Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௩

Qur'an Surah Az-Zumar Verse 3

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَا لِلّٰهِ الدِّيْنُ الْخَالِصُ ۗوَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءَۘ مَا نَعْبُدُهُمْ اِلَّا لِيُقَرِّبُوْنَآ اِلَى اللّٰهِ زُلْفٰىۗ اِنَّ اللّٰهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِيْ مَا هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ ەۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِيْ مَنْ هُوَ كٰذِبٌ كَفَّارٌ (الزمر : ٣٩)

alā
أَلَا
Unquestionably
அறிந்துகொள்ளுங்கள்!
lillahi
لِلَّهِ
for Allah
அல்லாஹ்விற்கே
l-dīnu
ٱلدِّينُ
(is) the religion
வழிபாடுகள்
l-khāliṣu
ٱلْخَالِصُۚ
the pure
பரிசுத்தமான(து)
wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
take
எடுத்துக் கொண்டார்கள்
min dūnihi
مِن دُونِهِۦٓ
besides Him besides Him
அவனையன்றி
awliyāa
أَوْلِيَآءَ
protectors
தெய்வங்களை
مَا
"Not
நாங்கள்வணங்குவதில்லை
naʿbuduhum
نَعْبُدُهُمْ
we worship them
நாங்கள்வணங்குவதில்லை அவர்களை
illā
إِلَّا
except
தவிர
liyuqarribūnā
لِيُقَرِّبُونَآ
that they may bring us near
அவர்கள் எங்களை நெருக்கமாக்குவதற்காக
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
to Allah
அல்லாஹ்வின் பக்கம்
zul'fā
زُلْفَىٰٓ
(in) position"
அந்தஸ்தால்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
yaḥkumu
يَحْكُمُ
will judge
தீர்ப்பளிப்பான்
baynahum
بَيْنَهُمْ
between them
அவர்களுக்கு மத்தியில்
fī mā hum fīhi
فِى مَا هُمْ فِيهِ
in what they [in it]
அவர்கள் தர்க்கிப்பவற்றில்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
(does) not guide
நேர்வழி செலுத்த மாட்டான்
man
مَنْ
(one) who
எவர்
huwa
هُوَ
[he]
அவர்
kādhibun
كَٰذِبٌ
(is) a liar
பொய்யர்களை
kaffārun
كَفَّارٌ
and a disbeliever
நிராகரிப்பாளர்களை

Transliteration:

Alaa lillaahid deenul khaalis; wallazeenat takhazoo min dooniheee awliyaaa'a maa na'buduhum illaa liyuqar riboonaaa ilal laahi zulfaa; innal laaha yahkumu baina hum fee maa hum feehi yakhtalifoon; innal laaha laa yahdee man huwa kaazibun kaffaar (QS. az-Zumar:3)

English Sahih International:

Unquestionably, for Allah is the pure religion. And those who take protectors besides Him [say], "We only worship them that they may bring us nearer to Allah in position." Indeed, Allah will judge between them concerning that over which they differ. Indeed, Allah does not guide he who is a liar and [confirmed] disbeliever. (QS. Az-Zumar, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளை, தங்களுக்குப் பாதுகாவலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், "அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவைகளை வணங்கவில்லை" (என்று கூறுகின்றனர்). அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி, அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்துவதில்லை. (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௩)

Jan Trust Foundation

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அறிந்து கொள்ளுங்கள்! பரிசுத்தமான வழிபாடுகள் அல்லாஹ்விற்கே உரியன. அவனை அன்றி (பல) தெய்வங்களை (தங்களுக்கு) எடுத்துக் கொண்டவர்கள் கூறுகின்றனர்: “நாங்கள் அவர்களை வணங்குவதில்லை, அல்லாஹ்வின் பக்கம் அந்தஸ்தால் எங்களை அவர்கள் நெருக்கமாக்குவதற்காகவே தவிர.” நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் தர்க்கிப்பவற்றில் தீர்ப்பளிப்பான். பொய்யர்களை நிராகரிப்பாளர்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்.