Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௫௩

Qur'an Surah Az-Zumar Verse 53

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ قُلْ يٰعِبَادِيَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا ۗاِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ (الزمر : ٣٩)

qul
قُلْ
Say
கூறுவீராக!
yāʿibādiya
يَٰعِبَادِىَ
"O My slaves!
என் அடியார்களே
alladhīna asrafū
ٱلَّذِينَ أَسْرَفُوا۟
Those who have transgressed
வரம்புமீறிய(வர்கள்)
ʿalā anfusihim
عَلَىٰٓ أَنفُسِهِمْ
against themselves
தங்கள் மீது
lā taqnaṭū
لَا تَقْنَطُوا۟
(do) not despair
நிராசை ஆகாதீர்கள்
min
مِن
of
இருந்து
raḥmati
رَّحْمَةِ
(the) Mercy
கருணையில்
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah
அல்லாஹ்வின்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
yaghfiru
يَغْفِرُ
forgives
மன்னிப்பான்
l-dhunūba
ٱلذُّنُوبَ
the sins
பாவங்களையும்
jamīʿan
جَمِيعًاۚ
all
எல்லா
innahu huwa
إِنَّهُۥ هُوَ
Indeed He He
நிச்சயமாக அவன்
l-ghafūru
ٱلْغَفُورُ
(is) the Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
the Most Merciful
பெரும் கருணையாளன்

Transliteration:

Qul yaa'ibaadiyal lazeena asrafoo 'alaaa anfusihim laa taqnatoo mirrahmatil laah; innal laaha yaghfiruz zunooba jamee'aa; innahoo Huwal Ghafoorur Raheem (QS. az-Zumar:53)

English Sahih International:

Say, "O My servants who have transgressed against themselves [by sinning], do not despair of the mercy of Allah. Indeed, Allah forgives all sins. Indeed, it is He who is the Forgiving, the Merciful." (QS. Az-Zumar, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௫௩)

Jan Trust Foundation

“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! தங்கள் மீது வரம்புமீறிய என் அடியார்களே! (பாவங்கள் செய்து தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டவர்களே!) அல்லாஹ்வின் கருணையில் இருந்து நிராசை ஆகாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான் (அடியான் திருந்தி, மன்னிப்புக் கேட்டுவிட்டால்). நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.