Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௨௯

Qur'an Surah Az-Zumar Verse 29

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ضَرَبَ اللّٰهُ مَثَلًا رَّجُلًا فِيْهِ شُرَكَاۤءُ مُتَشَاكِسُوْنَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ هَلْ يَسْتَوِيٰنِ مَثَلًا ۗ اَلْحَمْدُ لِلّٰهِ ۗبَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ (الزمر : ٣٩)

ḍaraba
ضَرَبَ
Allah sets forth
விவரிக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
Allah sets forth
அல்லாஹ்
mathalan
مَثَلًا
an example
ஓர் உதாரணத்தை
rajulan
رَّجُلًا
a man
ஒரு மனிதன்
fīhi
فِيهِ
belonging to
அவன் விஷயத்தில்
shurakāu
شُرَكَآءُ
partners
பங்குதாரர்கள்
mutashākisūna
مُتَشَٰكِسُونَ
quarreling
பிணங்கிக் கொள்கின்றவர்கள்
warajulan
وَرَجُلًا
and a man
இன்னும் ஒரு மனிதர்
salaman
سَلَمًا
(belonging) exclusively
சரியான(வர்)
lirajulin
لِّرَجُلٍ
to one man
ஒரு மனிதருக்கு
hal yastawiyāni
هَلْ يَسْتَوِيَانِ
are they both equal
இந்த இரண்டு நபர்களும் சமமாவார்களா?
mathalan
مَثَلًاۚ
(in) comparison?
தன்மையால்
l-ḥamdu
ٱلْحَمْدُ
All praise
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِۚ
(be) to Allah!
அல்லாஹ்விற்கே
bal
بَلْ
Nay
மாறாக
aktharuhum
أَكْثَرُهُمْ
most of them
அவர்களில் அதிகமானவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(do) not know
அறியமாட்டார்கள்

Transliteration:

Darabal laahu masalar rajulan feehi shurakaaa'u mutashaakisoona wa rajulan salamal lirajulin hal tastawi yaani masalaa; alhamdu lillaah; bal aksaruhum laa ya'lamoon (QS. az-Zumar:29)

English Sahih International:

Allah presents an example: a man [i.e., slave] owned by quarreling partners and another belonging exclusively to one man – are they equal in comparison? Praise be to Allah! But most of them do not know. (QS. Az-Zumar, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான்: ஒரு மனிதன் பல எஜமான்களுக்கு (அடிமையாக) இருந்து (அவர்கள் ஒவ்வொருவரும், தனக்கே அவன் வேலை செய்யவேண்டுமென்று) இழுபறி செய்துகொள்கின்றனர். மற்றொரு மனிதன் (அடிமைதான்; ஆனால், அவன்) ஒருவனுக்கு மட்டும் சொந்தமானவன். இவ்விருவரும் சமமாவார்களா? (ஆகமாட்டார் என்பதை அறிந்து கொள்வீர்கள். இதற்காக) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே (என்று துதி செய்வோமாக! இவ்வாறே பல தெய்வங்களை வணங்கும் ஒருவன், ஒரே அல்லாஹ்வை வணங்குபவனுக்கு சமமாக மாட்டான். எனினும்,) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை கூட) அறிந்து கொள்ளவில்லை. (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௨௯)

Jan Trust Foundation

அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்| ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கின்றான். ஒரு மனிதன் அவன் விஷயத்தில் (தங்களுக்குள்) பிணங்கிக் கொள்கின்ற பல பங்குதாரர்கள் இருக்கின்றனர். (இது இணைவைப்பவனின் உதாரணமாகும்.) (வேறு) ஒரு சரியான மனிதர், அவர் ஒரு மனிதருக்கு மட்டும் உரிமையானவர். (இவர் நம்பிக்கையாளருக்கு ஒப்பானவர்.) இந்த இரண்டு நபர்களும் தன்மையால் சமமாவார்களா? எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே. மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.