குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௪௩
Qur'an Surah Az-Zumar Verse 43
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ شُفَعَاۤءَۗ قُلْ اَوَلَوْ كَانُوْا لَا يَمْلِكُوْنَ شَيْـًٔا وَّلَا يَعْقِلُوْنَ (الزمر : ٣٩)
- ami ittakhadhū
- أَمِ ٱتَّخَذُوا۟
- Or have they taken
- எடுத்துக் கொண்டார்களா?
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- besides besides Allah
- அல்லாஹ்வையன்றி
- shufaʿāa
- شُفَعَآءَۚ
- intercessors?
- பரிந்துரை செய்பவர்களாக
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக!
- awalaw kānū
- أَوَلَوْ كَانُوا۟
- "Even though they were
- அவர்கள் இருந்தாலுமா?
- lā yamlikūna
- لَا يَمْلِكُونَ
- not possessing
- சக்தியற்றவர்களாக(வும்)
- shayan
- شَيْـًٔا
- anything
- எதற்கும்
- walā yaʿqilūna
- وَلَا يَعْقِلُونَ
- and not they understand?"
- சிந்தித்து புரியாதவர்களாகவும்
Transliteration:
Amit takhazoo min doonillaahi shufa'aaa'; qul awalaw kaanoo laa yamlikoona shai'aw wa laa ya'qiloon(QS. az-Zumar:43)
English Sahih International:
Or have they taken other than Allah as intercessors? Say, "Even though they do not possess [power over] anything, nor do they reason?" (QS. Az-Zumar, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
இவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளை(த் தங்களுக்குச்) சிபாரிசு செய்பவர்கள் என்று (எண்ணி) எடுத்துக் கொண்டிருக் கின்றனரா? "அவைகளுக்கு யாதொரு சக்தியும், யாதொன்றை அறியக்கூடிய உணர்ச்சியும் இல்லாதிருந்தாலுமா (அவைகளை நீங்கள் உங்களுக்குச் சிபாரிசு செய்பவைகள் என்று எடுத்துக் கொள்வீர்கள்)?" என்று (நபியே!) நீங்கள் அவர்களைக் கேளுங்கள். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௪௩)
Jan Trust Foundation
அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! “அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?” (என்று.)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வை அன்றி (பிற தெய்வங்களை வணங்குபவர்கள் அல்லாஹ்விடம் தங்களுக்கு) பரிந்துரை செய்பவர்களாக (அவற்றை) எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! அவர்கள் (-அந்த தெய்வங்கள்) எதற்கும் (-தங்களுக்கு எதையும் செய்துகொள்வதற்கு) சக்தியற்றவர்களாகவும் சிந்தித்து புரியாதவர்களாகவும் இருந்தாலுமா?