Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௧௫

Qur'an Surah Az-Zumar Verse 15

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاعْبُدُوْا مَا شِئْتُمْ مِّنْ دُوْنِهٖۗ قُلْ اِنَّ الْخٰسِرِيْنَ الَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ وَاَهْلِيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِۗ اَلَا ذٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ (الزمر : ٣٩)

fa-uʿ'budū
فَٱعْبُدُوا۟
So worship
வணங்குங்கள்
mā shi'tum
مَا شِئْتُم
what you will
நீங்கள் நாடியவர்களை
min dūnihi
مِّن دُونِهِۦۗ
besides Him" besides Him"
அவனையன்றி
qul
قُلْ
Say
கூறுவீராக!
inna
إِنَّ
"Indeed
நிச்சயமாக
l-khāsirīna
ٱلْخَٰسِرِينَ
the losers
நஷ்டவாளிகள்
alladhīna khasirū
ٱلَّذِينَ خَسِرُوٓا۟
(are) those who (will) lose
நஷ்டமிழைத்தவர்கள்தான்
anfusahum
أَنفُسَهُمْ
themselves
தங்களுக்கு(ம்)
wa-ahlīhim
وَأَهْلِيهِمْ
and their families
தங்கள் குடும்பத்தாருக்கும்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
(on the) Day (of) the Resurrection
மறுமையில்
alā
أَلَا
Unquestionably
அறிந்துகொள்ளுங்கள்!
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
that it
இதுதான்
l-khus'rānu
ٱلْخُسْرَانُ
(is) the loss
நஷ்டமாகும்
l-mubīnu
ٱلْمُبِينُ
the clear"
மிகத்தெளிவான

Transliteration:

Fa'budoo maa shi'tum min doonih; qul innal khaasireenal lazeena khasirooo anfusahum wa ahleehim yawmal qiyaamah; alaa zaalika huwal khusraanul mubeen (QS. az-Zumar:15)

English Sahih International:

So worship what you will besides Him." Say, "Indeed, the losers are the ones who will lose themselves and their families on the Day of Resurrection. Unquestionably, that is the manifest loss." (QS. Az-Zumar, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

"அல்லாஹ்வையன்றி நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்." (அதற்குரிய தண்டனையை அடைவீர்கள். நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மெய்யாகவே நஷ்டமடைந்தவர்கள் யாரென்றால், (இறைவனுக்கு மாறுசெய்து) தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மறுமையில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள்தாம்." இது தெளிவான நஷ்டமல்லவா? (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௧௫)

Jan Trust Foundation

“ஆனால், நீங்கள் அவனையன்றி, நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்.” கூறுவீராக| “தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கியாம நாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் நஷ்டவாளிகள்; அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனை அன்றி நீங்கள் நாடியவர்களை வணங்குங்கள். (நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நஷ்டவாளிகள் (யாரென்றால்) தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மறுமையில் நஷ்டமிழைத்தவர்கள் தான். அறிந்து கொள்ளுங்கள் இதுதான் மிகத்தெளிவான நஷ்டமாகும்.