Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௪௧

Qur'an Surah Az-Zumar Verse 41

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّآ اَنْزَلْنَا عَلَيْكَ الْكِتٰبَ لِلنَّاسِ بِالْحَقِّۚ فَمَنِ اهْتَدٰى فَلِنَفْسِهٖۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚوَمَآ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ ࣖ (الزمر : ٣٩)

innā
إِنَّآ
Indeed We
நிச்சயமாக நாம்
anzalnā
أَنزَلْنَا
We revealed
இறக்கினோம்
ʿalayka
عَلَيْكَ
to you
உம்மீது
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
இந்த வேதத்தை
lilnnāsi
لِلنَّاسِ
for [the] mankind
மக்களுக்காக
bil-ḥaqi
بِٱلْحَقِّۖ
in truth
சத்தியத்துடன்
famani
فَمَنِ
So whoever
யார்
ih'tadā
ٱهْتَدَىٰ
accepts guidance
நேர்வழி செல்கிறாரோ
falinafsihi
فَلِنَفْسِهِۦۖ
then (it is) for his soul;
தனது நன்மைக்காகத்தான்
waman ḍalla
وَمَن ضَلَّ
and whoever goes astray
யார்/வழிகெடுகிறாரோ
fa-innamā yaḍillu
فَإِنَّمَا يَضِلُّ
then only he strays
வழிகெடுவதெல்லாம்
ʿalayhā
عَلَيْهَاۖ
against his (soul)
அதற்கு பாதகமாகத்தான்
wamā anta
وَمَآ أَنتَ
And not you
நீர் இல்லை
ʿalayhim
عَلَيْهِم
(are) over them
அவர்கள் மீது
biwakīlin
بِوَكِيلٍ
a manager
கண்காணிப்பவராக

Transliteration:

Innaa anzalnaa 'alaikal Kitaaba linnaasi bilhaqq; famanih tadaa falinafsihee wa man dalla fa innamaa yadillu 'alaihaa wa maaa anta 'alaihim biwakeel (QS. az-Zumar:41)

English Sahih International:

Indeed, We sent down to you the Book for the people in truth. So whoever is guided – it is for [the benefit of] his soul; and whoever goes astray only goes astray to its detriment. And you are not a manager [i.e., authority] over them. (QS. Az-Zumar, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக நாம் மனிதர்களின் நன்மைக்காகவே முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உங்கள்மீது இறக்கி வைத்தோம். ஆகவே, எவன் இதனைப் பின்பற்றி நடக்கின்றானோ, அது அவனுக்கே நன்று; எவன் (இதிலிருந்து) வழிதவறி விடுகின்றானோ அவன், வழி தவறியதன் பலன் அவனுக்கே தீங்காக முடியும். (நபியே!) நீங்கள் அவர்கள் மீது பொறுப்பாளர் அல்ல. (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௪௧)

Jan Trust Foundation

நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது); எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் மக்களுக்காக உம்மீது இந்த வேதத்தை சத்தியத்துடன் இறக்கினோம். யார் நேர்வழி செல்கிறாரோ அவர் தனது (ஆன்மாவின்) நன்மைக்காகத்தான் செல்கிறார். யார் வழிகெடுகிறாரோ அவர் வழி கெடுவதெல்லாம் அதற்கு (-தனது ஆன்மாவிற்கு) பாதகமாகத்தான். (நபியே!) நீர் அவர்கள் மீது கண்காணிப்பவராக (அவர்களை பாதுகாப்பவராக) இல்லை.