Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௩௫

Qur'an Surah Az-Zumar Verse 35

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِيُكَفِّرَ اللّٰهُ عَنْهُمْ اَسْوَاَ الَّذِيْ عَمِلُوْا وَيَجْزِيَهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ الَّذِيْ كَانُوْا يَعْمَلُوْنَ (الزمر : ٣٩)

liyukaffira
لِيُكَفِّرَ
That Allah will remove
அகற்றி விடுவதற்காக
l-lahu
ٱللَّهُ
That Allah will remove
அல்லாஹ்
ʿanhum
عَنْهُمْ
from them
அவர்களை விட்டும்
aswa-a
أَسْوَأَ
(the) worst
கெட்டசெயல்களை
alladhī ʿamilū
ٱلَّذِى عَمِلُوا۟
(of) what they did
அவர்கள் செய்தவற்றில்
wayajziyahum
وَيَجْزِيَهُمْ
and reward them
இன்னும் அவர்களுக்கு அவன் கொடுப்பதற்காக
ajrahum
أَجْرَهُم
their due
அவர்களின் கூலியை
bi-aḥsani
بِأَحْسَنِ
for (the) best
மிக அழகிய முறையில்
alladhī kānū yaʿmalūna
ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ
(of) what they used (to) do
அவர்கள் செய்து வந்ததை விட

Transliteration:

Liyukaffiral laahu 'anhum aswa allazee 'amiloo wa yajziyahum ajrahum bi ahsanil lazee kaano ya'maloon (QS. az-Zumar:35)

English Sahih International:

That Allah may remove from them the worst of what they did and reward them their due for the best of what they used to do. (QS. Az-Zumar, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

அவர்கள் செய்த குற்றங்களையும் அல்லாஹ் மன்னித்து, அவர்களுடைய கூலியை அவர்கள் செய்ததைவிட மிக அழகான விதத்தில் கொடுப்பான். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௩௫)

Jan Trust Foundation

அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி, அவர்களுடைய (நற்காரியங்களுக்குரிய) கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக் கொடுப்பான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் செய்தவற்றில் கெட்டசெயல்களை அவர்களை விட்டும் அல்லாஹ் அகற்றி (-மன்னித்து) விடுவதற்காகவும் அவர்களின் கூலியை அவர்கள் செய்து வந்ததை விட மிக அழகிய முறையில் அவர்களுக்கு அவன் கொடுப்பதற்காகவும் (இந்த நல்லவர்களுக்கு இவ்வாறு கூலி கொடுத்தான்).