Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௪

Qur'an Surah Az-Zumar Verse 4

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَوْ اَرَادَ اللّٰهُ اَنْ يَّتَّخِذَ وَلَدًا لَّاصْطَفٰى مِمَّا يَخْلُقُ مَا يَشَاۤءُ ۙ سُبْحٰنَهٗ ۗهُوَ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ (الزمر : ٣٩)

law arāda
لَّوْ أَرَادَ
If Allah (had) intended
நாடினால்
l-lahu
ٱللَّهُ
Allah (had) intended
அல்லாஹ்
an yattakhidha
أَن يَتَّخِذَ
to take
எடுத்துக்கொள்ள
waladan
وَلَدًا
a son
ஒரு குழந்தையை
la-iṣ'ṭafā
لَّٱصْطَفَىٰ
surely, He (could) have chosen
தேர்ந்தெடுத்து இருப்பான்
mimmā yakhluqu
مِمَّا يَخْلُقُ
from what He creates
தான் படைத்தவற்றில்
mā yashāu
مَا يَشَآءُۚ
whatever He willed
தான் நாடுவதை
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥۖ
Glory be to Him!
அவன் மகா பரிசுத்தமானவன்
huwa
هُوَ
He
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
(is) Allah
அல்லாஹ்
l-wāḥidu
ٱلْوَٰحِدُ
the One
ஒருவன்
l-qahāru
ٱلْقَهَّارُ
the Irresistible
அடக்கி ஆளுபவன்

Transliteration:

Law araadal laahu aiyattakhiza waladal lastafaa mimmaa yakhluqu maa yashaaa'; Subhaanahoo Huwal laahul Waahidul Qahhaar (QS. az-Zumar:4)

English Sahih International:

If Allah had intended to take a son, He could have chosen from what He creates whatever He willed. Exalted is He; He is Allah, the One, the Prevailing. (QS. Az-Zumar, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் சந்ததி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பி இருந்தால், அவன் படைத்தவைகளில் அவன் விரும்பிய (மேலான)வைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான். (எனினும், இத்தகைய விஷயங்களிலிருந்து) அவன் மிக பரிசுத்தமானவன். அல்லாஹ் ஒரே ஒருவன்தான். (அவனுக்குச் சந்ததி இல்லை. அனைவரையும்) அவன் அடக்கி ஆளுகிறான். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௪)

Jan Trust Foundation

அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பியவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் ஒரு குழந்தையை எடுத்துக்கொள்ள நாடினால் அவன் தான் படைத்தவற்றில் இருந்து தான் நாடுவதை தேர்ந்தெடுத்து இருப்பான். அவன் மகா பரிசுத்தமானவன். அவன்தான் ஒருவனும் அடக்கி ஆளுபவனுமாகிய அல்லாஹ் ஆவான்.