்
thamāniyata
ثَمَٰنِيَةَ
eight
எட்டு
azwājin
أَزْوَٰجٍۚ
kinds
ஜோடிகளை
yakhluqukum
يَخْلُقُكُمْ
He creates you
அவன் உங்களை படைக்கின்றான்
fī buṭūni
فِى بُطُونِ
in (the) wombs
வயிற்றில்
ummahātikum
أُمَّهَٰتِكُمْ
(of) your mothers
உங்கள் தாய்மார்களின்
khalqan
خَلْقًا
creation
ஒரு படைப்பாக
min baʿdi
مِّنۢ بَعْدِ
after after
பின்னர்
khalqin
خَلْقٍ
creation
ஒரு படைப்புக்கு
fī ẓulumātin
فِى ظُلُمَٰتٍ
in darkness[es]
இருள்களில்
thalāthin
ثَلَٰثٍۚ
three
மூன்று
dhālikumu
ذَٰلِكُمُ
That
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
(is) Allah
அல்லாஹ்
rabbukum
رَبُّكُمْ
your Lord
உங்கள் இறைவனாகிய
lahu
لَهُ
for Him
அவனுக்கே
l-mul'ku
ٱلْمُلْكُۖ
(is) the dominion
ஆட்சி அனைத்தும்
لَآ
(There is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā huwa
إِلَّا هُوَۖ
except He
அவனைத் தவிர
fa-annā
فَأَنَّىٰ
Then how
ஆகவே எவ்வாறு
tuṣ'rafūna
تُصْرَفُونَ
are you turning away?
நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்

Transliteration:

Khalaqakum min nafsinw waahidatin summa ja'ala minhaa zawjahaa wa anzala lakum minal-an'aami samaani yata azwaaj; yakhuluqukum fee butooni ummahaatikum khalqam mim ba'di khalqin fee zulumaatin salaas; zaalikumul laahu Rabbukum lahul mulk; laaa ilaaha illaa Huwa fa annaa tusrafoon (QS. az-Zumar:6)

English Sahih International:

He created you from one soul. Then He made from it its mate, and He produced for you from the grazing livestock eight mates. He creates you in the wombs of your mothers, creation after creation, within three darknesses. That is Allah, your Lord; to Him belongs dominion. There is no deity except Him, so how are you averted? (QS. Az-Zumar, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

அவன் உங்கள் அனைவரையும், ஆரம்பத்தில் ஒரே மனிதரிலிருந்து படைத்தான். பின்னர், அவரிலிருந்து அவருடைய மனைவியை அமைத்தான். (அந்த இருவரிலிருந்து, உங்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்திருக்கின்றான்.) அன்றி, (உங்களுடைய நன்மைக்காகவே) எட்டு வகை கால்நடைகளை (ஜோடி ஜோடியாகப்) படைத்திருக்கின்றான். உங்கள் தாய்மார்களின் வயிற்றில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கின்றான். இந்த அல்லாஹ்வே உங்கள் இறைவன். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்? (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௬)

Jan Trust Foundation

அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீஙகள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் உங்களை ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து படைத்தான். பிறகு, அதில் இருந்து அதன் ஜோடியை படைத்தான். அவன் உங்களுக்காக கால்நடைகளில் எட்டு ஜோடிகளை உருவாக்கினான். அவன் உங்களை உங்கள் தாய்மார்களின் வயிற்றில் (-தாயின் வயிறு, கருவறை, நஞ்சுக்கொடி ஆகிய) மூன்று இருள்களில் ஒரு படைப்புக்குப் பின்னர் ஒரு படைப்பாக படைக்கின்றான். அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு யாரும்) அறவே இல்லை. ஆகவே, நீங்கள் எவ்வாறு (அவனை வணங்குவதை விட்டும்) திருப்பப்படுகிறீர்கள்.