குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௫௮
Qur'an Surah Az-Zumar Verse 58
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوْ تَقُوْلَ حِيْنَ تَرَى الْعَذَابَ لَوْ اَنَّ لِيْ كَرَّةً فَاَكُوْنَ مِنَ الْمُحْسِنِيْنَ (الزمر : ٣٩)
- aw taqūla
- أَوْ تَقُولَ
- Or it should say
- அல்லது/அது சொல்லாமல் இருப்பதற்காக
- ḥīna tarā
- حِينَ تَرَى
- when it sees
- அது கண்ணால் பார்க்கும் நேரத்தில்
- l-ʿadhāba
- ٱلْعَذَابَ
- the punishment
- வேதனையை
- law anna lī karratan
- لَوْ أَنَّ لِى كَرَّةً
- "If only I had another chance
- நிச்சயமாக எனக்கு திரும்பி வரமுடிந்தால்
- fa-akūna
- فَأَكُونَ
- then I could be
- நானும் ஆகிவிடுவேன்
- mina l-muḥ'sinīna
- مِنَ ٱلْمُحْسِنِينَ
- among the good-doers"
- நல்லவர்களில்
Transliteration:
Aw taqoola heena taral 'azaaba law anna lee karratan fa akoona minal muhsineen(QS. az-Zumar:58)
English Sahih International:
Or [lest] it say when it sees the punishment, "If only I had another turn so I could be among the doers of good." (QS. Az-Zumar, Ayah ௫௮)
Abdul Hameed Baqavi:
அல்லது (உங்களில் எவரும்) வேதனையைக் (கண்ணால்) கண்ட சமயத்தில் "(இவ்வுலகத்திற்கு) நான் திரும்பிச் செல்ல வழி உண்டா? அவ்வாறாயின் நான் நன்மைகளையே செய்வேன்" என்று கூறாமல் இருப்பதற்காகவும், (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௫௮)
Jan Trust Foundation
அல்லது| வேதனையைக் கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லது அது (-அந்த ஆன்மா) வேதனையை கண்ணால் பார்க்கும் நேரத்தில் நிச்சயமாக எனக்கு (உலகத்திற்கு) திரும்பி வரமுடிந்தால் நானும் நல்லவர்களில் ஆகிவிடுவேன் என்று (எந்த ஓர் ஆன்மாவும்) சொல்லாமல் இருப்பதற்காக (இந்த உலகத்தில் நீங்கள் வாழும் போதே அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)