Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௪௨

Qur'an Surah Az-Zumar Verse 42

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَللّٰهُ يَتَوَفَّى الْاَنْفُسَ حِيْنَ مَوْتِهَا وَالَّتِيْ لَمْ تَمُتْ فِيْ مَنَامِهَا ۚ فَيُمْسِكُ الَّتِي قَضٰى عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ الْاُخْرٰىٓ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ (الزمر : ٣٩)

al-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்தான்
yatawaffā
يَتَوَفَّى
takes
கைப்பற்றுகின்றான்
l-anfusa
ٱلْأَنفُسَ
the souls
உயிர்களை
ḥīna
حِينَ
(at the) time
நேரத்தில்
mawtihā
مَوْتِهَا
(of) their death
அவை மரணிக்கும்
wa-allatī lam tamut
وَٱلَّتِى لَمْ تَمُتْ
and the one who (does) not die
இன்னும் இறந்து போகாத உயிர்களையும்
fī manāmihā
فِى مَنَامِهَاۖ
in their sleep
அவற்றின் தூக்கத்தில்
fayum'siku
فَيُمْسِكُ
Then He keeps
அவன் தடுத்துக் கொள்கிறான்
allatī
ٱلَّتِى
the one whom
எதை
qaḍā
قَضَىٰ
He has decreed
விதித்து விட்டான்
ʿalayhā
عَلَيْهَا
for them
அதன் மீது
l-mawta
ٱلْمَوْتَ
the death
மரணத்தை
wayur'silu
وَيُرْسِلُ
and sends
இன்னும் விட்டு வைக்கிறான்
l-ukh'rā
ٱلْأُخْرَىٰٓ
the others
மற்றொன்றை
ilā ajalin
إِلَىٰٓ أَجَلٍ
for a term
தவணை வரை
musamman
مُّسَمًّىۚ
specified
குறிப்பிட்ட
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில்
laāyātin
لَءَايَٰتٍ
surely (are) signs
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
for a people
மக்களுக்கு
yatafakkarūna
يَتَفَكَّرُونَ
who ponder
சிந்திக்கின்றார்கள்

Transliteration:

Allaahu yatawaffal anfusa heena mawtihaa wallatee lam tamut fee manaamihaa fa yumsikul latee qadaa 'alaihal mawta wa yursilul ukhraaa ilaaa ajalim musammaa; inna fee zaalika la Aayaatil liqawmai yatafakkarron (QS. az-Zumar:42)

English Sahih International:

Allah takes the souls at the time of their death, and those that do not die [He takes] during their sleep. Then He keeps those for which He has decreed death and releases the others for a specified term. Indeed in that are signs for a people who give thought. (QS. Az-Zumar, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

மனிதர்கள் இறக்கும்பொழுதும், இறக்காமல் நித்திரையில் இருக்கும்பொழுதும் அல்லாஹ்வே அவர்களுடைய உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர், எவர்கள் மீது மரணம் விதிக்கப்பட்டதோ அவர்களுடைய உயிரை(த் தன்னிடமே) நிறுத்திக் கொள்கிறான். மற்றவர்க(ளின் உயிர்க)ளை, குறிப்பிடப்பட்ட காலம் வரையில் வாழ அவன் அவர்களிடமே அனுப்பி விடுகின்றான். சிந்திக்கக் கூடிய மக்களுக்கு, நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௪௨)

Jan Trust Foundation

அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்தான் உயிர்களை அவை மரணிக்கும் நேரத்தில் கைப்பற்றுகின்றான். இன்னும் (அவ்வாறே இதுவரை) இறந்து போகாத உயிர்களையும் அவற்றின் தூக்கத்தில் அவன் (உயிர்) கைப்பற்றுகின்றான். (இறந்தவர்களின் ஆன்மாக்களும் உயிருள்ளவர்களின் ஆன்மாக்களும் தூக்கத்தில் சந்திக்கின்றன. பிறகு அவை பிரியும் போது) மரணத்தை (முன்பே) எதன் மீது விதித்து விட்டானோ அதை (-முன்பே மரணித்துவிட்டதை மீண்டும் உலகிற்கு வர முடியாதவாறு) அவன் தடுத்துக் கொள்கிறான். மற்றொன்றை (-மரணித்திருக்காத, உலகில் வாழ்ந்து வருகின்ற ஆன்மாவை) அவன் ஒரு குறிப்பிட்ட தவணை வரை (-அதனுடைய மரண நேரம் வரை இவ்வுலகில் உயிர்வாழ) விட்டு வைக்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.