Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௪௭

Qur'an Surah Az-Zumar Verse 47

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ اَنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا مَا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ مِنْ سُوْۤءِ الْعَذَابِ يَوْمَ الْقِيٰمَةِۗ وَبَدَا لَهُمْ مِّنَ اللّٰهِ مَا لَمْ يَكُوْنُوْا يَحْتَسِبُوْنَ (الزمر : ٣٩)

walaw anna
وَلَوْ أَنَّ
And if And if
இருந்தால்/நிச்சயமாக
lilladhīna ẓalamū
لِلَّذِينَ ظَلَمُوا۟
those who did wrong
அநியாயம் செய்தவர்களுக்கு
mā fī l-arḍi
مَا فِى ٱلْأَرْضِ
(had) whatever (is) in the earth
பூமியில் உள்ளவை
jamīʿan
جَمِيعًا
all
அனைத்தும்
wamith'lahu
وَمِثْلَهُۥ
and (the) like of it
அது போல் இன்னமும்
maʿahu
مَعَهُۥ
with it
அதனுடன்
la-if'tadaw
لَٱفْتَدَوْا۟
they would ransom
அவர்கள் பிணையாகக் கொடுத்து இருப்பார்கள்
bihi
بِهِۦ
with it
அதை
min sūi
مِن سُوٓءِ
from (the) evil
இருந்து/கெட்ட
l-ʿadhābi
ٱلْعَذَابِ
(of) the punishment
வேதனையில்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
(on the) Day (of) the Resurrection
மறுமை நாளில்
wabadā
وَبَدَا
And (will) appear
இன்னும் வெளிப்படும்
lahum
لَهُم
to them
அவர்களுக்கு முன்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்விடம்
mā lam yakūnū yaḥtasibūna
مَا لَمْ يَكُونُوا۟ يَحْتَسِبُونَ
what not they had taken into account
அவர்கள் எண்ணிப் பார்த்திருக்காத விஷயங்கள் எல்லாம்

Transliteration:

Wa law anna lillazeena zalamoo maa fil ardi jamee'anw wa mislahoo ma'ahoo laftadaw bihee min sooo'il azaabi Yawmal Qiyaamah; wa badaa lahum minal laahi maa lam yakkoonoo yahtasiboon (QS. az-Zumar:47)

English Sahih International:

And if those who did wrong had all that is in the earth entirely and the like of it with it, they would [attempt to] ransom themselves thereby from the worst of the punishment on the Day of Resurrection. And there will appear to them from Allah that which they had not taken into account. (QS. Az-Zumar, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அநியாயம் செய்தவர்களுக்குப் பூமியிலுள்ள அனைத்துமே சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் இருந்தபோதிலும் மறுமையின் கொடிய வேதனையிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள அவை அனைத்தையுமே பரிகாரமாகக் கொடுத்துவிடவே நிச்சயமாக அவர்கள் விரும்புவார்கள். (எனினும், அது ஆகக்கூடியதல்ல) அன்றி, அவர்கள் எதிர்பார்க்காததெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளியாகும். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௪௭)

Jan Trust Foundation

மேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ளயாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாம நாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள்; மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு பூமியில் உள்ள அனைத்தும் அதனுடன் அது போல் இன்னமும் இருந்தால் மறுமை நாளில், கெட்ட வேதனையில் இருந்து (தப்பித்துக்கொள்ள) அதை அவர்கள் பிணையாகக் கொடுத்து (தங்களை விடுவித்து) இருப்பார்கள். இன்னும், அவர்கள் எண்ணிப் பார்த்திருக்காத விஷயங்கள் எல்லாம் அல்லாஹ்விடம் (மறுமை நாளில்) அவர்களுக்கு முன் வெளிப்படும்.