Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௫௧

Qur'an Surah Az-Zumar Verse 51

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَصَابَهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا ۗوَالَّذِيْنَ ظَلَمُوْا مِنْ هٰٓؤُلَاۤءِ سَيُصِيْبُهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا ۙوَمَا هُمْ بِمُعْجِزِيْنَ (الزمر : ٣٩)

fa-aṣābahum
فَأَصَابَهُمْ
Then struck them
அவர்களை அடைந்தன
sayyiātu
سَيِّـَٔاتُ
(the) evils
தீங்குகள்
mā kasabū
مَا كَسَبُوا۟ۚ
(of) what they earned
அவர்கள் செய்ததின்
wa-alladhīna ẓalamū
وَٱلَّذِينَ ظَلَمُوا۟
And those who have wronged
அநியாயம் செய்தவர்களையும்
min hāulāi
مِنْ هَٰٓؤُلَآءِ
of these
இவர்களில்
sayuṣībuhum
سَيُصِيبُهُمْ
will strike them
விரைவில் அடையும்
sayyiātu
سَيِّـَٔاتُ
(the) evils
தீங்குகள்
mā kasabū
مَا كَسَبُوا۟
(of) what they earned;
அவர்கள் செய்தவற்றின்
wamā hum bimuʿ'jizīna
وَمَا هُم بِمُعْجِزِينَ
and not they will be able to escape
அவர்கள் தப்பிக்க மாட்டார்கள்

Transliteration:

Fa asaabahum saiyi aatu maa kasaboo; wallazeena zalamoo min haaa'ulaaa'i sa yuzeebuhum saiyi aatu maa kasaboo wa maa hum bimu'jizeen (QS. az-Zumar:51)

English Sahih International:

And the evil consequences of what they earned struck them. And those who have wronged of these [people] will be struck [i.e., afflicted] by the evil consequences of what they earned; and they will not cause failure. (QS. Az-Zumar, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயலின் தீய பலன்கள்தாம் அவர்களை வந்தடைந்தன. அன்றி, (யூதர்களாகிய) இவர்களிலும் எவர்கள் அநியாயம் செய்கின்றார்களோ அவர்களை, அவர்கள் செய்யும் (கெட்ட) செயலின் தீய பலன் அதிசீக்கிரத்தில் வந்தடையும். அவர்கள் (இவ்விஷயத்தில் அல்லாஹ்வைத்) தோற்கடித்துவிட முடியாது. (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௫௧)

Jan Trust Foundation

ஆகவே, அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் அவர்களை வந்தடைந்தது; இன்னும், இ(க் கூட்டத்த)வர்களிலும் எவர் அநியாயம் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் விரைந்தே வந்து சேரும் - அன்றியும் அவர்கள் (அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் செய்ததின் தீங்குகள் (-தண்டனைகள்) அவர்களை அடைந்தன. (அவ்வாறே) இவர்களில் அநியாயம் செய்தவர்களையும் அவர்கள் செய்தவற்றின் தீங்குகள் (-தண்டனைகள்) விரைவில் அடையும். அவர்கள் (நம்மை விட்டும்) தப்பிக்க மாட்டார்கள்.