Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௧௭

Qur'an Surah Az-Zumar Verse 17

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ اجْتَنَبُوا الطَّاغُوْتَ اَنْ يَّعْبُدُوْهَا وَاَنَابُوْٓا اِلَى اللّٰهِ لَهُمُ الْبُشْرٰىۚ فَبَشِّرْ عِبَادِۙ (الزمر : ٣٩)

wa-alladhīna ij'tanabū
وَٱلَّذِينَ ٱجْتَنَبُوا۟
And those who avoid
எவர்கள்/ விலகினார்கள்
l-ṭāghūta
ٱلطَّٰغُوتَ
the false gods
தாகூத்துகளை
an yaʿbudūhā
أَن يَعْبُدُوهَا
lest they worship them
இவர்களை வணங்குவதை விட்டு
wa-anābū
وَأَنَابُوٓا۟
and turn
இன்னும் திரும்பினார்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
to Allah
அல்லாஹ்வின் பக்கம்
lahumu
لَهُمُ
for them
அவர்களுக்கு
l-bush'rā
ٱلْبُشْرَىٰۚ
(is) the glad tiding
நற்செய்தி
fabashir
فَبَشِّرْ
So give glad tidings
ஆகவே, நற்செய்தி சொல்லுங்கள்
ʿibādi
عِبَادِ
(to) My slaves
என் அடியார்களுக்கு

Transliteration:

Wallazeenaj tanabut Taaghoota ai ya'budoohaa wa anaabooo ilal laahi lahumul bushraa; fabashshir 'ibaad (QS. az-Zumar:17)

English Sahih International:

But those who have avoided Taghut, lest they worship it, and turned back to Allah – for them are good tidings. So give good tidings to My servants (QS. Az-Zumar, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(ஆகவே,) "எவர்கள் ஷைத்தான்களை வணங்காது, அவைகளிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வையே நோக்கு கின்றார்களோ, அவர்களுக்குத்தான் நற்செய்தி. ஆகவே, (நபியே!) நீங்கள் நம்முடைய (நல்ல) அடியார்களுக்கு நற்செய்தி கூறுங்கள்." (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௧௭)

Jan Trust Foundation

எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர்கள் தாகூத்துகளை (-ஷைத்தான்கள், சிலைகள், தீயவர்கள் ஆகிய) இவர்களை வணங்குவதை விட்டு விலகி, அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்களோ அவர்களுக்குத்தான் (சொர்க்கத்தின்) நற்செய்தி உண்டு. ஆகவே, என் அடியார்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள்.